பஞ்சாயத் சீசன் 3… அமேசான் ஓடிடியில்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: ஓடிடி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பஞ்சாயத் தொடரின் மூன்றாவது சீசன் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்தொடரின் நான்கு மற்றும் ஐந்தாம் சீசனுக்கான வேலைகளை படக்குழு இப்போதே தொடங்கிவிட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடந்த போது இந்த தொடர் வெளியாகி பலரை கொரோனாவின் சோகத்தை மறக்க வைத்தது எனலாம். தி வைரல் ஃபீவர் தயாரித்த சந்தன் குமார் திரைக்கதை எழுதிய இந்தத் தொடரை தீபக் குமார் மிஸ்ரா இயக்கியுள்ளார், இதில் ஜிதேந்திர குமார் , ரகுபீர் யாதவ் , நீனா குப்தா , சன்விகா, சந்தன் ராய் , துர்கேஷ் குமார், அசோக் பதக் , பைசல் மாலிக் மற்றும் சுனிதா ராஜ்வர் ஆகியோர் நடித்திருந்தனர்.

பஞ்சாயத் சீசன் 1: வசதி வாய்ப்புகள் நிறைந்த நகரத்தில் படித்த, ஒரு பொறியியல் பட்டதாரி இளைஞன் எந்தவித வசதிகளும் இல்லாத உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மிகவும் பின் தங்கிய கிராமமான மஹோடியா கிராமத்தில் தாசில்தாராக பணியாற்றுகிறார். வளர்ச்சி அடையாத அந்த கிராமத்தில் அவர் சந்திக்கும் சிரமங்கள், மன மாற்றங்களை, சங்கடங்களை மிக இயல்பாகவும், நகைச்சுவையாகவும் இத்தொடர் பேசியது. அமேசான் ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
இரண்டாம் சீசன்: பஞ்சாயத் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு இத்தொடரின் இரண்டாம் சீசன் வெளியானது. இந்த தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்ததை தொடர்ந்து, பஞ்சாயத் சீசன் 3 உருவானது. இந்த தொடரையும் தீபக் மிஸ்ராவே இயக்கி உள்ளார். இதில் ஜிதேந்திர குமார், நீனா குப்தா, ரகுபீர் யாதவ், பைசல் மாலிக், சந்தன் ராய் மற்றும் சன்விகா போன்ற பலர் நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். இந்த தொடர் ஜனவரி மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் இத்தொடர் வெளியாக உள்ளது. தற்போது இத் தொடர் அமேசான் பிரைமில் நாளை அதாவது மே 28ந் தேதி வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அமேசான் ஓடிடியில்: பஞ்சாயத் மூன்றாவது சீசன் வெளியாக உள்ள நிலையில், தற்போதே நான்காவது சீசனுக்காக வேலை தொடங்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பஞ்சாயத் ஐந்தாவது சீசனும் வெளியாக உள்ளது. இந்த தொடரையும் தீபக் குமார் மிஸ்ராவே இயக்குவார், இந்தத் தொடரின் பின்னணியில் உள்ள குழுவினர் இத்தொடருக்கான வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











