மாரிசெல்வராஜின் வாழை.. ஓடிடி ரிலீஸ் தேதி.. எந்த தளத்தில் தெரியுமா?

சென்னை: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தியேட்டரில் வசூல்வேட்டையாடிய வாழை ஓடிடியில் மாஸ் காட்டுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் நான்காவது படமான வாழை தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில், கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வெளியாகி மக்கள் மனதில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மணிரத்னம், பாலா, மிஷ்கின், பாரதி ராஜா, தனுஷ், விஜய்சேதுபதி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டினர்.

vaazhai mari selvaraj ott

பாராட்டிய பிரபலங்கள்: படத்தை பார்த்த பல திரை நட்சத்திரங்கள் படத்தை வியந்து தங்களின் கருத்தை வெளியிட்ட காரணத்தால் படம் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. படம் பார்த்த இயக்குநர் ஷங்கர், வாழைப்பழம் இனி முன்னைப் போல் தித்திக்குமா என்றும் தெரியவில்லை என கூறியிருந்தார். அதே போல, விஜய் சேதுபதி, இதற்கு பின்னாடி இருக்கும் வாழ்க்கையை, இவ்வளவு அழுத்தம் திருத்தமாக புதிய வைத்து இருக்கும் மாரி செல்வராஜூக்கு நன்றி என கூறியிருந்தார். இப்படி படத்தை பார்த்தவர்கள் தொடர்ந்து பாராட்டியதால் ஏராளமான மக்கள் தியேட்டருக்குள் வந்து படைத்தை பார்த்து ரசித்தனர்.

vaazhai mari selvaraj ott

பூங்கொடி டீச்சர்: குறிப்பாக இந்த படத்தில் பூங்கொடி டீச்சராக நடித்திருந்த நிகிலா விமல் ரசிகர் மனத்தில் இடம் பிடித்துவிட்டார். இதே போல கலையரசன், திவ்யா துரைசாமியும் எதார்த்தமான நடிக்கை வெளிப்படுத்தி இருந்தனர். லோகேஷ் கனகராஜ் படத்தில் வருவது போல இந்த படத்திலும் மஞ்சள் பூசி மஞ்சள் பூசி பாடலும், தூதுவளைய அரைச்சி, பஞ்சுமிட்டாய் சீல கட்டி பாடலும் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஓடிடி ரிலீஸ்: மாரி செல்வராஜ் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து 'வாழை’ படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில் 'வாழை’ ஓ.டி.டியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் வருகிற 27 ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் முதலில் தமிழில் வெளியாகும் எனவும் , பின்னர் பிற மொழிகளிலும் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X