Vaazhai OTT: மாரி செல்வராஜின் வாழை.. எந்த ஓடிடியில்..எப்போது பார்க்கலாம்!
Vaazhai OTT: கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வாழை திரைப்படத்தை பார்ப்பவர்கள் அனைவரும்,கண் கலங்கியும், தழு தழுத்த குரலில் படத்தை பாராட்டி பேசி வருகின்றனர். இதனால், படத்தின் மீதான எதிர்ப்பு மக்களிடம் அதிகரித்து நல்ல வசூலை பெற்று வரும் நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில், கலையரசன், திவ்யா துரைசாமி, மலையாள நடிகை நிகிலா விமல் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்ததை அடுத்து படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியானது.

படத்தின் கதை: தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், படிக்க விரும்பும் சிறுவன் சிவணைந்தன், வறுமையான குடும்ப சூழலில் வங்கிக் கடனை அடைப்பதற்காக வாழைத்தார் சுமக்கும் வேலைக்கு செல்கிறார். அங்கு குறைவான சம்பளத்திற்கு வேலை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பள உயர்வு கேட்டும் அந்த ஊர்க்காரர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
உணர்வுபூர்வமான கதை: தொழிலாளர்கள் நடத்தி போராட்டத்தை சமாளிக்க முடியாமல், வேறு வழியின்றி சம்பள உயர்வுக்கு ஒப்புக் கொள்கிறார் முதலாளி. சம்பள உயர்வு வாங்கியதை மனதில் வைத்துக் கொண்டு, தன்னிடம் பணியாற்றும் மக்களை வேறொரு பிரச்னைகளுக்குள் சிக்க வைத்து விடுகிறார் அவர். இந்த ஆபத்தில் இருந்து சிவணைந்தன் தப்பித்தாரா? வாழைத்தார் சுமக்கும் பணியில் இருந்து அந்த சிறுவனுக்கு விடுதலை கிடைத்ததா என்பது தான் வாழை படத்தின் கதை
ஆயிரம் மடங்கு மரியாதை: மிகவும் உணர்வு பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை பார்த்த மணிரத்னம், பாலா, பாரதிராஜா அனைவரும் பாராட்டிய நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது எக்ஸ் தளபக்கத்தில், மாரி செல்வராஜ், உன் வாழ்க்கையின் நல்ல பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு உன் படைப்புகளை பார்க்கத் தொடங்கினேன். பிரமிப்பாக இருந்தது. இப்போது, #Vaazhai ல் உன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையும் பார்த்தபிறகு, உன்மீதான மரியாதை ஆயிரம் மடங்காய் அதிகரித்துவிட்டது என பதிவிட்டு இருந்தார்.

ஓடிடி தளம்: இப்படி பலரின் பாராட்டை பெற்று வரும் வாழை இத்திரைப்படம் இதுரை 3 கோடிக்கு மேல் வசூலை பெற்றுள்ளது. படத்திற்கு பிரபலத்திடம் மக்களிடம் இருந்து கிடைத்து வரும் வரவேற்பால் படத்தில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்கி இருப்பதால், இப்படம் செப்டம்பர் இறுதி வாரத்தில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











