OTT Release Movies: ஓடிடியில் இன்று என்னென்ன படங்கள் ரிலீஸ் தெரியுமா?
சென்னை: குடும்பத்தோடு திரையரங்குகளுக்கு சென்று படங்கள் பார்ப்பது எட்டாக்கனியாக இருந்த நிலையில்,அனைத்தும் டிஜிட்டல் உலகமாக மாறிய நிலையில், மொபைலிலேயே எக்கச்சக்க படங்களை பார்க்க முடிகிறது. அதுவும் இப்போது ஓடிடியின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் பலத் திரைப்படங்கள் வெளியான நிலையில் பிப்ரவரி 16ந் தேதியான இன்று பல படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
மிஷன் சாப்டர் 1: நடிகர் அருண் விஜய்யின் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் மிஷன் சாப்டர் 1. இந்த படத்தை ஏ.எல். விஜய் இயக்கி உள்ளார். இதில், அருண் விஜய்யுடன் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல் மற்றும் அப்பா மகள் சென்டிமென்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மிஷன் சாப்டர் 1 பிப்ரவரி 16 ஆம் தேதியான இன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

ரூட் நம்பர் 17: நேநி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் 'ரூட் நம்பர் 17'. இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இயக்கியுள்ளார். இவர் பிரபல மலையாள இயக்குநர் தம்பி கண்ணம் தானம் அவர்களிடம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதுமட்டுமல்ல இதே நிறுவனத்தின் தயாரிப்பில் 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் என்கிற படத்தையும் இயக்கியுள்ளார். இந்த 'ரூட் நம்பர் 17' படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார். இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானப்பணிப்பெண்ணாக பணியாற்றுபவர். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தை அமேசான் பிரைமில் இன்று பார்க்கலாம்.
தி கேரளா ஸ்டோரி: விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிதப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இந்தியில் உருவான இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்கில் இத்திரைப்படம், பிப்ரவரி 16ந் தேதியான இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
சலார்: கேஜிஎஃப் 2 படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து சலார்'படத்தை இயக்கினார். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் .22ந்தேதி தேதி உலக முழுவதும் வெளியாகியது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இந்தி வெர்சன் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இன்று பார்க்கலாம்.
ஷாருக்கானி டங்கி: ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்த டங்கி திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளியது. இப்படத்தில் டாப்ஸி, விக்கி கெளஷல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நேற்று வெளியானது.


Click it and Unblock the Notifications











