ரசிகர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. இந்த வாரம் ஓடிடியில் எந்தெந்த படங்கள் தெரியுமா?
சென்னை: திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை போன்று ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் அதிக வரவேற்பு இருக்கிறது. அதேபோன்று கடந்த வாரத்தை போன்று இந்த வாரமும் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களின் விவரம் வெளியாகியிருக்கிறது. இதில், பார்வையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த படங்களும் இடம்பெற்றுள்ளன. தமிழை தாண்டி பல மொழி படங்களும் வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த படங்கள் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது என்பதை காணலாம்.
ஜென்டில்வுமன்: அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் லிஜோ மோல், ஹரிகிருஷ்ணன், லாஸ்லியா ஆகியோர் நடிப்பில் உருவான படம் ஜென்டில்வுமன். இப்படம் கடந்த 14ஆம் தேதி டென்ட்கோட்டா ஓடிடி தளத்தில் வெளியானது. திருமணம் ஆன ஆண் ஒருவன் மனைவிக்கும், முன்னாள் காதலிக்கும் செய்த துரோகம். அதேபோன்று பல பெண்களை சபல புத்தியோடு அணுகும் கணவனை கொலை செய்யும் மனைவியாக லிஜோமோல் மிர்டடியிருப்பார். முன்னாள் காதலியாக வரும் லாஸ்லியா காணாமல் போன காதலனை தேடி அலைவது என இருதுருவங்களாக நகரும் கதை பிறகு வேகமெடுக்கிறது. போலீஸ் ஒரு பக்கம் துரத்தும் இன்வெஷ்டிகேசன் என பார்க்க் விறுவிறுப்பை தருகிறது. பெண்களை மையப்படுத்தி வந்த கதைகளில் வித்தியாசம் என கூறலாம்.

கட்டிஸ் கேங்: உன்னி லால் லீட் ரோலில் நடித்திருக்கும் திரைப்படம் கட்டிஸ் கேங். அனில் தேவ் இயக்க்த்தில் உருவான இப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கிறது. கிராமத்தின் பின்னணியில் உருவான இப்படம் மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் சிம்பிளி செளத் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
எமகாதகி: தஞ்சாவூர் பகுதில் ஒரு ஊரில் காப்பு கட்டும் தகவலுடன் படம் தொடங்குகிறது. படம் தொடங்கி சில நிமிடங்களிலேயே ஹீரோயின் ரூபாவிற்கும் அவருடைய தந்தைக்கும் சண்டை வருகிறது. அதில் ரூபா தந்தை ஓங்கி அறைய, ரூபா தற்கொலை முடிவை எடுக்கிறார். இதை தொடர்ந்து ரூபா-வின் உடலை சம்பிரதாய சடங்குகள் செய்து எடுக்கும் நேரத்தில் கட்டிலை அசைக்க கூட முடியவில்லை. பேய் படங்கள் அமானுஷ்ய படங்களை பார்த்து பார்வையாளர்கள் ரசித்திருப்பார்கள். ஆனால், ஒரு பெண் தன்னுடைய இறப்பிற்கு நீதி கேட்டு போராடும் கதையாக எமகாதகி இருந்தது. பார்ப்பவர்களை வியக்க வைத்த படம் என்று சொல்லலாம். இப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

லாக் அவுட்: இயக்குநர் அமித் கோலானி இயக்கத்தில் நிமிஷா நாயர், காந்தர்வ் திவான் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த படம் லாக் அவுட். இன்றைய கால இளைஞர்கள் போனிலேயே மூழ்கி போகின்றனர். அப்படி ஒரு இளைஞன் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்கிறான். பிணை கைதியாக இருக்கும் சூழலில் எப்படி இதில் இருந்து மீண்டான் என்பது தான் கதை. கதை ஆரம்பிக்கும் சில நிமிடங்கள் போர் அடிக்க தொடங்கினாலும், பிறகு விறுவிறுப்பு எடுக்க தொடங்குகிறது. இப்படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்: இந்திய பெருங்கடலில் திடீரென தோன்றிய செலஸ்டியல்' தீவில் இருக்கும் எக்ஸ்-மென் குறியீடு யாருக்கு சொந்தம் என்பதில் இந்தியா, ஜப்பான், அமெரிக்க, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இப்படியான சூழலில் புதிய கேப்டன் அமெரிக்காவான சாம் வில்சனிடம் (ஆண்டனி மெக்கி) புதிய அவெஞ்சர்ஸ் குழு ஒன்றை உருவாக்குமாறு அதிபர் கோரிக்கை வைக்கிறார். வில்லனின் பின்னணி என்ன? கேப்டன் அமெரிக்காவால் அவரை தடுக்க முடிந்ததா என்பதே படத்தின் திரைக்கதை. இப்படம், மீண்டும் மார்வெலுக்கு ஒரு சரிவு என்றுதான் சொல்லலாம். இப்படம் கடந்த 15ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











