Salute Review:காக்கி சட்டையில் மிரட்டும் துல்கர் சல்மான்..நேரடி ஓடிடி ரிலீசான சல்யூட் எப்படி இருக்கு

திருவனந்தபுரம்: இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் சமீபத்தில் தியேட்டரில் வெளியான ஹே சினாமிகா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், ஓடிடி தளமான சோனி லைவ்வில் தற்போது வெளியாகி உள்ள சல்யூட் திரைப்படத்தை பார்த்த உடனே ரசிகர்கள் பதிவிட்டு வரும் கருத்துக்கள் டிரெண்டாகி வருகின்றன.

காக்கி சட்டை அணிந்து கம்பீர போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள துல்கர் சல்மானின் சல்யூட் எப்படி இருக்கு? என ரசிகர்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் விமர்சனத்தை இங்கே காண்போம்..

துல்கர் சல்மானின் சல்யூட்

துல்கர் சல்மானின் சல்யூட்

குரூப் படத்தில் டானாக நடித்து அசத்திய துல்கர் சல்மான் ஹே சினாமிகா படத்தில் பேசி பேசியே அன்பு தொல்லைக் கொடுக்கும் அழகான கணவராக நடித்து இருந்தார். ஆனால், ஹே சினாமிகா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இந்நிலையில், நேரடி ஓடிடி ரிலீசாக சல்யூட் திரைப்படம் இன்று சோனி லைவ்வில் வெளியாகி உள்ளது. இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி உள்ளது.

ஃபயர்

ஃபயர்

இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் துல்கர் சல்மான், டயானா பென்டி, சானியா அய்யப்பன், மனோஜ் கே ஜெயன், லக்‌ஷ்மி கோபால்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மார்ச் 18ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த இந்த திரைப்படம் இன்றே சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி விட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் அதிகப்படியாக பாசிட்டிவ் விமர்சனங்களை போட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த சீன் ஃபயர் ஆக இருப்பதாக இந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.

பக்கா தியேட்டர் படம்

பக்கா தியேட்டர் படம்

சல்யூட் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கிரைம் த்ரில்லர். பக்கா தியேட்டர் படம். தியேட்டரில் வந்திருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும். ஆனால், ஓடிடியிலும் நிச்சயம் இந்த படம் ஹிட் அடிக்கும். துல்கர் சல்மான் ஆக்டிங் வேற லெவல். 4.25/5க்கு என இந்த ரசிகர் விமர்சித்து மார்க் எல்லாம் போட்டுள்ளார்.

ரசிகர்கள் சோகம்

ரசிகர்கள் சோகம்

ஹே சினாமிகா படம் தியேட்டருக்கு பதிலாக ஓடிடியில் வந்திருக்கலாம் என்றும், சல்யூட் திரைப்படம் ஓடிடிக்கு பதிலாக தியேட்டரில் வந்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பதை தவற விட்டு விட்டோமே என துல்கர் சல்மான் ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் செய்து வருகின்றனர்.

விஜய் ரெஃபரன்ஸ்

விஜய் ரெஃபரன்ஸ்

துல்கர் சல்மானின் சல்யூட் படத்தில் விஜய் மற்றும் மோகன்லால் நடித்த ஜில்லா படத்தின் போஸ்டர் இடம்பெற்று இருப்பதாக விஜய் ரசிகர்கள் நோட் பண்ணி ஸ்க்ரீன் ஷாட் உடன் போட்டு துல்கர் சல்மான் படத்தை வாழ்த்தி வருகின்றனர்.

சில மைனஸ் இருக்கு

சில மைனஸ் இருக்கு

படத்தின் கதை நல்லாத்தான் இருக்கு. ஆனால், ஸ்பீடாக படம் நகரமாட்டேங்கிறது. சில இடங்களில் படம் லேக் ஆகிறது. ஆனால், மற்றபடி சல்யூட் திரைப்படத்திற்கு ஒரு நல்ல சல்யூட் அடித்து ஓடிடியில் இந்த வாரம் குடும்பத்துடன் படத்தை கண்டு ரசிக்கலாம் என இந்த ரசிகர் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

சல்யூட் கதை என்ன

சல்யூட் கதை என்ன

நேர்மையான மற்றும் புத்திசாலியான காவல் துறை அதிகாரியான அரவிந்த் கருணாகரன் (துல்கர் சல்மான்) சில எதிர்பாராத விஷயங்கள் காரணமாக நீண்ட விடுப்பில் செல்ல நேரிடுகிறது. யூனிஃபார்ம் போடாமல் இருக்கும் போது, அவருக்குள் இருக்கும் போலீஸ் அதிகாரி ஒரு பெரிய குற்றச்சம்பவத்தை கண்டுபிடிக்க எப்படி தூண்டுகிறது என்றும் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் சல்யூட் படத்தின் கதை. ஜனவரி 14ம் தேதியே தியேட்டரில் வெளியாக வேண்டிய இந்த படம் கொரோனா பரவல் காரணமாக பின் வாங்கிய நிலையில், தற்போது ஓடிடியில் ஒரு நாள் முன்பாகவே வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X