Fire OTT: டிராகன் படத்தை விட நிறைய பேர் இந்த படத்துக்குத்தான் வெயிட்டிங் போல.. ஃபயர் ஓடிடி அப்டேட்!

சென்னை: 150 கோடி வசூலை பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் கடந்த நிலையில், பலரும் அந்த படத்தை தியேட்டருக்கே சென்று பார்த்து இருப்பார்கள். ரீவாட்ச் செய்யவும் வீட்டில் உள்ள பெரியவர்கள் பார்க்கவும் தான் விரைவில் டிராகன் படம் ஓடிடிக்கு வரவுள்ளது. ஆனால், பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி நடிப்பில் வெளியான ஃபயர் படத்தை தியேட்டரில் மிஸ் பண்ண பலரும் ஓடிடியில் பார்க்க வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் அதன் ஓடிடி அப்டேட் குறித்து பாலாஜி முருகதாஸ் வெளியிட்ட பதிவு தீயாக பரவி வருகிறது.

ஜெ. சதீஷ் குமார் தயாரித்து, இயக்கி போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்துள்ள ஃபயர் படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியானது. பிக் பாஸ் பிரபலங்களான பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்‌ஷி அகர்வால், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் லீடு ரோலில் நடித்துள்ளனர். மேலும், சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷான் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Fire Movie and Dragon Movie tentative OTT release dates are here

பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய காசி பற்றிய படமாக உருவான ஃபயர் திரைப்படத்துக்கு தியேட்டரிலேயே போதுமான ரெஸ்பான்ஸ் கிடைத்த நிலையில், அதில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தாலும் பாலாஜி முருகதாஸுக்கு ரொம்பவே அந்த படம் சந்தோஷத்தை கொடுத்தது.

45 லட்சம் சம்பளம்: மேலும், ஃபயர் படத்துக்குப் பிறகு தனது சம்பளம் 45 லட்சமாக உயர்ந்துவிட்டது என படத்தின் வெற்றி விழாவில் பேசிய பாலாஜி முருகதாஸ் திடீரென ஜெ. சதீஷ்குமார் காலிலும் விழுந்து ஆசி வாங்கினார். ரச்சிதா மகாலட்சுமி, சாந்தினி மற்றும் சாக்‌ஷி அகர்வாலுடன் நெருக்கமான காட்சிகளில் தயக்கமே இல்லாமல் ஜாலியாக நடித்து கலக்கிய பாலாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

அமேசான் பிரைம்: ஃபயர் திரைப்படம் விரைவில் டென்ட்கொட்டா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகப் போகிறது என்கிற அப்டேட்டை நடிகைகள் சாந்தினி மற்றும் சாக்‌ஷியுடன் இணைந்து வீடியோவாகவே வெளியிட்டுள்ளார் பாலாஜி முருகதாஸ். ஃபயர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவிக்காத நிலையில், அந்த படம் வரும் வாரத்தில் ஓடிடிக்கு வந்துவிடும் என்கின்றனர். பிப்ரவரி 14ம் தேதி தியேட்டரில் வெளியான ஃபயர் திரைப்படம் மார்ச் 20 அல்லது 21ம் தேதிக்குள் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Fire Movie and Dragon Movie tentative OTT release dates are here

டிராகன் ஓடிடி ரிலீஸ் எப்போ?: அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் வசூலையே உலகளவில் முறியடித்து இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் படமாக பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் உள்ளது. நெட்பிளிக்ஸ் மிகப்பெரிய தொகைக்கு இந்த படத்தை வாங்கியுள்ள நிலையில், வரும் மார்ச் 28ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு முழுவதும் நெட்பிளிக்ஸில் பல சூப்பர் ஹிட் படங்கள் வரிசைக்கட்டி ஓடிடியில் வெளியாக காத்திருக்கின்றன. அமேசான் பிரைமும் சில படங்களை வெளியிட்டு சப்ஸ்கிரைபர்களை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. ஆனால், அமேசான் பிரைம் மவுசு தென்னிந்தியாவில் பயங்கர அடி வாங்கியிருப்பதாகவும் பலரும் நெட்பிளிக்ஸ் பக்கமே சென்று விட்டதாகவும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் ஃபயர் படத்தை பார்க்க அமேசான் பக்கம் ரசிகர்கள் வருவார்கள் என தெரிகிறது.

FAQs
டிராகன் படத்தின் இயக்குநர் யார்?

அஷ்வத் மாரிமுத்து

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X