என்னது.. கர்ப்பிணியின் வயிற்றையே கிழித்து குழந்தை கடத்தலா.. த்ரில் திரைப்படம் "ஜோதி" ஆஹா ஓடிடியில்

சென்னை: உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜோதி திரைப்படத்தை தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா குரூப், இளங்கோ குமரவேல், மைம் கோபி , நான் சரவணன், ராஜா சேதுபதி, பூஜிதா தேவராஜ் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை AV கிருஷ்ண பரமாத்மா இயக்க, SP ராஜா சேதுபதி தயாரித்துள்ளார்.

Director AV Krishna Paramatmas jothi movie available on aha ott platform

ஜோதி திரைப்படம்: கிராம மற்றும் நகர்ப்புறங்களில் கண்ணுக்கு தெரியாத அளவில் போகிற அளவில் நடக்கும் மருத்துவ மாஃபியா கதையை இத்திட்டம் அழகாக வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. ஒரு கர்ப்பிணி பெண்ணின் அறச்சீற்றமே, சஸ்பென்ஸ் கொடுக்கும் காட்சிகளால் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள ஜோதி படத்தில் ஷீலா ராஜ்குமார் அருள் ஜோதியாக கர்ப்பிணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

உண்மை சம்பவம்: குழந்தை கடத்தலை மையமாக வைத்து க்ரைம் திரில்லர் ஜெனரில் உருவான இந்த படத்தில், நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை அறுத்து குழந்தையை கடத்திச் சென்ற ஒரு குடும்பலை தேடி அலையும் காவல்துறை அதிகாரியாக வெற்றி நடித்துள்ளார்.கொடூரமான முறையில் குழந்தையை கடத்த என்ன காரணம்... இதற்கான பின்ன என்பதை இயக்குநர் திகிலூட்டும் வகையில் கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார்.

கிளைமாக்ஸில் செம ட்விஸ்ட்: பலர் மீது சந்தேகம், அடுக்கடுக்கான மர்ம முடிச்சுகள் என கதை சுவாரசியமாக செல்கிறது. குற்றவாளிகளை நெருங்கிவிட்டது போல தோன்றினாலும், குற்றவாளிகளாக பிடிக்க முடியாமல் திணறுகிறது போலீஸ். குழந்தை கடத்தலுக்கு பின்னால் ஒரு கூட்டம் வியாபாரம் நடத்தும் விவகாரம் அம்பலமாகிறது. ஆனாலும் வயிற்றை கிழித்து குழந்தையை திருடும் பயங்கரம் நடந்தது எப்படி என்பதுதான் கிளைமாக்ஸ் செம ட்விஸ்ட்.

ஆஹா ஓடிடியில்: செசி ஜெயா ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ள இத்திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இத்திரைப்படம் ஒரு வருடத்திற்கு பிறகு ஆஹா ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகி உள்ளது. திரில்லர் ஜனர் மீது விருப்பம் கொண்டவர்கள் இந்த படத்தை பார்த்து மகிழலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X