twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Film Review ... DON'T LOOK UP...உலகம் அழியப் போகிறது, இப்படியாடா அலட்சியமாக இருப்பீர்கள்?

    |

    வழக்கமாக உலகை அழிக்க வரும் எரிகல், ஏலியன்களை அழிக்க அமெரிக்கா மட்டுமே முயற்சிக்கும், அமெரிக்க ஹீரோ மட்டுமே காப்பாற்றுவார் போன்ற வழக்கமான ஹாலிவுட் கதையை நகைச்சுவை கலந்து சட்டையர் செய்து எடுக்கப்பட்ட படம் தான் 'டோன்ட் லுக் அப்'. ஓடிடி தளத்தில் நெட்ஃபிலிக்ஸில் கடந்த மாதம் வெளியான இப்படம் டாப் டென் லிஸ்டில் உள்ளது.

    Recommended Video

    Don't Look Up Movie Review in Tamil by Poster Pakiri | Leonardo DiCaprio |J ennifer Lawrence

    இதுவரைக்கும் 'நெகட்டிவ்’ என்கிற வார்த்தைக்கு இப்படி சந்தோஷப்பட்டதே இல்லை.. நடிகை த்ரிஷா ஹாப்பி!இதுவரைக்கும் 'நெகட்டிவ்’ என்கிற வார்த்தைக்கு இப்படி சந்தோஷப்பட்டதே இல்லை.. நடிகை த்ரிஷா ஹாப்பி!

    டைட்டானிக் ஹீரோ டிகார்பியோ

    டைட்டானிக் ஹீரோ டிகார்பியோ

    உலகை அச்சுறுத்த 12 கிலோ மீட்டர் விட்டத்தில் ஒரு எரிகல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக வானியலாளர்கள் கதாநாயகன் டிகார்பியோவும் (டைட்டானிக் பட ஹீரோ) அவரது சக விஞ்ஞானி ஜெனிஃபர் லாரன்ஸ் ஆகியோர் கண்டுபிடிக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்ததை அமெரிக்க தலைமைக்கும், ஊடகங்களில் சொல்வதும் அவர்கள் அதை சீரியசாக எடுத்துக்கொள்ளாததை சுவாரஸ்யமாக நகைச்சுவை கலந்து கொடுத்துள்ளது படத்தின் சாராம்சம்.


    தினமும் லட்சக்கணக்கான எரிகற்கள் பூமியை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றன. அவைகள் பூமியை தாக்கினால் அணுகுண்டு தாக்கிய பேரழிவு ஏற்படும் என்பது விஞ்ஞான உண்மை, ஆனால் நல்வாய்ப்பாக அவைகள் அனைத்தும் பூமியை விட பல கோடி மடங்கு சிறிய அளவில் உள்ளதும், அவைகள் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் பொழுது எரிந்து விடுவதும் நமக்கு பாதுகாப்பாக அமைகிறது.

    உலகத்தை அழித்த எரிகல்

    உலகத்தை அழித்த எரிகல்

    65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்கள் அழிந்ததற்கு முக்கிய காரணம் எரிகல் பூமியின் மீது மோதி அதனால் ஏற்பட்ட பிரளயம் காரணமாக டைனோசர் போன்ற உயிரினங்கள் அழிந்தது என படித்திருக்கிறோம் அதேபோன்றதொரு ஆபத்து பூமிக்கு நெருங்குவதை வானியல் நிபுணரான ரேண்டல் மின்டி(லியனார்டோ டிகாப்ரியோ) மற்றும் அவரது சக வானியல் நிபுணர் டிபியாஸ்கி (ஜெனிஃபர் லாரன்ஸ்), இருவரும் பூமியை நோக்கி வேகமாக வரும் மிகப்பெரும் விண்கல் ஒன்றைத் தொலைநோக்கி வழியாகக் கண்டுபிடிப்பார்கள்.

    பூமியை அழிக்க வரும் எரிகல்

    பூமியை அழிக்க வரும் எரிகல்

    அந்த விண்கல் இன்னும் 6 மாதம் 12 நாளில் உலகைத் தாக்கும் என்று டிகாப்ரியோ கணக்கிடுவார். அந்த விண்கல் மோதினால் லட்சக்கணக்கான மடங்கு ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட அதிகமாக இருக்கும் என்று அவர்கள் கணக்கிடுகிறார்கள். இந்த ஆபத்தை உடனடியாக அமெரிக்க தலைமையிடம் சொல்லி தடுத்து நிறுத்த வேண்டும் என துடிக்கிறார். உடனடியாக இது குறித்து உடனடியாக பிடிசிஓ தலைமை அதிகாரியிடம் (Planetary Defense Coordination Office) தெரிவிக்கிறார்கள்.

