நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்னங்க சார் உங்க சட்டம்.. என்னைக்குன்னு பாருங்க!

சென்னை: என்னங்க சார் உங்க சட்டம் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தியேட்டர்கள் சரிவர திறக்கப்படாததால் பல படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. முன்னணி நடிகர்கள் பலரின் படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆனது.

தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள போதும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் பழையப்படி இன்னமும் கூட்டம் வரவில்லை.

ஓடிடியை விரும்பும் தயாரிப்பாளர்கள்

ஓடிடியை விரும்பும் தயாரிப்பாளர்கள்

இதனால் எதற்கு ரிஸ்க் என பல படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாதத்தில் மட்டும் லிஃப்ட், விநோதய சித்தம், உடன் பிறப்பே, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட பல படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகியுள்ளன.

என்னங்க சார் உங்க சட்டம்

என்னங்க சார் உங்க சட்டம்

இந்நிலையில் பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் என்னங்க சார் உங்க சட்டம் திரைப்படமும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பீச்சாங்கை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர்.எஸ்.கார்த்திக், லீடிங் ரோலில் நடித்துள்ளார்.

Recommended Video

Jeeraga Biriyani சாப்பிட்டதில்லை | Lyricist Jegan Kaviraj Interview | Filmibeat Tamil
நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

மேலும் ஐரா, பகவதி பெருமாள், ரோகினி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சன்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் படத்தின் டிரைலரும் பேசப்பட்டது. சமூக வலைதளங்களில் டிரைலர் மற்றும் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கதைக்கருவை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேரடியாக ஓடிடியில் ரிலீஸ்

நேரடியாக ஓடிடியில் ரிலீஸ்

இந்நிலையில், இப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் 29ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் ஆகியோர் தயாரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X