Por OTT: இருவரின் ஈகோ யுத்தம்.. இன்று ஓடிடியில் வெளியாகும் போர்!

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களான காளிதாஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் போர். பிஜோ நம்பியார் இயக்கிய இத்திரைப்படம் மார்ச் 1ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இத்திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாக உள்ளது.

டேவிட், சோலோ, ஸ்வீட் காரம் காஃபி உள்ளிட்ட படங்களை இயக்கிய பிஜாய் நம்பியார் இந்த முறை இந்த காலத்து கல்லூரி மாணவர்களுக்குள் இடையே நடக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து எடுத்த திரைப்படம் தான் போர். அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இருவருக்கும் இடையே சிறுவயதில் ஏற்படும் கசப்பான சம்பவம், அவர்களின் கல்லூரி வாழ்க்கையில் தொடர்ந்து களேபரம் ஆகிறது. அப்படி இருவருக்குள்ளும் என்ன சண்டை, கடைசியில் என்ன ஆனது என்பது தான் போர் திரைப்படத்தின் கதை?

Director Bejoy Nambiar Por streaming on netflix today

போர் திரைப்படம்: இந்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும், நடிப்பில் அதிகம் கவனம் பெறுவது பானு மற்றும் சஞ்சனா நடராஜன் தான். போராட்டம், காதல், நட்பு என சமகால பெண்களை நடிப்பில் கொண்டு வருகிறார்கள். பல படங்களில் தனது குரலுக்காகவே அறியப்பட்ட அர்ஜுன் தாஸின் குரல் இந்தப் படத்தில் எடுபடாமல் போய்விட்டது. அதற்கு காரணம் தனது கட்டைக் குரலில் ரொமான்ஸ் காட்சிகள் எடுபடாமல் போனதுதான்.

ஓடிடியில் பார்க்கலாம்: கதையெல்லாம் எங்களுக்கு முக்கியமில்லை காரணமே தெரியாமல் வைப் செய்ய ஒரு படம் வேண்டும் என நினைப்பவர்கள் இப்படம் நிச்சயமாக பிடிக்கும் இத்திரைப்படம் மார்ச் 1ந் தேதி தியேட்டரில் வெளியான நிலையில், இப்படத்தை இன்று முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். இந்தியில் இப்படம் டாங்கி என்ற பெயரிலும், தமிழில் போர் என்ற பெயரிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அர்ஜுன் தாஸ்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் அர்ஜுன் தாஸ். தொடர்ந்து, அவர் நடிப்பில் வெளியான அந்தகாரம், அநீதி உள்ளிட்ட படங்கள் மக்களிடத்தில் வரவேற்பை பெற்றன. மேலும், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர், கமல் நடிப்பில் வெளியான விக்ரம் ஆகிய படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்னுடைய தனித்துவமான குரலால் அடையாளம் காணப்பட்டிருக்கும் இவர், தற்போது மலையாள சினிமாவில் நாயகனாக களமிறங்குகிறார். இந்தப்படத்தை இயக்குநர் அகமது கபீர் இயக்க இருக்கிறார்.

Read more about: por ott போர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X