2023ல் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள்.. கெத்துக்காட்டிய முதல் படம் எது தெரியுமா?
சென்னை: கொரோனா காலத்திற்கு பிறகு ஓடிடி தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மக்களின் எண்ணத்தை புரிந்து கொண்ட பல ஓடிடி தளங்கள் வாரா வாரம் புது புது திரைப்படங்களையும், வெப் தொடர்களையும் போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் அந்த வகையில் 2023ஆம் ஆண்டில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட திரைப்படங்கள் என்னென்ன என்று இந்த செய்தி பதிவில் பார்க்கலாம்.
துணிவு: 2023ம் ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர், அமீர், பாவனி இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வங்கியில் நடக்கும் மோசடி குறித்து வெளிச்சம் போட்டு காட்டிய இத்திரைப்படம் பெங்கலுக்கு தியேட்டரில் வெளியாகி வசூலை அள்ளியது. அதன்பின் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்தை 2.5 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

வாத்தி: அதிக ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்ட படங்களின் வரிசையில் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியான இப்படத்தில் தனுஷ் அரசு பள்ளி ஆசிரியராக நடித்திருந்தார். கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் வசூலை அள்ளியது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கட்டா குஸ்தி: விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு பல தரப்பிலும் இருந்து நல்ல விமர்சனம் வந்தது. கணவன் மனைவியாக இருப்பவர்கள் ஈகோ இல்லாமல் விட்டு கொடுத்து வாழ வேண்டும் என்ற கருத்தை மையக்கருவாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்தை ஏராளமான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அதிக பார்வையாளர்களை பெற்று 3-வது படம் இதுவாகும்.
டிஎஸ்பி: விஜய்சேதுபதி நடிப்பில் உருவான டிஎஸ்பி திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 30ந் தேதி தியேட்டரில் வெளியானது. பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுக்ரீத்தி வாஸ், பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் வரிசையில் 4வது இடத்தில் உள்ளது.
ராங்கி: எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி உள்ளிட்ட படங்கிய எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்த திரைப்படம் ராங்கி. ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. எப்போதுமே ஹோம்லி லுக்கில் பார்த்த த்ரிஷாவை இதில் ராங்கியாக நடித்த அலப்பறை செய்து இருந்தார். அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் 5வது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications











