Dunki OTT Release - ஷாருக்கானின் டன்கி.. எப்போ, எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?.. ரசிகர்கள் மகிழ்ச்சி

மும்பை: ஷாருக்கான், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவான படம் டன்கி. இப்படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஷாருக்கானுக்கு இப்படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருப்பதாகவே பலரும் கூறினார்கள். இச்சூழலில் டன்கி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி உலகத்தின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தும் அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Dunki Movie Will Streaming on JIO Cinema in Feb 16

பதான் படம்: இவர் கடந்த வருடம் பதான் படத்தில் நடித்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின் ஷாருக்கான் நடித்திருக்கும் படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருப்பதால் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது.

எதிர்ப்பு வந்தாலும் 1000 கோடி ரூபாய் வசூல்: படத்தின் சிங்கிள் பாடல் வெளியானபோது அதில் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடையை வைத்து ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பலரும் படத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த வருடம் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் பதான் படம் 1000 கோடி ரூபாயை வசூலித்து மாஸ் சாதனை படைத்தது.

ஜவான்: பதான் படத்தின் மாபெரும் வெற்றி ஒட்டுமொத்த பாலிவுட்டையும் ஆச்சரியப்பட வைத்தது. இதனையடுத்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாருக்கான். அட்லீக்கு இது முதல் ஹிந்தி படம் என்பதால் எப்படிப்பட்ட வசூலை எடுத்து விமர்சனத்தை சந்திக்கப்போகிறது என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருந்தது. படத்துக்கு தமிழ்நாட்டில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வட மாநிலங்களில் பலத்த வரவேற்பு கிடைத்தது. படமும் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் ஷாருக்கான், அட்லீ ஆகிய இருவருமே ஹேப்பியில் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இரண்டு பேரும் இணைந்து மீண்டும் ஒரு படம் செய்யலாம் என்றும் கருதப்படுகிறது.

டன்கி: இப்படி கடந்த வருடம் வரிசையாக ஷாருக்கானுக்கு இரண்டு மெகா ஹிட் படங்கள் அமைந்துவிட்டன. இந்தச் சூழலில்தான் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஷாருக்கான் நடிப்பில் மூன்றாவது படமாக டன்கி வெளியானது. ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருந்த அந்தப் படத்தில் ஷாருக்குடன் டாப்ஸி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. மேலும் 470 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த வருடம் மட்டும் ஷாருக்கான் வரிசையாக மூன்று மெகா ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

டன்கி ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில் டன்கி படம் எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸாகும் என்ற தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி பிப்ரவரி 16ஆம் தேதி ஜியோ சினிமாவில் டன்கி படம் ஸ்ட்ரீம் ஆகும் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. திரையரங்குகளில் பெற்ற ரெஸ்பான்ஸை ஓடிடியிலும் டன்கி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X