This week OTT release: ப்ளூ ஸ்டார் முதல் ஆஸ்கர் நாமினேட் படம் வரை.. ஓடிடியில் இந்த வாரம் 9 ரிலீஸ்!

சென்னை: தியேட்டரில் இந்த வாரம் பெரிதாக படங்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்கள் எல்லாம் சொதப்பி வரும் நிலையில், ஓடிடியில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. அந்த படத்துடன் கூடவே 9 ஓடிடி ரிலீஸ்களும் வெளியாக காத்திருக்கின்றன.

தியேட்டர்களில் படங்கள் பெரிதாக ஓடாத நிலையில், ஓடிடிக்களையே தயாரிப்பாளர்கள் பெரிதும் நம்பியிருப்பதால் 4 வாரங்களில் புதிய படங்களை ஓடிடியில் வெளியிடுகிறோம் என்றும் படத்தை பெரிய விலைக்கு ஓடிடியில் விற்பனை செய்ய முயற்சித்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், தியேட்டரில் நன்கு ஓடாத படங்களையும் பெரிய நடிகர்கள் நடிக்காத படங்களையும் வாங்கப் போவதில்லை என்கிற முடிவுக்கு ஓடிடி நிறுவனங்கள் வந்துள்ள நிலையில், சிறு பட்ஜெட் படங்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படும் என தெரிகிறது.

From Blue Star to Poor Things: This Week 9 OTT release will give a superb entertainment

ஆஸ்கர் நாமினேட் படம்: ஹல்க் நடிகர் மார்க் ரஃபலோ மற்றும் எம்மா ஸ்டோன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் சிறந்த நடிகை, சிறந்த படம் என ஒட்டுமொத்தமாக 7 பிரிவுகளில் ஆஸ்கர் 2024 போட்டிக்கு நாமினேட் ஆகியிருக்கிறது. இந்த ஆண்டு பல விருதுகளை அள்ளப் போகும் இந்த படம் பிப்ரவரி 27ம் தேதியான இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

தி இம்பாசிபிள் ஹெய்ர்: பிரபல கொரிய டிராமாவான The Impossible Heir வெப்சீரிஸ் பிப்ரவரி 28ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இந்த கொரிய வாரிசு வெப்சீரிஸ் வெளியாக உள்ள நிலையில், கொரியன் வெப்சீரிஸ் பிரியர்களுக்கு செம ட்ரீட்டாக இந்த வாரம் இது அமையப் போகிறது.

எனி ஒன் பட் யூ: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த வாரம் Anyone But You திரைப்படம் வெளியாகிறது. கடந்த ஜனவரி 5ம் தேதி தியேட்டர்களில் வெளியான இந்த படம் ஓடிடியில் பிப்ரவரி 27ம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. வில் கிளக் இயக்கத்தில் சிட்னி ஸ்வீனி நடிப்பில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் இளைஞர்களை கவரக் கூடிய அத்தனை ஐட்டங்களுடன் உருவாகி இருக்கிறது.

மாம்லா லீகல் ஹை: Maamla Legal Hai எனும் வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் மார்ச் 1ம் தேதி வெளியாகிறது. கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகி உள்ள இந்த வெப்சீரிஸுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பிராந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மை நேம் இஸ் லோ கிவான்: மார்ச் 1ம் தேதி கொரிய திரைப்படமான My Name is Loh Kiwan ரிலீஸ் ஆகிறது. கிம் ஹீ ஜின் எனும் கொரிய இயக்குநர் இந்த படத்தை இயக்கி உள்ளார். அகதியாக மற்றொரு நாட்டில் இருக்கும் வலியும் வேதனையும் குறித்து இந்த படம் பேசுகிறது.

நெப்போலியன்: ஜோக்கர் படத்தில் நடித்து மிரட்டிய பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோக்கின் பீனிக்ஸ் நடிப்பில் உருவான நெப்போலியன் திரைப்படம் மார்ச் 1ம் தேதி ஆப்பிள் டிவியில் ஸ்ட்ரீம் ஆகிறது. இந்த படமும் ஆஸ்கர் ரேஸில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ப்ளூ ஸ்டார்: பா. ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவான ப்ளூ ஸ்டார் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் பிப்ரவரி 29ம் தேதி வெளியாகிறது.

சன் ஃபிளவர் சீசன் 2: சுனில் க்ரோவர் மற்றும் அதா ஷர்மா நடிப்பில் உருவாகி உள்ள காமெடீ கலந்த இன்வெஸ்டிகேட்டிவ் வெப்சீரிஸான சன் ஃபிளவர் இரண்டாம் சீசன் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் மார்ச் 1ம் தேதி வெளியாகிறது.

பிரிசில்லா: பிரபல அமெரிக்க பாடகர் எல்விஸ் வெப்சீரிஸ் டிரெண்டான நிலையில், அவரது மனைவி பிரிசில்லா பியூலியாவின் கதையை மையப்படுத்தி உருவாகி உள்ள திரைப்படம் முபி ஓடிடி தளத்தில் வரும் மார்ச் 1ம் தேதி வெளியாகிறது. இந்த வாரம் கிட்டத்தட்ட ஒன்றுக்கு 9 ஓடிடி ரிலீஸ்கள் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் வீக்கெண்டையும் நைட் டைமையும் ஜாலியாக கழிப்பார்கள் என தெரிகிறது. நெப்போலியன், புவர் திங்ஸ், ப்ளூ ஸ்டார் உள்ளிட்டவற்றை மிஸ் பண்ணிடாதீங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X