ஃபர்ஸி வெப் சீரிஸ் செய்த செம சாதனை - விஜய் சேதுபதிக்கு ஹிந்தியில் நிரந்தர இடம் கிடைத்துவிட்டதா?

மும்பை: ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி நடித்த ஃபர்ஸி வெப் சீரிஸ் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர் என்ற சாதனையை படைத்துள்ளது.

ஃபேமிலி மேன் என்ற வெப் சீரிஸ் கடந்த 2019ஆம் ஆண்டு அமேசான் ப்ரைமில் வெளியானது. ராஜ் மற்றும் டிகே அந்த வெப்சீரிஸை இயக்கியிருந்தனர். மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்த வெப் சிரிஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வெப் சீரிஸ் மூலம் ராஜ் மற்றும் டிகேவும் பிரபலமடைந்தனர்.

சர்ச்சையை கிளப்பினாலும் வெற்றி பெற்றது

சர்ச்சையை கிளப்பினாலும் வெற்றி பெற்றது

ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் முதல் பாகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் உருவாக்கப்பட்டது. இதில் சமந்தாவும் நடித்திருந்தார். இந்த பாகமும் வெற்றி பெற்றாலும் விடுதலைப்புலிகள் குறித்தும், தமிழ் ஈழ போராட்டம் குறித்தும் இயக்குநர்கள் தவறாக சித்தரித்துவிட்டனர் என்ற விமர்சனத்தையும் பலர் முன்வைத்தனர். ஆனால் அந்த வெப் சீரிஸை பலரும் ரசிக்கவே செய்தனர்.

ராஜ், டிகே இயக்கத்தில் வெளியான ஃபர்ஸி

ராஜ், டிகே இயக்கத்தில் வெளியான ஃபர்ஸி

இந்நிலையில் இவர்களின் லேட்டஸ்ட் படைப்பாக ஃபர்ஸி கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. கள்ளநோட்டை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த இந்த வெப் சீரிஸில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, கே.கே.மேனன், ரெஜினா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 9ஆம் தேதி வெளியான இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஹிந்தியில் கெத்து காட்டிய விஜய் சேதுபதி

ஹிந்தியில் கெத்து காட்டிய விஜய் சேதுபதி

அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. குறிப்பாக ஹிந்தியில் அவரே டப்பிங் கொடுத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதேசமயம் தமிழில் அவர் டப்பிங் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் சரவணகுமார் குரல் கொடுத்திருந்தார். மேலும் ஷாகித் கபூருக்கு தமிழில் நடிகர் ஜீவா கொடுத்திருந்த டப்பிங்கும் ரசிக்கும்படி இருந்தது.

 ஃபர்ஸி வெப் சீரிஸ் செய்த சாதனை

ஃபர்ஸி வெப் சீரிஸ் செய்த சாதனை

இந்நிலையில் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வெப் சீரிஸ் என்ற சாதனையை ஃபர்ஸி படைத்திருக்கிறது. ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் ஆய்வில், இதுவரை மூன்று கோடியே 70 லட்சம் பேர் ஃபர்ஸி வெப் சீரிஸை பார்த்திருக்கின்றனர் என்பது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து ஃபர்ஸி வெப் சீரிஸ் குழுவுக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

ஹிந்தியிலும் கலக்கும் விஜய் சேதுபதி

ஹிந்தியிலும் கலக்கும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் ஃபர்ஸி வெப் சீரிஸ் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமானார். அறிமுகமான ஆரம்பத்திலேயே ஹிந்தியை கற்றுக்கொண்டு அவரே டப்பிங் கொடுத்தது பாராட்டை பெற்றது.

அதேபோல் அவர் தற்போது கத்ரீனா கைஃபுடன் மெர்ரி கிறிஸ்துமஸ், ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்துவருகிறார். இதில் ஜவான் படத்தை அட்லீ இயக்குவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் சீரிஸாக ஃபர்ஸி தற்போது இருப்பதால் மேலும் பல ஹிந்தி படங்களும், வெப் சீரிஸ்களும் விஜய் சேதுபதிக்கு புக் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X