ஃபகத் பாசில் ஃபேன்ஸுக்கு குட் நியூஸ்.. ஆவேசம் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. ரெடியாகுங்க
சென்னை: இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஃபகத் பாசில். ஆரம்பத்தில் சில கஷ்டங்களை பார்த்த அவர் இப்போது தனது அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். எந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்யும் திறமை கொண்ட ஃபகத் கடைசியாக ஆவேசம் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து 50 கோடி ரூபாய்வரை வசூல் செய்திருக்கிறது. இந்தச் சூழலில் ஆவேசம் படம் ஓடிடியில் ரிலீஸாகும் தேதி குறித்து தெரியவந்திருக்கிறது.
மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ஃபேமஸான இயக்குனர் பாசில் அவரது மகன் ஃபகத் பாஸில் அவர் தற்போது இந்திய அளவில் ஃபேமஸான நடிகராக இருக்கிறார். அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை இருந்தாலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார் இதன் காரணமாக மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார்.

கண்களால் நடிப்பு: கண்களால் நடிக்கும் ஹீரோக்கள் குறைந்து வரும் நேரத்தில் ஃபகத் பாசிலோ அதனை மிகத் திறமையாக கையாண்டு வருகிறார் எனவே அவரது நடிப்பை விட அவரது கண்களுக்கு என்று ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். அலட்டல் இல்லாத நடிப்பு அவரது டயலாக் டெலிவரி பாடி லாங்குவேஜ் என ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்டிக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்
மாமன்னன்: வேலைக்காரன் படத்தில் வில்லனாக மிரட்டிய அவர் தொடர்ந்து விக்ரம் படத்தில் நடித்தார். அதனையடுத்து அவர் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். மாரி செல்வராஜ் படத்தை இயக்கியிருந்தார். அதில் ரத்தினவேல் என்ற சாதி வெறி பிடித்த கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் ஃபகத் பாசில். வில்லன் என்றாலே கத்தி பேச வேண்டும்; கத்தியால் வெட்ட வேண்டும் போன்ற டெம்ப்ளேட்டுகளை அசால்ட்டாக உடைத்து தனது மிரட்டலான நடிப்பில் எல்லோரையும் கவர்ந்து விட்டார்.
வேட்டையன்: தற்போது ரஜினிகாந்த் நடித்துவரும் வேட்டையன் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். த.செ.ஞானவேல் இயக்கும் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கவில்லை; படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கண்டிப்பாக இந்தக் கேரக்டரும் ரசிகர்களை கவரும்; ரஜினியுடனான ஸ்க்ரீன் பிரசென்ஸ் அப்படி இருக்கும் என்றும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
ஆவேசம்: இதற்கிடையே அவர் கடைசியாக ஆவேசம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருக்கிறார். கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கும் ஆவேசத்துக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். முக்கியமாக ஃபகத்தின் நடிப்பு வழக்கம்போல் அசத்தலாகவே இருந்தது. இதுவரை 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆவேசம் வசூல் வேட்டை புரிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில் ஆவேசம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் மே 17ஆம் தேதி இந்தப் படம் ஸ்ட்ரீமிங் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் படத்துக்கு ரசிகர்கள் செம வரவேற்பை கொடுத்தனர். இதன் காரணமாக ஓடிடியிலும் ரசிகர்கள் தங்களது ஆதரவை படத்துக்கு கொடுப்பார்கள் என்று ஃபகத் பாசில் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications