twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திட்டம் இரண்டு படத்தை தன் அம்மாவுடன் பார்த்த விஜய்சேதுபதி.. பாராட்டு மழையில் இயக்குனர் விக்னேஷ்

    |

    சென்னை : ஐஸ்வர்யா ராஜேஷ் - சுபாஷ் செல்வம் நடிப்பில், திடுக்கிடும் திருப்புமுனைகளைக்கொண்ட திரைக்கதையில், இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திட்டம் இரண்டு திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.

    சோனி லைவில் வெளியாகி இருக்கும் திட்டம் இரண்டு , திரை உலகிற்கு கொஞ்சம் வித்யாசமானதுதான்.புதிய முயற்சிகள் நிறைய தமிழ் சினிமாவில் நடக்கிறது அதில் இந்த படமும் ஒன்று என்று பலரும் சொல்லி வருகின்றனர்

    திட்டம் இரண்டு படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் நமது பில்மிபீட் சேனல்காக கிலோஸ் கால் என்ற நிகழ்ச்சியில் பிரத்தியேக பேட்டி கொடுத்தார் .அதிர் கேட்கப்பட்ட சில கேள்வி பதில்கள் இங்கேயே காணலாம் .

    டேட்டிங் போனது உண்மைதான்.. காதலில் விழுந்த சீரியல் ஜோடி.. இன்ஸ்டாவில் வேற லெவல் ரொமான்ஸ்! டேட்டிங் போனது உண்மைதான்.. காதலில் விழுந்த சீரியல் ஜோடி.. இன்ஸ்டாவில் வேற லெவல் ரொமான்ஸ்!

    த்ரில்லர் படமா? காதல் படமா?

    சில வருடங்களுக்கு முன்பாக தொடர்ச்சியாக பேய் படங்கள் வெளிவந்தன. பார்ட்1,2,3 என நீண்டு மெகா ஹிட் கொடுத்தன. இப்போது ஓடிடி என்றாலே த்ரில்லர் படமாக எடுத்தால் நல்ல ரீச், என்ற பல்சை புரிந்து கொண்டார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். போலீசாக வரும் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு எந்த வித போலீஸ் பில்டப்ஸ், ஸ்லோமோஷன் எல்லாம் கொடுக்காமல் மிகவும் எதார்த்தத்தை காட்டியிருக்கிறார் இயக்குனர். பேருந்து சந்திப்பில் காதலும், அதை தொடர்ந்து த்ரில்லரும் அசத்தலாய் அமைய, ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், மிகவும் பக்க பலமாக இருந்துள்ளார். முதற்பாதியிலேயே கதைக்குள் வந்து விட்டார் இயக்குனர். திட்டம் இரண்டு உருவான விதமும், மறக்க முடியாத நிகழ்வுகளையும் பற்றியும், வழக்கம் போல் கேஷ்வலாக சொல்ல ஆரம்பித்தார்.

     அந்த வெற்றி

    அந்த வெற்றி


    கேள்வி : "'ஸ்க்ரீன் ப்ளே சூப்பரா இருக்கு, வசனம் தாறுமாறா இருக்கு'ன்னு பாக்கறவங்கல்லாம் படத்த பத்தி, பார்ட் பார்ட்டா சொல்றாங்களே..இந்த வெற்றி எப்படி இருக்கு?"
    பதில் : " ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு க்ரியேட்டர்க்கு தேவையே அதான் .. காசு பணம் தாண்டி, தன்னுடைய ஒரு படைப்பு நல்லாருக்குன்னு பலர் பாராட்டறதுதான் உண்மையான வெற்றி.. அந்த வெற்றி கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம் "

    பெரிய லெவல் பட்ஜெட்

    பெரிய லெவல் பட்ஜெட்


    கேள்வி : " இந்த ஸ்க்ரிப்ட்-ட எடுக்கும் போது, வேற ஸ்க்ரிப்ட் பண்ணலாம்ன்னு Plan B எதாவது இருந்துச்சா ? "
    பதில் : " ஹா ஹா.. ஆக்சுவலா இதுதான் Plan B. Plan A கொஞ்சம் பெரிய லெவல் பட்ஜெட் படம் பன்றதா இருந்துச்சு. நிச்சயம் பண்ணுவேன். அதுக்கு முன்னாடி இது அமைஞ்சிது"

