Aranmanai OTT: ஓடிடியில் வெளியானது சுந்தர் சியின் அரண்மனை 4.. எதில் தெரியுமா?
சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் அரண்மனை 4. திரைப்படம் மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்திருந்த நிலையில், இன்று இப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் தமிழ் சினிமாவுக்கு வறண்ட காலம் என்றே சொல்லலாம். இந்த காலகட்டத்தில், தமிழ் படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. மாறாக மலையாளத் திரைப்படங்களான மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம் படங்கள் தமிழ் நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலைப் பெற்றறன.

அரண்மனை 4: இந்த நேரத்தில் தான் கோலிவுட்டின் மானத்தை காப்பாற்றும் வகையில் ஏப்ரல் இறுதியில் சுந்தர். சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் திரையரங்குகளில் வெளியானது. சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா என முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம், மே 3 ஆம் தேதி நாளில் வெளியானது. நகைச்சுவை, திரில்லர் பாணியில் உருவான அரண்மனை 4 படம் முதல் நாட்களில் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று தமிழ் நாட்டிலேயே அதிக வசூல் செய்த படமாக மாறியது.
விறுவிறுப்பான: குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட தமன்னா, தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த நேரத்தில் கணவர் மர்மமான முறையில் இறந்துவிட, தமன்னா தற்கொலை செய்து கொள்கிறார். இந்த தகவல் தெரிந்து தங்கையின் அரண்மனைக்கு வரும் சுந்தர் சிக்கு தன் தங்கை மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகப்படுகிறார். மேலும், ஒரு தீய சக்தி தங்கையின் மகளை பழி கொடுக்க இருப்பதை தெரிந்து கொண்ட சுந்தர் சி, அந்த தீய சக்தியிடம் இருந்து குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை.
ஒடிடியில்: இப்படம் மூன்று வாரங்களுக்கு பிறகு அரண்மனை 4 படம் 100 கோடி ரூபாய் உலக வசூலை எட்டி இருந்தது. இந்த ஆண்டு தமிழில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையையும் அரண்மனை 4 பெற்றது. இத்திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சரியான 12 மணிக்கு இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது. தியேட்டரில் இப்படத்தை தவறவிட்ட ரசிகர்கள் இப்படத்தை ஓடிடியில் பார்த்து மகிழலாம்.
அரண்னை: அரண்மனை படத்தின் முதல் படம் 2014ம்ஆண்டு வெளியானது. அதில், சுந்தர், ஹன்சிகா மோத்வானி, வினய் ராய் மற்றும் ஆண்ட்ரியா ஜெர்மியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் 2016ம் ஆண்டு வெளியானது. இதில், சித்தார்த், த்ரிஷாவுடன் சுந்தர் மற்றும் ஹன்சிகா நடித்திருந்தனர். 2021 ஆம் ஆண்டு வெளியான அரண்மனை மூன்றாவது பாகத்தில் சுந்தர், ஆர்யா, ராஷி மற்றும் ஆண்ட்ரியா நடித்திருந்தனர். இந்த நான்கு படங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











