தீராத விளையாட்டு பொண்ணு.. ஹாலிவுட்டை கலக்கும் மன்மதன்.. ஜாலியான எப் மேரி கில் படம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ரத்தம் கத்தி பார்க்காமல், ஹாரர் படம் பார்த்து போர் அடித்து போனால், ஜாலியா டைம் பாஸ் பண்ண ஒரு படம் பார்க்கனுங்குற ஆசை யாருக்கு தான் இருக்காது. சீரியல் கில்லர் படங்கள் ஹாலிவுட்டில் இருந்து தமிழுக்கு நிறைய படங்கள் இறக்குமதி ஆகிவிட்டன. த்ரில்லர் ஜானரில் எத்தனை வில்லன் கொலை செய்வதை பார்த்து சலித்து போயிருக்கும் எனவே, ஒரு பெண் சீரியல் கில்லரா இருந்தா எப்படி இருக்கும் என் பதை ஹாலிவுட் இயக்குநர் மாத்தி யோசித்திருக்கும் படம் எஃப் மேரி கில் படம். கொஞ்சம் அடல்ட், நிறைய காமெடியா அட்வெஞ்சர் என படம் முழுக்க ரகளையா இருக்கும்.
எஃப் மேரி கில்: அமேசான் பிரைமில் வெளியான எஃப் மேரி கில் ரொம்ப எதிர்பார்த்து ரசிக்கும் வகையான படம் இல்லை. சுமாரான படம் தான். ஆனால், படம் முழுக்க ரகளையா என்ஜாய் பண்ணி பார்க்கலாம். 30 வயதாகி முரட்டு சிங்கிளா இருக்கும் இளம்பெண் நண்பர்கள் பேச்சை கேட்டு டேட்டிங் ஆப்பில் 3 பேரை தேர்ந்தெடுத்து காதல் செய்ய நினைக்கிறார். இதற்கிடையில், டேட்டிங் ஆப் மூலம் ஒரு சீரியல் கில்லர் தடையம் இல்லாமல் பெண்களை தேடி சென்று கொலை செய்வது போன்ற சம்பவமும் நடந்து வருகிறது. சீரியல் கில்லரை ஹீரோயின் கண்டுபிடித்தாரா, தனக்கு சரியான துணையை தேடிக்கொண்டாரா என்பது தான் படத்தின் கதை.

தீராத விளையாட்டு பொண்ணு: தமிழில் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் 3 பெண்களை தேர்ந்தெடுத்து காதலிப்பார். அதில் தனக்கு யார் ஏற்ற திருமணம் செய்வது போன்ற கான்செப்ட் தான் எஃப் மேரி கில் திரைப்படமும். பார்க்கும் போது சற்று விஷால் படத்தை ஞாபகப்படுத்தினாலும், படம் முழுக்க அடல்ட் காமெடிகொட்டி கிடக்கிறது. நான்கு பெண் தோழிகள் சேர்ந்து காதல் செட் ஆகவில்லை என்று பாரில் உட்கார்ந்து புலம்புவது, பின்பு ஆன்லைட் டேட்டிங் ஆப் மூலம் காதலனை தேடி செல்வது என ஒரே ரகளை தான்.
பிரேக் அப்: இவா (லூசி ஹேலே) ஜேக் என்பவரை 10 வருடமாக காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பில் பிரேக் அப் ஆகிறது. இதனால், இவா மன உளைச்சலில் சரக்கு, தம் என்று தோழிகளுடன் உட்கார்ந்து புலம்புகிறார். கடைசி வரைக்கும் நான் மொட்டை பொண்ணாவே இருந்து செத்துடுவேன் போல. என் வயசுல அவ அவ என்னன்னமோ பன்றாங்க. நான் மட்டும் ஏன் இப்படி என முரட்டு சிங்கிள் வுமனாக வேதனைப்படும் காட்சிகள் எல்லாமே ரகளை கட்டும். கொஞ்சம் ஓபனா அடல்டா பேசியிருப்பாங்க. மத்தபடி அட்வெஞ்சரா த்ரில்லர் படம் தான்.

அட்வெஞ்சர்: கதைப்படி இவா (லூசி ஹேலே) ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் 3 பசங்களை தேர்ந்தெடுத்து டேட் செய்து அதில் யார் பெஸ்டோ அவர்களை திருமணம் செய்வதாக முடிவு செய்வார். அதற்கு தடையாக இவாவின் அக்கா வேல்ரி இருப்பார். அதையும் மீறி மிட்ச், நார்மன், காலேஜில் தன்னுடன் படித்த ஹேலே என 3 பசங்களுடன் தனித்தனியாக இவா டேட்டிங்கிற்கு செல்கிறார். இதில், ஒவ்வொரு இரவும் அட்வெஞ்சர் காமெடியாக இருக்கும். இரவு தங்க வேண்டும் என்று நார்மன் சொல்லும் போது ஆன்லைன் டேட் மூலம் சீரியல் கில்லர் கொலை நடப்பது இவாவிற்கு ஞாபகத்திற்கு வருகிறது. இதனால், நார்மனிடம் பொய் சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்.

சீரியல் கில்லர்: விஷால் படத்தையும் சிம்பு நடித்த மன்மதன் படத்தையும் கலந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அதேபோன்று எஃப் மேரி கில் திரைப்படமும் இருக்கிறது. சிம்பு காதலித்து ஏமாற்றும் பெண்களை தேடி சென்று கொலை செய்வார். இந்த படத்தில் ட்விஸ்டே அதான். யார் சீரியல் கில்லர், இவா இதிலிருந்து எப்படி தப்பித்தார் என்பது மிக சுவாரஸ்யமாக இருக்கும். முழுக்க முழுக்க அட்வெஞ்சர் நிறைந்த காமெடி படம் தான். ரொம்ப சீரியஸ் ஆன கதைகளை பார்த்து போர் அடித்தவர்களுக்கு கண்டிப்பா இப்படம் பிடிக்கும். ரொம்ப ரிலாக்ஸ் ரசித்து பார்க்கலாம். ஆண்கள் செய்யும் அனைத்து சேட்டைகளையும் ஒரு பெண் செய்திருந்தால் எப்படி இருக்கும் என்பதே படத்தின் பிளஸ் ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











