9 வருஷம் அண்ணன் தங்கச்சியா பழகிட்டு.. இப்படி லிப் கிஸ் அடிக்க சொன்னா எப்படி?.. GOT நடிகர் வேதனை!

லாஸ் ஏஞ்சல்ஸ்: "கேம் ஆஃப் த்ரோன்ஸ்" தொடரில் ஜான் ஸ்னோ மற்றும் சான்சா ஸ்டார்க் எனச் சகோதர சகோதரிகளாக ஒன்பது ஆண்டுகள் நடித்த கிட் ஹாரிங்டன் மற்றும் சோஃபி டர்னர், தங்கள் புதிய ஹாரர் படத்தில் லிப்லாக் முத்தக் காட்சிகளில் நடித்தது விசித்திரமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

2019-ல் முடிவடைந்த HBO-வின் "கேம் ஆஃப் த்ரோன்ஸ்" தொடரின் எட்டு சீசன்களிலும் கிட் ஹாரிங்டன் மற்றும் சோஃபி டர்னர் நடித்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு "தி ட்ரெட்ஃபுல்" படத்திற்காக இருவரும் மீண்டும் இணைந்தனர். இத்திரைப்படத்தில் லிப்லாக் முத்தக் காட்சிகள் இருப்பது குறித்து இருவரும் வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.

Game of Thrones Actor Kit Harington talks about his onscreen kiss scene with Sophie Turner
Photo Credit:

விஜய் சேதுபதி க்ரித்தி ஷெட்டியை தனது ஹீரோயினாக ஏற்க முடியாது என்றும் உப்பென்னா படத்தில் தனது மகளாக அவர் நடித்தார் என்றும் கூறியிருந்தார். குழந்தையாக நடித்த மீனாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே ஜோடி போட்டு நடித்த போது ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், ஹாலிவுட்டில் இப்படியொரு கதை ஓடிக்கொண்டிருக்கிறது.

E! News தொலைக்காட்சிக்கு கிட் ஹாரிங்டன் அளித்த பேட்டியில், சோஃபி டர்னர் முத்தக் காட்சியில் நடிப்பது குறித்து, "இவள் என் சகோதரி அல்லவா? எப்படி அவளை முத்தமிடுவேன் என நினைத்தேன். பல ஆண்டுகளாக சகோதரியாக பழகிவிட்டேனே என புலம்பினேன். ஆனால், அவளுடன் மீண்டும் சேர்ந்து பணியாற்றியது மகிழ்ச்சி. அவளை முத்தமிடுவதற்காக நான் ஒரு ஆப்பிள் பாக்ஸ் மீது ஏற வேண்டியிருந்தது சற்று சங்கடமாக இருந்தது, ஏனெனில் அவள் என்னை விட ஒரு அடி உயரமாக இருப்பாள். மற்றபடி, என் கண்ணியம் அப்படியே தொடர்கிறது" என்று கூறினார்.

மேலும், "நாங்கள் மீண்டும் ஒன்றாக இணைந்து எங்கள் நட்பு முழுமையாக மீண்டும் உருவானது. குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வு இருந்தது," என்றும் ஹாரிங்டன் குறிப்பிட்டார். ஆப்பிள் டிவி-யில் வெளியாகவிருக்கும் "தி ஃபேமிலி பிளான் 2" திரைப்படத்தின் புரோமஷன் நிகழ்ச்சியில், அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.

சோஃபி டர்னர் ஆகஸ்ட் மாதத்தில் "லேட் நைட் வித் சேத் மேயர்ஸ்" (Late Night With Seth Meyers) நிகழ்ச்சியில் பேசுகையில், தனது முன்னாள் onscreen சகோதரனான ஹாரிங்டனை முத்தமிடுவது "அருவருப்பாக" இருந்ததாகக் கூறினார்.

"இந்த ஸ்கிரிப்டை அவள்தான் எனக்கு அனுப்பினாள். இதில் நான் என்ன கண்டேன் என்று அவளுக்குப் புரியவில்லை," என்று கிட் நகைச்சுவையாகக் கூறினார். 15-ஆம் நூற்றாண்டுக் பின்னணியில் அமைந்திருக்கும் "தி ட்ரெட்ஃபுல்" திரைப்படம், சமுதாயத்தின் விளிம்பில் வாழும் ஆன் (டர்னர்) மற்றும் அவளது மாமியார் மோர்வென் பற்றியது.

இவர்களது கடந்த காலத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் (ஹாரிங்டன்) திரும்ப வரும்போது, அது ஆன் வாழ்க்கையை புரட்டிப் போடும் சம்பவங்களின் செயின் ரியாக்‌ஷனை தூண்டிவிடுகிறது. நதாஷா கெர்மானி எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் மார்சியா கே ஹார்டன், லாரன்ஸ் ஓ'ஃபியுரன் மற்றும் ஜோனாதன் ஹாவர்ட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X