Adiyae OTT - ஜிவி பிரகாஷின் அடியே ஓடிடி ரிலீஸ்.. எப்போ தெரியுமா?.. வெளியானது அறிவிப்பு

சென்னை: Adiyae OTT (அடியே ஓடிடி) ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் அடியே படம் ஓடிடியில் ரிலீஸாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். 17 வயதில் அந்த படத்துக்கு அவர் இசையமைத்தார். அந்தப் படத்தில் ஜிவி பிரகாஷின் இசையை கேட்ட ஒட்டுமொத்த திரையுலகமும், இந்த சிறிய வயதில் இப்படிப்பட்ட ஒரு படத்துக்கு சிறப்பாக இசையமைக்க தனித்திறமை வேண்டும் என அவரை கொண்டாடியது.

 G.V.Prakash Adiyae Movie Will Streamin on September 29 at Sony Liv OTT

ஜிவிக்கு தேசிய விருது: செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஜிவி பிரகாஷ் அமைத்திருந்த இசை உச்சக்கட்ட க்ளாசிக். அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. இது பலரையும் அதிருப்தியடைய செய்தது. தொடர்ந்து இசையமைத்து வந்த அவருக்கு சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருது கிடைத்தது.

நடிகர் ஜிவி பிரகாஷ்: இதற்கிடையே அவர் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் தொடர்ந்து பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் எந்தப் படமும் அவருக்கு சரியான அங்கீகாரத்தையோ அல்லது நல்ல நடிகன் என்ற அடையாளத்தையோ பெற்று தரவில்லை.

பெயர் வாங்கிய படங்கள்: அவர் நடித்த படங்களிலேயே முக்கியமான படங்களாக அமைந்தது என்றால் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான சர்வம் தாளமயம், சசி இயக்கத்தில் உருவான சிவப்பு மஞ்சள் பச்சை, பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் ஆகிய படங்கள். இந்த மூன்று படங்களிலும் அவரது நடிப்பு நன்றாகவே மெருகேறியிருந்தது. அதேபோல் அவர் நடிப்பில் வெளியான பேச்சிலர் படமும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி ஹிட்டாக அமைந்தது. மேலும் அதில் ஜிவியின் அசால்ட்டான நடிப்பு பலரையும் கவர்ந்தது.

அடியே ரிலீஸ்: இந்தச் சூழலில் அவரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி அடியே படம் வெளியானது. காமெடி ப்ளஸ் சைன்ஸ் பிக்‌ஷன் ஜானரில் படம் உருவாகியிருந்தது. இந்தப் படத்துக்கு ஓரளவு மட்டுமே வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் பல படங்களை கலாய்த்தும் புது ஜானரில் நல்ல அட்டெம்ப்ட் என்று ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறினர். இந்நிலையில் அடியோ படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது சோனி லிவ் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கபப்ட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X