சனி- ஞாயிற்றுக்கிழமைகளை கொண்டாட ஓடிடி தளங்களில் வெளியான புது வரவுகள்…
சென்னை: ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் பல படங்கள், வெப் சீரிஸ்கள் வெளியாகி வருகின்றன.
சென்னை: ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் பல படங்கள், வெப் சீரிஸ்கள் வெளியாகி வருகின்றன.
ஹாலிவுட் ரசிகர்களுக்கும் ஒரு சூப்பரான திரைப்படம் ஓடிடியில் வெளியாகி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

வெந்து தணிந்தது காடு
ஓடிடி தளங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பால், திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் உடனடியாக ஓடிடியிலும் வெளியிடப்படுகின்றன. கொரோனா ஊரடங்கில் இருந்து முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாகவும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இந்த வாரம் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியான படங்களில், சிம்புவின் வெந்து தணிந்தது காடு முதலிடத்தில் உள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, ஏஆர் ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்த இந்தப் படம், கேங்ஸ்டர் ஜானரில் செம்ம ஆக்சன் ட்ரீட்டாக அமைந்தது. பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையைக் கிளப்பிய வெந்து தணிந்தது காடு, தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இந்தப் படத்திற்கு ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதர்வாவின் டிரிக்கர்
அதேபோல், ஏற்கனவே திரையரங்குகளில் ரிலீஸான அதர்வாவின் டிரிக்கர் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகியுள்ளது. சாம் ஆண்டன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அதர்வா போலீஸாக நடித்து மிரட்டியிருந்தார். 100 படத்தைத் தொடர்ந்து 'டிரிக்கர்' படத்தில் இணைந்த இக்கூட்டணிக்கு, இது ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதேபோல், வைபவ் நடித்துள்ள பபூன் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. அசோக் விரப்பன் இயக்கியுள்ள இந்தப் படத்தை, கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. கூத்துக் கலையை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் அரசியல் வாடையும் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.

ஹாலிவுட் ரசிகர்களுக்கு
மேலும், இந்தியில் Dobaara படம் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. டாப்ஸி நடித்துள்ள இந்தப் படத்தை அனுராக் காஷ்யப் இயக்கியுள்ளார். இது ஸ்பானிஷ் மொழியில் வெளியாகி ஹிட் அடித்த 'Mirage' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மலையாளத்தில் 'கிங் ஃபிஸ்' திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகியுள்ளது. மிக முக்கியமாக ஹாலிவுட் ரசிகர்களுக்காக 'ஜுராசிக் வோர்ல்ட் டொமினியன்' திரைப்படம், அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. ஆங்கில மொழியில் வெளியாகும் இந்தப் படத்திற்கு ஓடிடி ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

வெப் சீரிஸ்
ஓடிடி ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுவது வெப் சீரிஸ்கள் தான். அந்த வகையில் இந்தவாரம் Beyond Evil' நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதேபோல், 'The Playlist', 'Mismatched' வெப் சீரிஸ்களும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளன. மேலும், மலையாளத்தில் இருந்து Palthu Janwar திரைப்படமும் ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஹாட்ஸ்டாரில் வெளியான Palthu Janwar படத்தில் பாசில் ஜோசப், திலீஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், வார இறுதியில் 'ஹவுஸ் ஆஃப் தி டிராகன்' வெப் சீரிஸின் அடுத்த பாகம், ஹெபிஓ ஓடிடியில் வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