    இதுதான் கதை

    இதுதான் கதை

    Planetary Defense Coordination Office என்பது நாசாவால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. நிஜத்தில் அவ்வமைப்பு இயங்கி வருகிறது. படத்தில் அவ்வமைப்பின் தலைமை அதிகாரியாக வரும் ராப் மோர்கனிடம் தெரிவிப்பார்கள். அவரும் அந்த ஆபத்தை உணர்ந்து உடனடியாக போர் விமானத்தை அனுப்பி இருவரையும் வாஷிங்டனுக்கு அழைப்பார். உலகைக் காப்பாற்றும் நோக்கத்துடன் ஆராய்ச்சிக் குறிப்புகளை எடுத்துக் கொண்டு செல்லும் டிகார்பியோ குழுவினருக்கு அதை எந்த அளவு அலட்சியமாக அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரமும், பென்டகன் தலைமை அதிகாரியும், ஊடகங்களும் மற்றவர்களும் கையாளுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக விளக்குவதே இப்படத்தின் கதை.

    ட்ரம்பை சட்டையர் செய்கிறார்களா?

    ட்ரம்பை சட்டையர் செய்கிறார்களா?

    உலகில் அதிக அறிவாளிகள் உள்ள நாடு என பறைசாற்றபடும் அமெரிக்காவில் காணப்படும் பல்வேறு விஷயங்களில் நவீன விஞ்ஞான உண்மைகளை ஏற்காமல் இருப்பதை கொரோனா காலக்கட்டத்தில் நாம் கண்கூடாக பார்க்கிறோம். தலைமை பொறுப்பில் அடிப்படை ஞானம் இல்லாதவர்கள் அமர்ந்தால் என்ன நடக்கும் என்பதை இப்படத்தில் விளக்கியுள்ளார்கள். லேசாக முன்னால் ஜனாதிபதி ட்ரம்பையும், அமெரிக்காவை ஆட்டிப் படைக்கும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளையும், ஊடகங்களையும் சட்டையர் செய்துள்ளார்கள்.

    சீரியசான விஷயத்தை இப்படியா பார்ப்பார்கள்

    சீரியசான விஷயத்தை இப்படியா பார்ப்பார்கள்

    படத்தின் முக்கிய அம்சமே பூமி எரிகல்லால் மோதி அழிய போகிறது என்பதுதான். அந்த சீரியஸான விஷயத்தை டிகார்பியோ அவரது துணை விஞ்ஞானி இன்னொரு தலைமை விஞ்ஞானி தவிர உலகில் மற்ற அனைவரும் காமெடியாக பார்ப்பது தான் இப்படத்தின் மையக்கரு. அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் நுழையும் பொழுதே இந்த நகைச்சுவைக் காட்சிகள் ஆரம்பமாகி விடுகின்றன.

    அடடா ஜனாதிபதியின் அறிவு

    அடடா ஜனாதிபதியின் அறிவு

    வெள்ளை மாளிகை அழைப்பின்பேரில் மூன்று வானவியல் நிபுணர்ளும், பென்டகன் தலைமை அதிகாரியும் அங்கு வந்து விடுகிறார். அப்பொழுது அங்கு வரும் பெண் ஜனாதிபதி ஓர்லியன் (மெர்லின் ஸ்ட்ரிப்) அவரது ஆலோசகர் ஜேசன் ஓர்லியன் (ஜோனா ஹில்) (அவரது மகனே அவரது ஆலோசகர்) விஷயத்தை சுருக்கமாக சொல்லுங்களேன் என்றனர். எரிகல் மோத உள்ளதையும், எரிகல் மோதும்போது உலகம் அழியும் என்பதையும் அவர்கள் விளக்கும்போது, எரிகல் 12 கிலோ மீட்டர் விட்டம் தானே இவ்வளவு பெரிய பூமியில் அது என்ன செய்துவிடும் என அப்பாவியாக கேட்கிறார் ஜனாதிபதி.

