Goli Soda Rising Review:கோலி சோடா ரைசிங் வெப் சீரிஸ் எப்படி இருக்கு?..சுமாரா? சூப்பரா?
சென்னை: விஜய் மில்டன் இயக்கியுள்ள 'கோலி சோடா ரைசிங்' வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேற்று வெளியானது. இந்த வெப்தொடரில் கோலி சோடாவில் நடித்த அனைத்து நடிகர்களும் மீண்டும் இதில் நடித்துள்ளனர். சிறுவர்களாக பார்த்த இவர்கள், இந்த தொடரில் வாட்ட சாட்டமாக வளர்ந்து இருக்கிறார்கள். தற்போது இதன் விமர்சனத்தை பார்க்கலாம்.
விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கோலி சோடா' , கோயம்பேடு மார்க்கெட்டை பிரதானமாக வைத்து உருவான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, 2018ம் ஆண்டு 'கோலி சோடா 2' வெளியானது. இதன் தொடர்ச்சியாக தற்போது 'கோலி சோடா ரைசிங்' என்ற வெப்சீரிஸை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இதில், சேரன், ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, அம்மு அபிராமி, இமாம் அண்ணாச்சி என பலர் நடித்துள்ளனர். அருங்கிரி இசையமைத்துள்ள இந்த வெப்தொடருக்கு சைமன் கிங் பின்னணி இசை அமைத்துள்ளார்.

கோலி சோடா ரைசிங்: இந்த வெப் சீரிஸ் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி என 7 மொழிகளில் வெளியாகி உள்ளது. தற்போதைக்கு 3 எபிசோடுகள் மட்டுமே வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் நாயுடுவால் பல பெரிய பிரச்சனையை பார்த்த சிறுவர்கள், பின் நாயுடுவை அடித்து துவம்சம் செய்தனர். இதை வெளியில் சொன்னால் உன் மானம் போய்விடும் என்று நாயுடுவை மிரட்டி அவரை பணியவைத்தனர். நாயுடுவும் மானத்தை காப்பாற்றிக் கொள்ள, அந்த நான்கு சிறுவர்களோடு சமாதானமானது போல படத்தை இயக்குநர் முடித்திருந்தார்.
3 எபிசோட்: தற்போது வெளியாகி உள்ள கோலி சோடா வெப் தொடரில் வளர்ந்து வாலிபர்களாக நான்கு பேரும், ஆச்சி மெஸ்ஸை நிர்வகித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் நாயுடுவின் குழந்தைக்கு காது குத்து விழா வைக்க. இதில், கலந்து கொள்வதற்காக ஜெயிலில் இருந்து பரோலில் மயில் வருகிறான். அந்த இடத்தில் இந்த நான்கு சிறுவர்களையும் பார்த்து மயில் அத்திரப்பட்டு கத்துகிறான். இதையடுத்து வீட்டுக்கு வரும் ஆச்சி, மயில் வெளியில் வந்துவிட்டால், நம்மை இந்த இடத்தில் பொழைக்கவிட மாட்டான் இதனால், நாம வேற எதாவது செய்ய வேண்டும் என்று சொல்ல, நான்கு பேரும், கோயம்பேட்டில் வரும் புது மார்க்கெட்டில் புது ஓட்டலை வைக்க பிளான் போடுகின்றனர். இதனால், மீண்டும் நாயுடுவுக்கும் அந்த நான்கு பேருக்கும் புது பகை உருவாகிறது.
சுவாரசியமா இல்ல: இந்த வெப்தொடரில், சேரன் தாடியுடன் வந்து சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கிறார். அவரைத் தொடர்ந்து 'டான்' ஆக ஷாம் மிரட்டுகிறார். எல்லாவற்றையும் தாண்டி பக்கா ரவுடியாக நடிகர் புகழ், போலீஸ் உமன் என சில புது கேரக்டர்கள் படத்தில் வருகிறார்கள். இவர்களை சற்றி கதை வருகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் மூன்று எபிசோடிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதுவும் இல்லை. பொதுவாக வெப் தொடர் என்றால், நான்காவது எபிசோடில் இருந்துதான் பிக்கப் ஆகும். இந்த வகையில் இனி வரும் எபிசோடுகளை இயக்குநர் கதையை எப்படி நகர்ந்து கொண்டு செல்கிறார் என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் 3 எபிசோடிலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை.


Click it and Unblock the Notifications











