twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Film review...’கடைசீல பிரியாணி’...சைகோ கொலையாளியும், சிறுவனும், கடவுள் விஜய் சேதுபதியும்

    |

    சென்னை; அப்பாவை கொன்றவனை பழிவாங்க புறப்பட்ட சகோதரர்கள் 3 பேர் எதிர்பாராமல் 2 பேர் உயிரிழக்க கடைசிப் பையன் மட்டும் கொலையாளியின் மகனிடம் சிக்கிக்கொள்ள பிறகு நடப்பதுதான் கதை. ஓடிடி தளத்தில் நெட்ஃபிலிக்சில் வெளியாகியுள்ளது 'கடைசீல பிரியாணி' திரைப்படம்.

     தீயாய் ஒர்க் அவுட் செய்யும் விஜய் பட நடிகை.. இந்த படம் வந்து 2 வருஷம் ஆயிடுச்சா? தீயாய் ஒர்க் அவுட் செய்யும் விஜய் பட நடிகை.. இந்த படம் வந்து 2 வருஷம் ஆயிடுச்சா?

    1.55 மணி நேர ஆக்‌ஷன் படம் ’கடைசீல பிரியாணி’

    1.55 மணி நேர ஆக்‌ஷன் படம் ’கடைசீல பிரியாணி’

    மக்களைக் கவர படம் எடுக்கும்போது மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்டமாக படம் எடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் மத்தியில் சாதாரணமாக 1.55 நிமிடம் ஓடும் வகையில் க்ரைம், திரில்லர் படத்தை எடுத்துள்ளார் தயாரித்து-இயக்கிய நிஷாந்த் காலிடிண்டி. படம் ஆரம்பித்த அரைமணி நேரம் மெதுவாக நகர்ந்தாலும் அடுத்த 1.25 நிமிடம் புயல் வேகம் தான். கேரளாவின் அழகு மிகுந்த ரப்பர் எஸ்டேட்டில் எடுத்துள்ளார்கள்.

     பழிவாங்க புறப்பட்ட சகோதரர்கள்

    பழிவாங்க புறப்பட்ட சகோதரர்கள்

    படத்தின் கதை பெரிய அளவில் ஒன்றுமில்லை, ஆங்கிலப்படம் போல் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே படம். மனைவி, மாமனாரின் கொடூர குணம் பிடிக்காமல் மூன்றாவது மகன் சிக்குபாண்டியுடன் வெளியேறி தனியாக வசிக்கிறார் தந்தை. மகனை படிக்க வைக்கிறார். ஒருநாள் அவரை கேரள ரப்பர் தோட்ட அதிபர் ஒருவர் கொலை செய்து விடுகிறார். அப்பாவை கொன்றவர்களை பழிவாங்க அம்மா வற்புறுத்தலின் பேரில் கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு தம்பியுடன் புறப்படுகிறார் மூத்த மகன் இடையில் கடைசி தம்பியையும் வலுக்கட்டாயமாக உடன் அழைத்துச் செல்கின்றனர்.

     கொலை செய்தபின்னர் கொலையாளியிடம் சிக்கும் சகோதரர்கள்

    கொலை செய்தபின்னர் கொலையாளியிடம் சிக்கும் சகோதரர்கள்

    ரப்பர் தோட்டத்துக்குள் நுழைந்து வீட்டை நோட்டமிட்டுக் பெரியவரை கொலை செய்ய திட்டம் போடும் பொழுது அவரது மகனும் பிரபல ரவுடியின் கூட்டாளி இருப்பதை அங்கு பார்க்கிறார்கள். பின்னர் அவனுக்கு தெரியாமல் பெரியவரை கடத்தி வந்து கொலை செய்கிறார்கள். இதில் கடைசி தம்பி சிக்கு பாண்டிக்கு விருப்பம் இல்லை. கொலை நடக்கும் நேரத்தில் இதில் நடு தம்பி தேவையில்லாமல் சைக்கோ கொலையாளியான மகனிடம் சிக்கிக்கொள்ள அங்கு வந்த மூத்த மகன் அவனை மீட்டு அங்கிருந்து மூவரும் ஒரு வேனில் ஏறி தப்பிச் செல்கின்றனர்.

