இந்தியாவில் ஓடிடியில் அதிக சம்பளம் வாங்குவது யார் தெரியுமா?.. எவ்வளவுனு தெரிஞ்சா அசந்துடுவீங்க

மும்பை: இந்தியாவில் இப்போது ஓடிடியின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதில் ரசிகர்கள் எப்படி ஆர்வமாக இருக்கிறார்களோ அதேபோல் ஓடிடியில் பார்ப்பதற்குமான ஆவலும் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான வெப் சீரிஸ்கள், படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சூழலில் ஓடிடி மூலம் அதிகம் சம்பாதிக்கும் செலிபிரிட்டி யார் என்ற தகவல்தான் சமூக வலைதளங்களில் இப்போது ட்ரெண்டாகியுள்ளது.

கொரோனா காலத்தில் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்த ஓடிடிக்கள் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்திருக்கின்றன. வருட சந்தா கட்டினால் போதும் குடும்பத்தோடு வீட்டிலேயே இருந்தபடி படங்களையோ, வெப் சீரிஸ்களையோ பார்க்கலாம் என்பதால் அதற்கான மவுசு அதிகரித்திருக்கிறது. ஸ்மார்ட் ஃபோன் யுகத்தில் இப்போது எல்லோரது மொபைலிலுமே ஓடிடி தளங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஓடிடியை பொறுத்தவரை தமிழில் முழு முதலாக இறங்கியது நடிகர் சூர்யாதான்.

Do you know who earns the highest salary in OTT here Are the details

தமிழில் சூர்யாவின் விதை: அவர் நடித்த சூரரைப் போற்று படமும், ஜெய் பீம் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அதனையடுத்து பலரும் படங்களை ஓடிடி நிறுவனங்களிடம் நேரடியாக கொடுக்கும் வழக்கம் அதிகரித்தது. தொடர்ந்து வெப் சீரிஸ்கள் மீது ரசிகர்களுக்கு மோகம் அதிகரிக்க ஏகப்பட்ட வெப் சீரிஸ்கள் ஓடிடியில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

வெற்றிமாறனின் மோகம்: அப்படி வெளியாகும் வெப் சீரிஸ்கள் ஹிட்டாகவும் செய்கின்றன. வெற்றிமாறனேக்கூட வடசென்னை 2வை வெப் சீரிஸாக இயக்கவிருக்கிறார் என்ற ஒரு தகவல் ஓடியது நினைவுகூரத்தக்கது. அதேபோல் பேட்டைக்காளி என்ற வெப் சீரிஸை வெற்றிமாறன் ஓடிடிக்காக தயாரித்திருந்தார். இதனையடுத்து பிரபல இயக்குநர்களும், நடிகர்களும் ஓடிடி வெப் சீரிஸ் மீது தங்களது கவனத்தை திருப்பியிருக்கின்றனர். அதன் காரணமாக ஓடிடியில் தமிழ் கன்டெண்ட்டுகள் வருவது அதிகரித்திருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்புகூட வசந்தபாலன் தலைமைச் செயலகம் என்ற வெப் சீரிஸை ஜீ5 ஓடிடி தளத்துக்காக இயக்கியிருந்தார். அதனை பார்த்த பலரும் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர். அதேபோல் பாலிவுட்டிலும் எக்கச்சக்க வெப் சீரிஸ்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான ஹீராமண்டி, லபாடா கேர்ள்ஸ் போன்ற சீரிஸ்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் ஓடிடி மூலம் எந்த செலிபிரிட்டி அதிகம் சம்பாதிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரியங்கா சோப்ரா டாப்: அந்தவகையில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சிட்டாடல் வெப் சீரிஸுக்காக 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பளமாக பெற்றிருக்கிறார் (இந்திய மதிப்பில் 200 கோடி முதல் 250 கோடி ரூபாய்) என்று கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸின் மொத்த பட்ஜெட்டே இந்திய மதிப்பில் 2000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்றும் திரைத்துறையினர் சொல்கிறார்கள். இப்போது சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் சமந்தா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. பிரியங்கா சோப்ராவுக்கு அடுத்தபடியாக அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு லிஸ்ட் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X