    100 பேர வச்சி

    100 பேர வச்சி

    கேள்வி : நிகழ்ச்சித் தொகுப்பாளர், குறும்பட இயக்குனர்ன்னு பன்முக திறமையாளரா இருந்துட்டு, பெரிய ஸ்க்ரீன் -ல பண்ணும் போது எப்படி இருந்துச்சு ?"
    பதில் : " அப்படி பெருசா வித்யாசம் தெரியல.. ஸ்க்ரீன்ப்ளே பண்ணும் போது அதுக்கு தகுந்த மாதிரி பெருசா பண்ண வேண்டி இருந்துச்சு. மத்தபடி ஒன்னும் இல்ல. முதல் ஒன்னு ரெண்டு நாள் ஷூட்ல எல்லாரும் நம்மளயே கவனிப்பாங்க. ஜட்ஜ் பண்ணுவாங்க.. So சரியா நடந்துக்கனும், அதுல குடுக்குற இம்ப்ரஷ்னதான் மொத்த படத்துக்கும்-ன்னு அது மட்டும் மைண்ட் ல ஓடிட்டு இருந்துச்சு. ரெண்டு மூனு நாள்ல எல்லாருமே ஒரு ஃபேமிலியா, பழக, வொர்க் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதனால 100 பேர வச்சி வேல வாங்கிறது ஒன்னும் பெருசா தெரியல"

     இப்படியெல்லாம் இருக்காங்களா

    இப்படியெல்லாம் இருக்காங்களா


    கேள்வி : " இது வரைக்கும் தமிழ் சினிமாவுல சொல்லாத, ஒரு இண்டர் நேஷனல் விஷயத்த சொல்லிருக்கீங்க.. உங்க வீட்ல, நண்பர்கள் என்ன சொன்னாங்க?"
    பதில் : " ப்ரண்ட்ஸ் எல்லாருமே ரொம்பவே பாராட்டுனாங்க. ஆரம்பத்துலயே பயமுறுத்தாம.. 'ஆமால்ல.. இப்படி ஒரு விஷயம் ஸ்க்ரீன் ல பார்த்தா நல்லாருக்கும்-ல்ல'-ன்னு ஆர்வமா, பாசிட்டிவ் ஆ சொன்னாங்க.
    ஃபேமிலில இது பத்தி சொல்றப்ப.. ' ஓ.. இப்படியெல்லாம் இருக்காங்களான்னு தான் முதல்ல ஆச்சர்ய்யப்பட்டாங்க. ஏன்னா இன்னும் சிலருக்கு இப்படி ஒரு கான்சப்ட் இருக்குங்கிறதே தெரியல. இத தாண்டி இன்னும் நிறைய இருக்கு. இப்பதான் தமிழ் சினிமாவுல இப்படி ஒரு சப்ஜெக்ட் வர ஆரம்பிச்சிருக்கு. மக்கள் ஏத்துக்கிறாங்க."

    அம்மாவும் விஜய்சேதுபதியும்

    அம்மாவும் விஜய்சேதுபதியும்


    கேள்வி: "மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்த பார்த்துட்டு பாராட்டினாராமே?"
    பதில் : " ஆமா.. சும்மா சாதாரணமா இல்ல.. கிட்டத்தட்ட அரை மணி நேரம் பேசினாரு. ஒவ்வொரு பார்ட்லயும் இருந்த நுணுக்கங்கள் ல்லாம் சொன்னாரு. அது மட்டும் இல்லாம முதன் முதல் ல அவர் கிட்டதான் படத்த போட்டு காமிச்சேன். என் டீம் ல இல்லாத வெளி நபர்ல முதல்ல பார்த்தது விஜய் சேதுபதிதான். ரொம்ப பிடிச்சிருக்கு. செகண்ட் ஹாஃப் ரொம்ப சூப்பர். நானும் என் அம்மாவும் பார்த்தோம். அவங்களும் ரொம்ப எக்ஸைட்டிங் ஆ ரசிச்சாங்க." அப்படின்னு சொன்னாரு.

