Heeramandi web series: சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீராமண்டி வெப் சீரிஸ்.. கலர்புல் பர்ஸ்ட் லுக் வீடியோ!

சென்னை: பாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குநராக ரசிகர்களை கவர்ந்து வருபவர் சஞ்சய் லீலா பன்சாலி. பாலிவுட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் இவருடைய படங்களுக்கு மேக்கிங்கிற்கு அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். கடந்த 2022ம் ஆண்டில் ஆலியா பட்டின் கங்குபாய் காதிவாடி படத்தை இயக்கி ஏராளமான ரசிகர்களின் பாராட்டுக்களையும் சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றிருந்தார் சஞ்சய் லீலா பன்சாலி. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெப் தொடர் ஒன்றை அவர் இயக்கிவருகிறார். ஹீராமண்டி : தி டைமண்ட் பஜார் என்ற இந்த வெப் சீரிஸ் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

மணிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சதா, ஷர்மின் சேகல் மற்றும் சஞ்சிதா ஷேக் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்த வெப் தொடர் சுதந்திர போராட்ட காலத்திற்கு முந்தைய காலகட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. விரைவில் இந்த சீரிஸ் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது இதன் முதல் லுக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான காட்சிகளின் அணிவகுப்பாக இந்த பர்ஸ்ட் லுக் காணப்படுகிறது. ரசிகர்களை அதிகமான எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

Director Sanjay Leela Bansali’s Heeramandi web series first look video released

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி: இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி பாலிவுட்டின் முன்னணி இயக்குநராக அறியப்படுபவர். இவரது மேக்கிங்கில் எப்போதும் ஒரு பிரம்மாண்டம் காணப்படும். இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவரது இயக்கத்தில் கடைசியாக கங்குபாய் காதிவாடி படம் வெளியானது. கடந்த 2022ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தில் நடிகை ஆலியா பட் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது வெப் சீரிசை இயக்கியுள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி. ஹீராமண்டி : தி டைமண்ட் பஜா என்ற இந்த வெப் தொடர் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

பிரம்மாண்டமான தயாரிப்பு: மணிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சதா, ஷர்மின் சேகல், சஞ்சிதா ஷேக் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தொடர் சுதந்திர போராட்ட காலகட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் வீடியோவை தற்போது தயாரிப்புத் தரப்பு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் பிரமிப்பூட்டும் அரண்மனைகள், அலங்கார உடைகள், சிறப்பான அணிகலன்கள் மற்றும் காட்சி அமைப்புகளை பார்க்க முடிகிறது.

Director Sanjay Leela Bansali’s Heeramandi web series first look video released

விரைவில் ரிலீஸ்: பீரியட் டிராமா ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடரில் இளம் வாரிசுகளுக்கிடையிலான அதிகார மோதல்கள் அடிப்படையாக கொள்ளப்பட்டுள்ளது. மனிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி என முன்னணி ஹீரோயின்களை இந்த ஒரே வெப் தொடரில் பார்ப்பது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இந்த வெப்தொடரின் வெளியீட்டு தேதி வெளியிடப்படவில்லை. ஆனால் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று பின்புலத்தில் அதிகமான படங்களை எடுத்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி முதல்முறையாக வெப் தொடரை இயக்கியுள்ளார்.

பன்சாலியின் திரைப்பயணம்: காமோஷி : தி மியூசிக்கல் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சஞ்சய் லீலா பன்சாலியின் வெற்றிப்பயணம் தொடர்ந்து வருகிறது. பாலிவுட்டில் அதிகமான கவனத்தையும் வெற்றியையும் பெற்ற, தேவதாஸ், ராம்-லீலா, மேரிகோம், பாஜிராவ் மஸ்தானி,, பத்மாவத், கங்குபாய் காதிவாடி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி. இவரது படங்களில் கண்டிப்பாக பிரம்மாண்டமான நடனக்காட்சி இடம்பெறுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் 1940ம் ஆண்டு காலகட்டத்தை மையமாக கொண்ட இந்த வெப் தொடரும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X