    எரிகல் மோதி உலகம் அழியும் நிலை

    எரிகல் மோதி உலகம் அழியும் நிலை

    எரிகல் மோதும் ஆபத்து குறித்தும் பல லட்சம் மடங்கு ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டை விட சக்தி வாய்ந்த மோதலாக இருக்கும் என்பதையும் அவர்கள் பயத்துடன் விவரிக்க அதை பற்றி கவலையே படாமல் இன்னும் எத்தனை மாதங்களில் இது பூமியின் மீது மோதும் என்று கேட்கிறார் ஜனாதிபதி. 6 மாதம் 12 நாட்களில் என்று சொல்ல நமக்கு அடுத்த மாசம் தேர்தலில் இருக்கிறது அல்லவா? சரி தேர்தல் முடிந்தவுடன் அதை பார்த்துக் கொள்ளலாமே என்று அசால்டாக சொல்லி செல்கிறார் ஜனாதிபதி.

    பெரிய அதிகாரியின் சின்னபுத்தி

    பெரிய அதிகாரியின் சின்னபுத்தி

    மேலும் அவர்கள் வற்புறுத்த எனக்கு நேரமில்லை கொஞ்சம் பொறுங்கள் என்று தனது அறைக்குள் சென்று விடுகிறார் ஜனாதிபதி. அங்கு எதைப்பற்றியும் கவலைப்படாமல் பர்த்டே கேக் வெட்டுவது மற்ற விஷயங்கள் ஜாலியாக இருக்கிறார். இந்த இடைப்பட்ட நேரத்தில் இலவசமாக கிடைக்கும் ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டிலை விஞ்ஞானிகளுக்கு கொடுத்து ஒவ்வொன்றுக்கும் 10 டாலர் கட்டணம் வசூலிக்கிறார் பென்டகன் தலைமை அதிகாரி என்பதை நகைச்சுவையாக சொல்லியிருப்பார்கள்.

    அலட்சியம் காட்டும் வெள்ளை மாளிகை

    அலட்சியம் காட்டும் வெள்ளை மாளிகை

    வெள்ளை மாளிகையின் மோசமான அலட்சியத்தை அடுத்து ஊடகங்களுக்காவது தகவல் தெரிவிக்கலாம் என்று நினைக்கிறார்கள் டிகார்பியோ குழுவினர். அங்கு அதைவிட நகைச்சுவைகள் அரங்கேறுகிறது. ஊடகங்கள் என்றாலே அனைத்து ஊர்களிலும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள் போலிருக்கிறது உலகம் அழியப்போவதை சொல்ல மறுநாள் லைவ் ரிலேவில் நீங்கள் உங்கள் கருத்தை சொல்லலாம் என்று சொல்கிறது அமெரிக்காவின் பெரிய ஊடக நிறுவனம்.

    இதுதான் ஊடக நிலை

    இதுதான் ஊடக நிலை

    நாட்டை காக்க போகும் பெருமிதத்துடன் ஊடகத்தின் அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறார்கள் மூன்று விஞ்ஞானிகளும். எதிரில் ஒரு ஆல்பம் பாடகி அமர்ந்திருக்க லைவ் ரிலேவுக்கு முதலில் ஆல்பம் பாடகியை அழைக்கப்படுகிறார். எவ்வளவு பெரிய விஷயத்தை உலகுக்கு சொல்ல நாம் உட்கார்ந்திருக்கிறோம் இவர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று சலித்துக் கொள்கிறார்கள் விஞ்ஞானிகள். பாடகி தனது ஆல்பத்தை வெளியிடுவதற்காக போலியாக கணவனுடன் பிரேக்கப் செய்ததாக லைவ்ரிலேவில் புலம்ப கணவனை நேரலையில் அழைத்து சேர்த்து வைக்கிறது ஊடக நிறுவனம், அது ஒரு ப்ரமோஷன் ப்ரோகிராம்.

    அலட்சியப்படுத்தும் ஊடகங்கள்

    அலட்சியப்படுத்தும் ஊடகங்கள்

    அடுத்து அழைக்கப்படும் டீகார்பியோ குழுவினர் உலகை அச்சுறுத்தும் எரிகல் பற்றி பேச அது குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் நகைச்சுவையாக அதை மாற்றி அனுப்பி வைக்கின்றனர் தொலைக்காட்சியினர். பெண் விஞ்ஞானி கோபத்துடன் திட்டிவிட்டு அங்கிருந்து வெளியேற அவரை மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள் மக்கள். மொத்தத்தில் யாருமே உலகை பாதிக்கும் அந்த எரிகல்லால் உலகம் அழியப்போகிறது என்பது பற்றி கவலை இல்லாமல் திரிகிறார்கள்.

