Leo ott: நோ மியூட்.. ஓடிடியில் அதிரடி காட்ட வரும் லியோ.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ள தேதி குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 19ந் தேதி தியேட்டரில் வெளியானது.

director Lokesh Kanagaraj and vijays Leo OTT release date

இதில் விஜய், த்ரிஷா, மிஷ்கின், சாண்டி, ஆக்ஷன் கிங் அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், அனுராக் காஷ்யப், மடோனா செபஸ்டின் என பலர் நடித்துள்ளனர்.

தளபதியின் லியோ: லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் இரண்டாவது முறையாக விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்படத்தின் மீதான ஹைப் அதிகமாகவே இருந்தது.

குவியும் பாராட்டு: பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது லியோ படத்தில் விஜய்யின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வழக்கமான விஜய் படங்களை போன்று அறிமுக பாடல், சண்டைக்காட்சி இல்லாத முற்றிலும் வித்தியாசமான படமாக லியோ இருந்தது. லியோ கலவையான விமர்சனத்தை பெற்றாலும் அது வசூலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

director Lokesh Kanagaraj and vijays Leo OTT release date

ஒரு வார வசூல்: படம் வெளியான முதல் நாளில் உலக அளவில் 148 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படம் ஆயிரம் கோடி வசூலை எட்டும் என இணையத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், முதல் வாரத்தில் படம் ரூ.461 கோடியை வசூலித்து இருப்பதாக லலித்குமார் அறிவித்துள்ளார்.

director Lokesh Kanagaraj and vijays Leo OTT release date

ஒடிடியில் லியோ: இந்நிலையில் லியோ திரைப்படம் வெளியாகி ஒருவாரம் ஆனநிலையில், வரும் நவம்பரில் லியோ படம் ஓடிடியில் வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் லியோ படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளதால், வரும் நவம்பர் 17 ஆம் தேதி அல்லது 21 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லியோ திரைப்படம் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும் என தகவல் பரவி வருகின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் நெட்ஃபிளிக்ஸ் வெளியிடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X