    கொலையாளிகளே மரணம்

    கொலையாளிகளே மரணம்

    அதற்குப் பின் நடப்பது தான் சுவாரசியமான சம்பவங்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வேனில் தப்பிய 3 சகோதரர்களில் மூத்தவர்கள் இருவரும் எதிர்பாராமல் வேனில் இருந்து கீழே விழுந்து மரணம் அடைய அங்கு வரும் போலீஸ், வேன் டிரைவரையும், அவரது மகன் மற்றும் சிக்குப் பாண்டியையும் பிடித்து அனைவரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றிச் செல்லும்போது மூவரும் ஜீப்பில் இருந்து தப்பி செல்கின்றனர். அதன் பின்னர் நடக்கும் விறு விறு சம்பவங்களே கதை.

    முக்கிய பாத்திரத்தில் விஜய் சேதுபதி

    முக்கிய பாத்திரத்தில் விஜய் சேதுபதி

    போலீஸிடம் இருந்து தப்பும் சிக்குப்பாண்டியை பிடித்து கொலை செய்யப்பட்டவரின் மகனான ரவுடியிடம் ஒப்படைக்கிறது போலீஸ் போலீஸார் முன்னிலையில் அவனைக்கொல்ல ரவுடி முயல சிக்குப்பாண்டி அவர்களை தள்ளிவிட்டு தப்பி காட்டுக்குள் ஓடிவிடுகிறான். இந்த படத்தின் ஆரம்ப காட்சி களையும் படத்தின் கதையையும் விஜய் சேதுபதி ஆரம்ப காட்சியில் பின்னனி குரல் மூலம் சொல்கிறார் அவ்வப்போது இடையிடையே விஜய் சேதுபதியின் குரல் மூலம் படம் நகர்கிறது.

    எதிர்பாராத கிளைமாக்ஸ்

    எதிர்பாராத கிளைமாக்ஸ்

    அவர்களை எப்படியாவது பிடித்துக் கொண்டு வரவேண்டும் தன் கையால் கொலை செய்ய வேண்டும் என்று மிரட்டுகிறான் ரவுடி ஊரில் பெரிய ரவுடி என்பதால் போலீசார் அவன் கூறியபடி செய்வது நெருடுகிறது. அதன்பின் அந்த சிறுவன் பிடிபட்டனா? முடிவு என்ன ஆனது? ரவுடியை சிறுவன் பழிவாங்கினாரா? என்பதுதான் கதை. இதில் யாரும் எதிர்பாராத திருப்பமாக கிளைமாக்சில் விஜய் சேதுபதி கடவுளாக வருவார்.

    மினி பட்ஜெட்டில் ஒரு ஹாலிவுட் ஸ்டைல் படம்

    மினி பட்ஜெட்டில் ஒரு ஹாலிவுட் ஸ்டைல் படம்

    மினி பட்ஜெட் படமாக இருந்தாலும் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக படத்தை கொண்டு சென்றுள்ளனர். தமிழ் படம் என்றாலும் கேரளாவில் நடப்பதால் பல காட்சிகள் மலையாளத்தில் பேசுவதால் தமிழ் ரசிகர்களுக்கு புரிவது சற்று கடினம் தான் ஆனால் ஆங்கில டைட்டில் அதை ஈடு செய்கிறது. அதிலும் மூத்த அண்ணனாக வரும் வசந்த் ரவியும், சிக்குப்பாண்டியாக நடிக்கும் விஜய்ராமும், சைக்கோ ரவுடியாக வரும் மலையாள நடிகர் ஹக்கீம் ஷாவும் ஒவ்வொருவரும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

    க்ரைம் பட பிரியர்களுக்கு ஏற்ற படம்

    க்ரைம் பட பிரியர்களுக்கு ஏற்ற படம்

    எழில் கொஞ்சும் கேரள மலைப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கேமரா, ஒலி, ஒளிப்பதிவு, இசை அற்புதமாக உள்ளது. படத்தில் காட்சிக்கு காட்சி தொய்வில்லாமல் வேகமாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். படத்தில் ஒரு இடத்தில் கூட தொய்வில்லை, சாதாரண திரைப்படத்தில் உள்ள காட்சிகளும், பாடல்கள் எதுவும் இல்லாமல் மிக அழகாக படமாக்கி விறுவிறுப்பாக ஆங்கில படம் போல் கொண்டு சென்றுள்ளது சிறப்பு. ஓடிடி தளத்தில் நெட்பிலிக்சில் இந்தப் படம் உள்ளது. க்ரைம் படம் பார்க்க விரும்புபவர்கள் அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.

    English summary
    Film review ... ‘Kadaseela Biriyani’ ... Psycho killer, boy, God Vijay Sethupathi ....
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X