Freedom at midnight: ரசிகர்களின் காத்திருப்பு ஓவர்.. சோனி லைவில் வெளியானது ஃப்ரீடம் அட் மிட்நைட்!

சென்னை: நமது இந்திய நாட்டின் சுதந்திரம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் நடந்தது. நமக்கு நள்ளிரவில்தான் கடந்த 1947ம் ஆண்டில் சுதந்திரம் கிடைத்தது. இதுகுறித்து கடந்த 1945ம் ஆண்டில் லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லேப்பியர் எழுத்தில் வெளியான ஃப்ரீடம் அட் மிட்நைட் புத்தகம் பலரின் விருப்பத்திற்குரியதாக காணப்படுகிறது.

இந்திய சுதந்திர வரலாற்றை இந்த புத்தகம் மிகச்சிறப்பாக எடுத்துரைக்கிறது. அரசியல், துரோகம், ஏமாற்றம் என இந்த புத்தகத்தில் பல விவரிக்கப்படாத வரலாற்றுநிகழ்வுகளை உணர முடியும். இந்நிலையில் இந்த புத்தகத்தை மையமாக கொண்டு பிரபல பாலிவுட் இயக்குநர் நிகில் அத்வானி அதே பெயரில் வெப் தொடரை இயக்கியுள்ளார்.

freedom at midnight sony liv

இந்திய சுதந்திர வரலாறு: பிரிட்டீஷ் ஆட்சியின்கீழ் பல ஆண்டுகளாக அடிமைக்காற்றை சுவாசித்துவந்த இந்தியர்களை சுதந்திர காற்றை சுவாசிக்க வைக்க பலருடைய தியாகங்கள் தேவைப்பட்டது. பலருடைய உயிரும் தேவைப்பட்டது. இதன் வரலாற்றை நாம் அதிகளவில் தெரிந்துக் கொள்ளவில்லை. சுதந்திரத்தை மட்டுமே அனுபவித்துவரும் நமக்கு அதற்கான தேவையும் ஏற்படவில்லை. ஆனால் கடந்த 1945ம் ஆண்டிலேயே லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக்கு லாபியர் இணைந்து இதன் வரலாற்றை பதிவு செய்துள்ளனர். இதில் அரசியல், துரோகம், ஏமாற்றம் என பல விஷயங்களை பார்க்க முடிகிறது.

ஃப்ரீடம் அட் மிட்நைட் வெப் தொடர்: இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு தற்போது பிரபல பாலிவுட் இயக்குநர் நிகில் அத்வானி இயக்கத்தில் அதே பெயரில் உருவாகியுள்ளது ஃப்ரீடம் அட் மிட்நைட் வெப் தொடர். இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை சுற்றியுள்ள கொந்தளிப்பான நிகழ்வுகளை இந்த வெப் தொடர் மிகவும் ஆழமாக எடுத்து சொல்கிறது. ஸ்டூடியோ நெக்ஸ்ட் உடன் இணைந்து எம்மே என்டர்டெயின்மெண்ட் இந்த தொடரை தயாரித்துள்ளனர். இந்நிலையில் இந்த தொடர் தற்போது சோனி லைவ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. முன்னதாக இதன் ட்ரெயிலர் வெளியாகி ஏராளமான ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இயக்குநர் நிகில் அத்வானி: இந்த தொடரில் மகாத்மா காந்தியா சிராக்வோஹ்ரா, நேருவாக சித்தாந்த் குப்லா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த தொடரை பார்க்க பல ரசிகர்களும் காத்திருந்த நிலையில் தற்போது சோனி லைவில் வெளியாகியுள்ளது. சிறு வயதிலேயே இந்த புத்தகம் தனது பேவரிட் என்று தெரிவித்துள்ள இயக்குநர் நிகில் அத்வானி, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உணர்ச்சி கலவைகளை தற்போதைய ஸ்ட்ரீமிங் உலகத்திற்கு ஏற்றாற்போல சில சுவாரஸ்யங்களையும் இணைத்து உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடினமாக அமைந்த நடிகர்கள்தேர்வு: இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க பிரிட்டீஷ் அரசு ஒப்புக் கொள்ள காரணம், அதற்கான தயாரிப்புகள், இந்தியா -பாகிஸ்தான் பிரிவினை, மகாத்மா காந்தியின் கொலை என அடுத்தடுத்த விஷயங்களை இந்த வெப்தொடரில் இணைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தொடரில் நடிகர்களை தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதான காரியமாக அமையவில்லை என்று கூறியுள்ள நிகில், இதற்காக காஸ்ட்டிங் டைரக்டர் கவிஷ் மற்றும் அவரது டீம் இணைந்து அதிகமான மெனக்கெடல்களை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார். தற்போது இந்த வெப்தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலத்திலும் காணக்கிடைக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X