400 கோடி போட்டு எடுத்து நஷ்டம்.. சங்கடத்தில் ஷங்கர்.. கேம் சேஞ்சர் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய தெலுங்கு படமான கேம் சேஞ்சர் படமும் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியை சந்தித்து விட்டது. இந்த சங்கராந்திக்கு தெலுங்கில் வெளியான டாக்கு மகராஜ், சங்கராந்திகி வஸ்துனாம் உள்ளிட்ட படங்கள் வெற்றிவாகை சூடிய நிலையில், கேம் சேஞ்சர் படம் ஃபிளாப் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த படத்தின் ஹீரோ ராம் சரண் தனது சம்பள பணத்தை குறைத்துக் கொள்வதாகவும் இன்னொரு படத்தை நஷ்ட ஈடாக தில் ராஜுவுக்கு செய்து தர சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு பக்கம் தில் ராஜுவின் வீட்டில் ஐடி ரெய்டு சோதனைகள் நடைபெற்ற நிலையில், தற்போது கேம் சேஞ்சர் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

ott game changer shankar

இந்தி மல்டிபிளக்ஸ்களை டார்கெட் செய்து ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியான நிலையில், 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த மாதமே ஓடிடிக்கு ஓடி வரப்போவதாக கூறப்படுகிறது.

லோக்கல் கேபிள் சேனலிலேயே: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ஸ்ரீகாந்த், சுனில், யாஷிகா ஆனந்த், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10ம் தேதி சங்கராந்தி பண்டிகையை குறி வைத்து வெளியானது. ஆனால், வசூல் ரீதியாக வெற்றி பெறாத இந்த படத்தை உடனடியாக பொங்கல் பண்டிகைக்கே லோக்கல் கேபிள் சேனலிலும், பேருந்துகளிலும் ஒளிபரப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலியான தியேட்டர்களில் இருந்து தரமான பிரின்ட்டை சுட்டு கேம் சேஞ்சர் படம் ஓடிடியில் வெளியாவதற்கு முன்னரே பலரும் பார்க்கும் படி ஆகிவிட்டதாம்.

ஓடிடி ரிலீஸ் எப்போது?: இந்நிலையில், இந்தி வெர்ஷனை தவிர்த்துவிட்டு கேம் சேஞ்சர் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷனை உடனடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8 வாரங்கள் கழித்து வெளியாக வேண்டும் என்றால் இந்த கேம் சேஞ்சர் மார்ச் 10ம் தேதி தான் வெளியாகும் என்றும் அதற்குள் படத்தையே பலரும் மறந்துவிடுவார்கள் என்றும் கூறுகின்றனர்.

முடிச்சிவிட்ட ஷங்கர்: தமிழில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தையும் அதற்கு கூடவே இன்னொரு குதிரையாக ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தையும் கட்டிக்கொண்டு படமெடுத்த ஷங்கர் இரண்டு படங்களையும் சரியாக எடுக்காமல் கொரியோகிராஃபர்களை மட்டுமே நம்பி பிரம்மாண்ட பாடல் காட்சிகளை படமாக்கி ரசிகர்களை ஏமாற்ற நினைத்த நிலையில் தான் கேம் சேஞ்சர் படம் ஃபிளாப் ஆகிவிட்டதாக ராம் சரண் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். தில் ராஜுவுக்கும் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்ட நிலையில், அவருக்காக இன்னொரு படத்தையே ராம் சரண் செய்துக் கொடுக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இனிமேல் ஷங்கரை நம்பி வேள்பாரி படத்தை யார் தயாரிக்க முன் வருவார்கள் என்றும் அவர் அவுட்டேட்டட் ஆகிவிட்டார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X