OTT Release: டிராகன் முதல் தினசரி வரை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: தியேட்டரில் வெளியாகும் திரைப்படங்களுக்கு நிகராக ஓடிடி தளத்திலும் பலத் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.அந்த வகையில் இந்த இந்த வாரம் Netflix,
JioHotstar, Prime Video, ஆஹா தமிழ் போன்ற ஓடிடி தளத்தில் வரிசையாக பலத்திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

டிராகன்: இயக்குனராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் லவ் டுடே படம் மூலம் நாயகனாக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே ரூ.100 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்தார். லவ் டுடே படத்தின் வெற்றியை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கினார். இவர் ஏற்கனவே ஓ மை கடவுளே என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கி இருந்தார். விஜே சித்து, ஹர்ஷத் கான், மிஷ்கின், ஜார்ஜ் மரியான், கே.எஸ்.ரவிக்குமான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. கடந்த பிப்ரவரி 21ந் தேதி திரைக்கு வந்த இப்படம், மார்ச் 21ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Dragon OTT OTT

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் : தனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. முழுக்க முழுக்க இளசுகளை வைத்து எடுத்திருந்த இந்த படம், திரையரங்குகளில் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வெளியானது. தனுஷின் அக்கா மகன் பவிஷ் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அனிகா மற்றும் பிரியா பிரகாஷ் வாரியர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். அவர்கள் மட்டுமின்றி, மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், சரண்யா பொண்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.

Dragon OTT OTT

ரிங் ரிங்: பிரவீன் ராஜ் நடித்த தமிழ் திரைப்படமான ரிங் ரிங் ஜனவரி 31 அன்று திரையரங்கில் வெளியானது. சக்திவேல் எழுதி இயக்கிய நகைச்சுவை திரைப்படமான இப்படத்தில், சாக்ஷி அகர்வால், வெங்கட் பிரசன்னா, அர்ஜூனன், டேனியல் ஆகியோர் நடித்துள்ளனர். செல்போனால், சமகால உறவுகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை வலியுறுத்துகிறது. இந்தத் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

தினசரி: நடிகர் ஸ்ரீ காந்த் நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் தினசரி படம் தியேட்டரில் வெளியானது. இந்தப் படத்தினை அமெரிக்காவைச் சேர்ந்த சிந்தியா தயாரித்தது மட்டும் இல்லாமல், அதில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் படம் பலரது கவனத்தினை ஈர்த்தது. இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை டென்ட் கோர்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Dragon OTT OTT

பேபி & பேபி: யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடித்த திரைப்படம் "பேபி & பேபி". காதல் தினத்தன்று தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் கலக்கலான நகைச்சுவைத் திரைப்படமாகும். கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் 21ந் தேதி வெளியாக உள்ளது.

Dragon OTT OTT

Mr.ஹவுஸ் கீப்பிங்: யூடியூபில் கவனம் ஹரி பாஸ்கர் முதன் முதலாக முழு நீளத் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் தான் 'Mr.ஹவுஸ் கீப்பிங்'. அருண் ரவிச்சந்திரன் எழுதி, இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், லாஸ்லியா மரியனேசன், இளவரசு, ஷா ரா, ரயான ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம்மார்ச் 21ந் தேதி டென்ட் கோர்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

பிரம்மா ஆனந்தம்(தெலுங்கு): நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் பிரம்மா ஆனந்தம். மேலும்,இப்படத்தில், வெண்ணிலா கிஷோர், பிரியா வத்லமணி, சம்பத், ராஜீவ் கனகலா மற்றும் தல்லுரி ராஜேஸ்வரி பலர் நடித்துள்ளனர். ராகுல் யாதவ் நக்கா தயாரித்த இந்தப் படத்தில் சாண்டில்யா பிசாபதி இசையமைத்துள்ளார். இப்படம் ஆஹா தெலுங்கு தளத்தில் வெளியாக உள்ளது.

Dragon OTT OTT

ஆஃபிசர் ஆன் டூட்டி(மலையாளம்): குஞ்சாக்கோ போபன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள க்ரைம் திரில்லர் திரைப்படம் தான் ஆஃபிசர் ஆன் டூட்டி. ஜித்து அஷ்ரஃப் இயக்கிய, ரூ.12 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், உலகளவில் ரூ.50 கோடி வசூலித்து சாதனை படைத்தது. பிப்ரவரி 20ந் தேதி தியேட்டரில் வெளியான இப்படம் நெட்ஃபிளிக்ஸில் தளத்தில் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வரும் வெள்ளிக்கிழமை பார்க்கலாம்.

ஜிதேந்தர் ரெட்டி: ராகேஷ் வர்ரே அண்மையில் வரலாற்று திரைப்படத்தில் நடித்தார். விரிஞ்சி வர்மா இயக்கிய இப்படம் நவம்பர் 8ந் தேதி தியேட்டரில் வெளியான இப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படம் மார்ச் 20ந் தேதியான இன்று ETV Win ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
அதேபோல் ஃபயர் திரைப்படமும் இந்த வாரம் வாரம் வெளிவர இருக்கிறது. மேலும் உண்மை கதையை மையப்படுத்தி வெளியான ஜென்டில் உமன் டென்ட் கொட்டா தளத்தில் வெளிவர இருக்கிறது.

dragon OTT

அனோரா: 77வது கேன்ஸ் திரைப்பட ஆஸ்கர் விருது விழாவில் அனோரா படம் சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு 5 விருதுகளை வென்றது. 2024ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியான அனோரா படத்தில், மிக்கி மேடிசன் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் 41 மில்லியன் அமெரிக்க டாலர்களை உலகளவில் வசூல் செய்தது. படிப்பதற்காக அமெரிக்காவிற்கு செல்லும் ஒரு பெண், ரஷ்ஷிய தொழிலதிபரின் மகனை திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் அந்த பெண்ணின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை, இந்த திரைப்படத்தை ஜீயோ ஹாட் ஸ்டாரில் தற்போது பார்த்து மகிழாலாம்.

மேலும், ஜெனிபர் கேசிசியோ இயக்கிய ஆங்கில வெப்தொடரான Happy Face Paramount+ல் வெள்ளிக்கிழமை முதல் பார்க்கலாம். இப்படத்தில் அன்னலீ ஆஷ்ஃபோர்ட், டென்னிஸ் குவைட், ஜேம்ஸ் வோல்க், டேவிட் ஹேர்வுட், தமேரா டோமாகிலி, கிய்லா அய்ன்னே, பெஞ்சமின் மேக்கி ஆகியோர் நடித்துள்ளனர்.
எட்டு எபிசோட்கள் கொண்ட இந்த தொடரில், அன்னலீ ஆஷ்ஃபோர்ட் ஒரு தொலைக்காட்சி ஒப்பனை கலைஞராக நடிக்கிறார், அதே போல, The Residence ஹாலிவுட் படம் நெட்பிளிக்சிலும், Denof Thieves 2 Pantera படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும், Muslim Match maker ஹாட் ஸ்டார் சீரிசில் பார்க்கலாம்.

More from Filmibeat

Read more about: dragon டிராகன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X