Cheran: எந்த தலைவரோட வாழ்க்கை வரலாறும் இல்லை.. பொய் செய்தி பரப்பாதீங்க.. திடீரென கடுப்பான சேரன்!

சென்னை: இயக்குநர் சேரன் இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ஜர்னி வெப்சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதற்காக சமீபத்தில் வெற்றி கொண்டாட்டம் ஒன்றையும் சேரன் நடத்தினார். அந்த வெப் சீரிஸில் சரத்குமார், கலையரசன், பிரசன்னா, ஆரி அர்ஜுனன் மற்றும் திவ்யபாரதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஜர்னி வெப் சீரிஸ் வெற்றி கொண்டாட்டத்தின் போது இயக்குநர் சேரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக நடிகர் சரத்குமார் தெரிவித்திருந்தார். உடனே பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தான் சரத்குமார் நடிக்கப் போகிறார் என்றும் சேரன் அந்த படத்தை இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் பரவின.

Director Cheran put full stop to PMK leader Ramadoss biopic rumors

இயக்குநர் சேரன்: கிராமத்து படங்கள் மற்றும் வாழ்க்கையின் யதார்த்த சினிமாவையே பெரிதும் இயக்கி வந்த சேரன் திடீரென சரத்குமாரை வைத்து அரசியல் படம் ஒன்றை இயக்கப் போகிறாரா? என்கிற வதந்தி தீயாக பரவியது. வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் என பல வெற்றிப் படங்களை கொடுஹ்த சேரன் சமீபத்தில் முதன்முதலாக ஓடிடி பக்கமும் தனது என்ட்ரியை பதிவு செய்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன் தனது வெப்சீரிஸில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனனை ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க வைத்திருந்தார். பல இளம் நடிகர்களுடன் சரத்குமார் இணைந்து நடித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ராமதாஸ் பயோபிக்?: தமிழ் சினிமாவில் சமீப காலமாக அரசியல் தலைவர்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. எம்ஜிஆர், கருணாநிதி, காமராசர், அம்பேத்கர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பயோபிக் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த வரிசையில் டாக்டர் ராமதாஸின் பயோபிக் திரைப்படம் வெளியாகப் போகிறதா என்கிற கேள்வி ரசிகர்களையும் பாமக தொண்டர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதிரடியாக மறுத்த சேரன்: "நண்பர்களே.. ச்ரத்குமார் சார் அவர்களும் நானும் ஒரு படம் இணைந்து வேலை செய்யப்போகிறோம்.. அதையே அவர் நேற்று வெளிப்படுத்தினார்... ஆனால் அது யாருடைய வாழ்க்கை வரலாறும் அல்ல.. அது வேறு படம்.. தவறான கருத்துக்களை எந்த அறிவிப்பும் இன்றி பகிரவேண்டாம்.. நன்றி..." என பதிவிட்டு தீவிரமாக பரவிய அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குநர் சேரன். சமத்துவ மக்கள் கட்சி தலைவரான சரத்குமார் எப்படி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்கிற கேள்வியும் எழுந்த நிலையில், திடீரென விளக்கத்தை கொடுத்து தெளிவுப்படுத்தி உள்ளார் சேரன்.

ஜர்னி வெப் சீரிஸ்: சோனி லைவ் ஓடிடி தளத்தில் சமீபத்தில் ஜர்னி வெப் சீரிஸ் வெளியானது. சரத்குமார் ஒரு பெரிய கார் கம்பெனி ஓனராக அந்த வெப் தொடரில் நடித்திருந்தார். தனது நிறுவனத்தில் ஒரு முக்கிய பணிக்கு கடைசியாக தேர்வான ஐந்து பேர்களில் ஒருவரை நியமிக்க அவர் நடத்தும் சோதனை தான் அந்த ஜர்னி வெப் சீரிஸ் இன் கதையாக அமைந்திருந்தது. நடிகர்கள் பிரசன்னா, ஆரி அர்ஜுனன், கலையரசன், திவ்யபாரதி மற்றும் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் அந்த வெப்சீரிஸில் நடித்திருந்தனர்.

சமீபத்தில், அந்த வெப் சீரிஸ் வெற்றி பெற்றதை சேரன், சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கொண்டாடினர். கூடிய விரைவிலேயே சரத்குமாரை வைத்து சேரன் ஒரு முக்கியமான படத்தை கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X