    ரெஸ்பான்ஸ்

    ரெஸ்பான்ஸ்


    கேள்வி : "இந்த வெற்றிக்கொண்டாட்டம் ரசிகர்கள் மத்தியில எப்படி இருக்கு?"
    பதில் : " இது கிட்டத்தட்ட ஒண்டே மேட்ச் மாதிரிதான். தியேட்டர்ன்னா மொத்தமா 200,300 பேர் ஒரே டைம் ல பார்ப்பாங்க.. உடனே ரீச் கிடைக்கும். ரிசல்ட் கிடைக்கும். இப்ப ஓடிடி-ன்றதால மக்கள் பொறுமையாத்தான் பார்ப்பாங்க. ஆனா இப்பவே அந்த வெற்றிய உணர முடியுது. ஏன்னா சோசியல் நெட் ஒர்க் மூலமா, வெளி நாட்டுல எங்கயோல்லாம் இருக்க மக்கள் கூட அவங்கோட பார்வையும், கருத்தயும் சொல்ல முடியுது. நல்ல ரெஸ்பான்ஸ் வந்து கிட்டு இருக்கு"

     பெரிய சவாலா இருந்தது

    பெரிய சவாலா இருந்தது


    கேள்வி : நடிகர்கள் தேர்வும் நேர்த்தியும்" காஸ்டிங் செலக்ஷன் ரொம்ப நேர்த்தியா பண்ணிருக்கீங்க. அதுல உங்க திட்டம் என்ன ?"
    பதில் : " முதல்ல புதுமுகமா இருக்கனனும்-ங்கிற விஷயத்துல ரொம்பவே உறுதியா இருந்தேன்.. "
    கேள்வி : " அப்படின்னா.. யார முதல்ல செலக்ட் பண்ணீங்க.."
    பதில் : " ஐஸ்வர்யா ராஜேஷ்தான். அப்பறம் மத்த ஆர்டிஸ்ட்ல்லாம் எடுத்தோம். ரொம்பவே சேலஞ்ச்- ஆ இருந்துச்சு. ஏன்னா ஆர்டிஸ்ட் நல்லாவும் இருக்கனும், நமக்கு தேவைப்படுற கேரக்டருக்கும் பொருந்ததனும். அதுவே ஒரு பெரிய சவாலா இருந்துச்சு.."

    டேய்ய்ய்..”ன்னு சொல்ற எமோஷன்

    டேய்ய்ய்..”ன்னு சொல்ற எமோஷன்

    கேள்வி : "படம் முழுசா பண்ண பிறகு இதவிட பெட்டரா பண்ணிருக்கலாம்ன்னு தோணுச்சா?"
    பதில் : " நிச்சயமா தோணுச்சு. இது ஒரு ஆர்ட் மாதிரிதான.. வரைஞ்சதுக்கப்பறம் எந்த ஆர்டிஸ்ட்டா இருந்தாலும் இதுல இப்படி பண்ணாலாமே.. இன்னும் அழகாக்கலாமேன்னு தோணும் இல்லயா.. அது போல தோணிருக்கு.
    கேள்வி: "படத்துல உங்கள அசைச்சு பார்த்த வசனம் எது ?"
    பதில் : " புடிக்காத சட்டையே யாரும் போடறதில்ல.. ஆனா நான்.." அப்படின்னு சொல்ற அந்த டயலாக், அப்பறம் அந்த ஹஸ்பண்ட் கேரக்டர் " டேய்ய்ய்.."ன்னு சொல்ற அந்த எமோஷன் டயலாக் இது ரெண்டும் எனக்கு ரொம்ப பிடிச்சது" என்று சொல்லி அந்த நிகழ்வுகளுக்குள்ளேயே சென்றுவிட்டார். தமிழ் சினிமாவில் வித்யாசனமான ஒரு விஷயத்த டச் பண்ணிய டைரக்டர் மக்கள் மனதையும் டச் பண்ணியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்களும் பெண்களும் அவர்கள் பெற்றோர்களோடு அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. இந்த பேட்டியின் முழு வீடியோ பார்க்க பில்மிபீட் தமிழ் -யு ட்யூப் சேனல் மூலமாகவும் பார்க்கலாம் . விடியோவை கிளிக் செய்து மேலும் தகவல் தெரிந்து கொள்ளுங்கள் .

    English summary
    Thittam Irandu movie has got good appreciation form all quarters and movie director Vignesh Karthick is happy about it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X