    அரசியலாக்கப்படும் எரிகல் பிரச்சினை

    அரசியலாக்கப்படும் எரிகல் பிரச்சினை

    இதனிடையே ஜனாதிபதியின் ஆபாச காட்சிகள் சிக்கியதால் தேர்தலில் அவருக்கு பிரச்சினை வருவதை கணக்கில் கொண்டு உலகை காப்பாற்ற புறப்படுவது போல் மூன்று விஞ்ஞானிகளையும் அழைத்து அவர்கள் மூலம் எரிகல் பிரச்சினையை சொல்ல வைத்து தான் உலகை காப்பாற்ற புறப்பட்டதாக மார்தட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்யும் ஜனாதிபதி, எரிகல்லை உடைக்க மிஸைல்களை அனுப்பி வைக்கிறார்.

    அங்குதான் வருகிறது ட்விஸ்ட். பெரிய கார்ப்பரேட் முதலாளி ஜனாதிபதியை சந்தித்து ஏரிகள் முழுவதும் நூற்றுக்கணக்கான ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள கனிமங்களால் ஆனது அதை பக்கத்தில் வரவிட்டு அணு ஆயுத குண்டுமூலம் உடைத்து கடலில் விழ வைத்து குபேரர்களாகலாம் என ஆசைக்காட்டுகிறார். இதை ஏற்று அனுப்பிய மிஸைலை திரும்ப வரவழைக்கிறார் ஜனாதிபதி.

    காதலை முறித்துக்கொள்ளும் விஞ்ஞானியின் காதலன்

    காதலை முறித்துக்கொள்ளும் விஞ்ஞானியின் காதலன்

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் விஞ்ஞானிகள், இதற்கு நடுவே பெண் விஞ்ஞானியின் காதலன் அவருடைய மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறி பிரேக்கப் செய்கிறார் நொந்துபோன பெண் விஞ்ஞானி சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு செல்கிறார். தொலைக்காட்சி செய்தியாளருடன் காதல் ஏற்பட்டு அவருடன் வாழ்கிறார் டிகார்பியோ. இதனால் குடும்பத்தில் விரிசல் ஏற்படுகிறது. இப்படியாக கதை நகர்கிறது

    ஞான சூன்யமாக அதிபர் இருந்தால் இப்படித்தான்

    ஞான சூன்யமாக அதிபர் இருந்தால் இப்படித்தான்

    இப்படியே யாரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாக இருக்க எரிகல் பூமியை நெருங்கி வந்துவிடுகிறது. அதன் பின் பூமி தாக்கப்பட்டதா? அழிந்ததா? அழிவுக்கு முன் காப்பாற்றினார்களா, மக்கள் பிழைத்தார்களா? என்பதே மீதி கதை. முக்கியமான சீரியஸான விஷயத்தை நகைச்சுவை கலந்து பெரிய அளவில் சட்டையர் செய்துள்ளார் படத்தின் இயக்குநர், கதாசிரியர் ஆடம் மெக்கே. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர் விஞ்ஞான அறிவில்லாத ஞானசூன்யமாக இருந்தால் நாடு எப்படி மாறும் என்பதை அழகாக சொல்லி உள்ளார்கள்.

    ஊடகங்களை சட்டையர் செய்யும் படம்

    ஊடகங்களை சட்டையர் செய்யும் படம்

    அதே நேரம் முக்கியமான பிரச்சினையை மீடியாக்கள் எப்படி விளம்பரப் பொருளாக பயன்படுத்தி டிஆர்பி ஏற்றிக் கொள்கிறார்கள் என்பதையும், பொதுமக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மீம்ஸ் போடுவதிலும் உண்மையை ஆராயாமல் இருப்பதையும், பெரிய நடிகர்கள் பின்னால் செல்வதையும் அழகாக விவரித்துள்ளார்கள் படக்குழுவினர்.

    நெட்பிலிக்சில் காணலாம்

    நெட்பிலிக்சில் காணலாம்

    ஓடிடி தளத்தில் டாப் 10 வரிசையில் உள்ள இந்தப்படம் கடந்த டிசம்பர் மாதம் நெட்ஃபிலிக்ஸில் வெளியானது. டைட்டானிக் பட ஹீரோ டிகார்பியோ கதாநாயகனாக வானியல் நிபுணராக அசத்தியுள்ளார். பெண் ஜனாதிபதியும், எலான் மாஸ்க்கை நினைவூட்டும் கார்பரேட் முதலாளியும், மற்ற கதாபாத்திரங்களும் அசத்தியுள்ளனர். படம் ஆரம்பித்தது முதல் முடிவு வரை நகைச்சுவையை கலந்து சுவாரஸ்யமாக வேகமாக செல்கிறது அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய படம்.

    English summary
    Film Review ... DON'T LOOK UP...The world is going to end. Will you be so indifferent?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X