சிம்பு பட சீனை காப்பியடித்தார்களா? Farzi வெப்சீரிஸில் இடம்பெற்ற அந்த பார் சீன்.. விளாசும் ஃபேன்ஸ்!
சென்னை: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விஜய்சேதுபதி, ஷாகித் கபூர் மற்றும் ராஷி கன்னா நடிப்பில் வெளியான ஃபர்ஸி வெப்சீரிஸ் பிரேக்கிங் பேட் காப்பி என்று ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், ஃபர்ஸி வெப்சீரிஸின் முதல் எபிசோடான ஆர்ட்டிஸ்ட் எபிசோடில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வானம் படத்தின் காட்சி அப்படியே அப்பட்டமாக வைகக்ப்பட்டுள்ளதாக சிம்பு ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் இந்த வெப்சீரிஸ் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமேசானில் ஃபர்ஸி
கள்ள நோட்டு அடிக்க சொல்லிக் கொடுப்பது போல ஒரு வெப்சீரிஸை இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே எடுத்து அமேசான் பிரைமில் வெளியிட்டுள்ளனர். எதை பார்த்தாலும் அப்படியே வரையக் கூடிய ஆர்ட்டிஸ்ட்டாக நெகட்டிவ் ரோலில் ஷாகித் கபூர் நடித்துள்ளார். கள்ள நோட்டு கும்பலை புடிக்கும் போலீஸ் அதிகாரியாக விஜய்சேதுபதி மிரட்டல் தோரணையுடன் நடித்துள்ளார்.

ஆர்ட்டிஸ்ட்
தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி உள்ள ஃபர்ஸி வெப்சீரிஸின் முதல் எபிசோடில் ஹீரோ ஷாகித் கபூரையும் அவன் ஏன் கள்ள நோட்டு அடிக்க முயல்கிறான் என்பதையும் காட்டி உள்ளனர். ஷாகித் கபூரின் கேர்ள் ஃபிரெண்ட் அவனிடம் காசு இல்லை என்றும் பெரிய பப்பில் நடக்கும் பார்ட்டியில் கலந்து கொள்ள முடியாது என்கிறார்.

பப் சீன்
கேர்ள் ஃபிரெண்டை சந்தோஷப்படுத்த தனது காமெடி நண்பன் ஃபெரோஸை அழைத்துக் கொண்டு ஷாகித் கபூர் அந்த பப்புக்கு செல்வதும், அங்கே புத்தாண்டு பார்ட்டிக்கான டிக்கெட் விலையை கேட்டு ஷாக் ஆவதும், பப்பில் வேலை பார்ப்பவருடன் சண்டை போடும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும்.

சிம்பு பட காப்பி
சிம்பு நடிப்பில் வெளியான வானம் படத்தில் ஹீரோயினுக்காக சிம்புவும் சந்தானமும் பப் ஒன்றில் அதன் விளையை கேட்டு ஷாக்காகும் காமெடி காட்சியை அப்படியே உருவி இங்கே இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே வைத்துள்ளனர் என ஃபர்ஸி வெப்சீரிஸை சிம்பு ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

வேதம் ரீமேக்
இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான வேதம் படத்தின் தமிழ் ரீமேக் தான் சிம்பு நடித்த வானம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் இடம்பெற்ற காட்சியைத்தான் ஃபர்ஸி இயக்குநர்கள் காப்பி அடித்து வைத்துள்ளனர் என அல்லு அர்ஜுன் ரசிகர்களும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிரேக்கிங் பேட் கதை
தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய இயக்குநர்கள் அந்தவொரு சீனை மட்டும் காப்பி அடிக்கவில்லை. மொத்த கதையுமே பிரேக்கிங் பேட் வெப்சீரிஸின் கதை தான் என பிரேக்கிங் பேட் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 3 மணி நேரத்தில் படமாக எடுக்க வேண்டிய கதையை சும்மா 8 எபிசோடுகளாக ரம்பம் போடுவது போல போட்டு லெந்தாக்கி ஓடிடியில் காசு பார்த்து வருகின்றனர் என்றும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











