Perusu OTT : பெருசு படம் ஓடிடி ரிலீஸ்.. எப்போ எந்த நாள் தெரியுமா.. தரமான அடல்ட் காமெடி!

சென்னை: அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பெருசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இறந்து போன அப்பாவை வைத்து உருவான அடல்ட் காமெடி வகையை சேர்ந்த இப்படம் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில், இப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறது.

பெரிசு திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே வைபவ் அப்பா ஒரு இளைஞன் பெண்கள் குளிப்பதை பார்ப்பதை தெரிந்து கோபமாக அறைந்துவிட்டு ஒழுங்காக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்து வீட்டிற்கு செல்கிறார். பின்னர், வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபடியே இறந்து போகிறார். இதில், அவர் இறப்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால், வைபவின் அப்பா இறக்கும் போது சொல்ல முடியாத ஒரு பிரச்னை ஏற்படுகிறது. இந்த பிரச்னை முடிந்தால் தான் அப்பா இறந்ததையே வெளியே சொல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

erusu-movie-ott-release-date-announce

அப்பா இறந்த அதிர்ச்சி செய்தியை காட்டிலும், அவர் இந்த மாதிரி நிலையிலா இறந்தார் என்பதை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறது வைபவ் குடும்பம். இந்த பெரிய பிரச்னையை தீர்த்தார்களா, அப்பாவிற்கு இறுதிச்சடங்கை செய்தி முடித்தார்களா என்பது தான் மீதிக்கதை. தமிழ் சினிமாவில் பல அடல்ட் படங்கள் வெளியாகியுள்ளன. அதிலும், ஒரு சில படங்கள் அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்கும் படி அமைந்திருக்கின்றன. அந்த வகையில் பெருசு படம் முகம் சுழிக்காத வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கிறது. நடிகர் பாலகிருஷ்ணன் வைபவ் அப்பாவை பார்த்து யாருக்கும் இப்படியொரு சாவு யாருக்கும் கிடைக்காது. கொடுத்து வைத்தவர் உங்க அப்பா என கூறுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தின.

வயது முதிர்ந்த பெருசுகளுக்கு எப்போதும் கொஞ்சம் சபலம் இருக்கத்தான் செய்யும். ஒரு ஐட்டம் பாடலை பார்த்தபடியே வைபவின் அப்பா உயிரிழக்கிறார். எப்போதும் போதையில் இருக்கும் வைபவ் சொல்லும் வசனங்கள் என படம் முழுக்கு இரட்டை அர்த்த வசனங்கள் சிரிக்க வைத்தன. இந்நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியை பெற்ற நிலையில், ஓடிடியிலும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

erusu-movie-ott-release-date-announce

பெருசு படத்தில் வைபவ், சுனில், சாந்தினி தமிழரசன், நிஹாரிகா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்திருந்தார். இந்நிலையில், இப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. திரையரங்கில் கண்ட அனுபவத்தை ஓடிடி தளத்திலும் கண்டு ரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். திரையரங்கை காட்டிலும் ஓடிடி தளத்திற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே இப்படம் அதிக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழில் இதுபோன்ற அடல்ட் காமெடி படங்களை ரசிக்கவும் நேரம் கழிக்கவும் சிறந்த நேரமாக பெருசு படம் இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X