ரஞ்சித் வாயால் கெட்ட கவுண்டம்பாளையம்.. ஓடிடியில் வெளியானது.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: 90ஸ் காலகட்டத்தில் நல்ல கதை அம்சம் கொண்ட படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ரஞ்சித். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார். விஜய் டிவியில் 'பாக்கியலட்சுமி' தொடரில் பழனிச்சாமி என்ற ரோலில் நடித்து வந்த இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே நுழைந்து இருக்கிறார்.
நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்த கவுண்டம்பாளையம் படம் ஜூலை 9ந் தேதி வெளியாக இருந்த நிலையில், படத்திற்கு வந்த எதிர்ப்பை தொடர்ந்து படம் அந்த தேதியில் வெளியாகவில்லை. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், இந்தப்படம் பெண்களின் கண்ணீரை மையப்படுத்தும் படம்,பணக்கார பிள்ளைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதும் நாடக காதல், வரதட்சணை, கொலை, தற்கொலை போன்றவற்றை சொல்லி இருக்கிறேன் என்றார். சுயமரியாதை திருமணத்தை நிறுத்த வேண்டும் என்றார். அதுமட்டுமில்லாமல் நான் சாதிவெறியதான் என்று பேசி இருந்தார்.

கவுண்டம்பாளையம்: இதையடுத்து, ஆகஸ்ட் 9ந் தேதி தியேட்டரில் வெளியான இந்த திரைப்படம் வந்த வேகத்திலேயே தியேட்டரைவிட்டு ஓடிவிட்டது.கவுண்டம்பாளையம் படத்தை ரஞ்சித் இயக்கி நடித்திருந்த நிலையில், அப்படத்தில் 'குழந்தை’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், சாதாரண வேலை செய்யும் ரஞ்சித்தை பெரும் பணக்காரியான மாங்கனி, காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றிவிடுகிறார். இதனால், ஆத்திரம் அடைந்த ரஞ்சித் அவரை பழி தீர்ப்பது தான் படத்தின் கதை. இப்படத்தைப் பார்த்த வலைப்பேச்சு அந்தணன், கவுண்டம்பாளையம் உப்புமா படம் தயவு செய்து யாரும் அந்த படத்தை பார்க்காதீர்கள் என்று கூறியிருந்தார்.
ஓடிடியில்: இந்நிலையில் கவுண்டம்பாளையம் திரைப்படம அக்டோபர் 12 ந் தேதியான நேற்று முதல் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஞ்சித் ஆவேசமாக பேசிய 'சிவன் அடிச்சா உடுக்கை; நான் அடிச்சா படுக்கை’ டா என்ற வசனத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல், வெட்டியா இருந்தா இந்த படத்தைப் பார்த்து நல்லா சிரிங்க என்று பங்கமாக கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











