The family man 3: தி ஃபேமிலி மேன் 3 சூட்டிங் நிறைவு.. ஹீரோ போட்ட உற்சாக போஸ்ட்!
மும்பை: ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் அடுத்தடுத்து பேமிலி மேன், தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர்கள் கடந்த 2019 மற்றும் 2021ம் ஆண்டுகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன. குறிப்பாக தி பேமிலி மேன் 2 தொடரில் நடிகை சமந்தா இலங்கை தமிழராக நடித்து அதிரடி கிளப்பினார்.
சமந்தாவின் இந்த கேரக்டர் இந்த தொடருக்கு மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றுக் கொடுத்திருந்தது. இந்நிலையில் இதன் மூன்றாவது பாகத்திற்கான ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது அதன் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் மனோஜ் பாஜ்பாய் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தி ஃபேமிலி மேன் 3 சூட்டிங் ஓவர்: தமிழகத்தில் இந்த தொடருக்கு எதிராக சர்ச்சைகள் எழுந்தன. இந்த தொடரை புறக்கணிக்க வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தப்பட்டன. மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டவர்கள் இந்த தொடரிலும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர் இந்நிலையில் இதன் தொடருக்கு அடுத்தடுத்து கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்றாவது பாகமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு தற்போது ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து படத்தின் நாயகன் மனோஜ் பாஜ்பாய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
மனோஜ் பாஜ்பாய் உற்சாகம்: இந்த தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து கேக் வெட்டி கொண்டிய புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் கிளாப் போர்ட்டில் சூட்டிங் நிறைவு என்று எழுதப்பட்டிருந்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். விரைவில் பேமிலி மேன் 3 தொடருக்காக காத்திருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தொடரின் சூட்டிங் நிறைவடைந்ததையடுத்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதமாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் இந்த தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய் ஸ்ரீகாந்த் திவாரி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் அவர் உளவுத்துறையிலும் பணியாற்றுவதாக இந்த தொடரின் கதைக்களம் அமைந்திருந்தது. இந்த தொடரில் அவருடன் இணைந்து பிரியாமணி, ஸ்ரேயா தன்வந்தரி, ஷரிப் ஹஷ்மி, தலிப் தஹில் உள்ளிட்டவர்களும் இந்த தொடரில் நடித்துள்ளனர். இநத் தொடரின் சூட்டிங்கிற்காக கடந்த செப்டம்பரில் இவர்கள் அனைவரும் நாகாலாந்து சென்றிருந்தனர். முந்தைய இரு பாகங்களும் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் தி ஃபேமிலி மேன் 3 வெப்தொடரும் சிறப்பான விமர்சனங்களை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











