Dunki On Netflix: நெட்பிளிக்ஸில் வெளியான ஷாருக்கானின் டங்கி... ஓடிடி ரசிகர்கள் கொண்டாட்டம்!
சென்னை: ஷாருக்கான் நடிப்பில் கடந்தாண்டு மொத்தம் மூன்று படங்கள் வெளியாகின. அதில் டிசம்பர் 21ம் தேதி வெளியான டங்கி திரைப்படம் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக கலெக்ஷன் செய்யவில்லை. திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத டங்கி, தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து டங்கி படத்துக்கு ஓடிடி ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
ஓடிடியில் வெளியான டங்கி: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்த டங்கி திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்குமார் ஹிரானி இயக்கிய இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் டாப்ஸி, விக்கி கௌஷல், போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ராஜ்குமார் ஹிரானி ஏற்கனவே முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அதனால் டங்கி படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. முன்னதாக பதான், ஜவான் என ஷாருக்கானும் கடந்தாண்டு இரண்டு மெகா ப்ளாக் பஸ்டர் படங்களில் நடித்திருந்தார். இதனால் டங்கி வெளியாகி ஹாட்ரிக் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், டங்கி படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஆங்கிலம் தெரியாமல் இங்கிலாந்து நாட்டுக்கு வேலைக்கு செல்வது தான் டங்கி படத்தின் ஒன்லைன் ஸ்டோரியாகும்.
ஆனால், முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே படங்களில் இருந்த தனித்துவமான மேக்கிங், திரைக்கதை டங்கி-யில் இல்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர். அதேபோல், டங்கியை தொடர்ந்து அடுத்த நாளில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பிரசாந்த் நீல் - பிரபாஸ் காம்போவில் பான் இந்தியா படமாக ரிலீஸான சலாருக்கு முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்தது.
இதனால் டங்கி படத்துக்கு இந்தி ரசிகர்களிடம் மட்டுமே வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக பதான், ஜவான் படங்களுக்கு கிடைத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் டங்கி படத்துக்கு கிடைக்கவில்லை. அதேநேரம் சலார் திரைப்படம் கடந்த மாதமே ஓடிடியில் வெளியாகிவிட்டது. ஆனால் டங்கி ஒரு மாதம் தாமதமாக இன்று தான் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. காதலர் தின ஸ்பெஷலாக நள்ளிரவு 12 மணி முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது டங்கி.
இதனையடுத்து டங்கி படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரையரங்குகளில் டங்கி பார்க்காமல் மிஸ் செய்த ரசிகர்கள் தற்போது நெட்பிளிக்ஸில் ரசித்து வருகின்றனர். அதேநேரம் டங்கி படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











