Garudan Review: சைக்கோ த்ரில்லர் ஜானரில் மிரட்டும் கருடன் விமர்சனம்.. OTT ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்

சென்னை: மலையாளத்தில் சுரேஷ் கோபி, பிஜு மேனன் நடித்துள்ள திரைப்படம் கருடன். அருண் வர்மா இயக்கியுள்ள இந்தப் படம் நவம்பர் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் தற்போது அமேசான் தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், அதன் விமர்சனத்தைப் பார்க்கலாம்.

garudan-review-suresh-gopi-biju-menon-starring-garudan-ott-review

கருடன் ஓடிடி விமர்சனம்
அருண் வர்மா இயக்கத்தில் மல்லுவுட் சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி, பிஜு மேனன், அபிராமி, மாளவிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் கருடன். கடந்த மாதம் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்தது. சைக்கோ த்ரில்லர் ஜானர் படமான கருடன் தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியு ஓடிடி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கல்லூரி மாணவி தெரசா மர்ம நபர் ஒருவால் ரேப் செய்யப்பட்டு கோமா நிலைக்குச் செல்கிறார். இந்த வழக்கை போலீஸ் ஆபிஸரான ஹரிஸ் மாதவன் (சுரேஷ் கோபி) விசாரிக்கிறார். இறுதியாக இந்தச் சம்பவத்தில் பேராசிரியர் நிஷாந்த் (பிஜு மேனன்) தான் குற்றவாளி என கைது செய்யப்படுகிறார். இதனால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது. இதோடு கதை முடிந்துவிட்டது என நினைத்தால் அங்கிருந்து தான் படமே தொடங்குகிறது.

7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்துவிட்டு ரிலீஸாகும் பிஜு மேனேன், தன் மீதான வழக்கு பொய்யானது என கேரள உயர்நீதிமன்றம் செல்கிறார். தனக்கு நியாயம் வேண்டும் என வழக்கு தொடர்வதோடு, தான் சிறையில் இருந்தபடி சட்ட படிப்பு முடித்துவிட்டதாக அவரே வாதாடுகிறார். தனக்கு எதிரான எல்லா ஆதாரங்களும் பொய் என நிரூபிக்கும் பிஜு மேனன், குற்றவாளி வேறொருவர் என அவரையும் நீதிமன்றத்தில் நிறுத்துகிறார்.

இதனால் பிஜு மேனன் நிரபராதி என தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம், அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கிறது. மேலும், இந்த வழக்கை விசாரித்த போலீஸ் ஆபிஸர் சுரேஷ் கோபி ரிட்டையர்டு ஆனதால், அவருக்கான செட்டில்மெண்ட்டை நிறுத்தி வைக்கிறது நீதிமன்றம். இதனால் விரக்தியாகும் சுரேஷ் கோபி தனது விசாரணையில் எந்த தவறும் நடக்கவில்லை என நிரூபிக்க ரெடியாகிறார்.

பிஜு மேனன் அடைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்து விசாரணையை தொடங்கும் சுரேஷ் கோபி, கடைசியில் உண்மையை கண்டுபிடித்தாரா, பிஜு மேனன் தான் குற்றவாளி என நிரூபிக்க முடிந்ததா என்பது தான் கருடன் கதை. முதல் பாதியில் குற்றவாளி, இரண்டாம் பாதியில் நிரபராதி இப்படி கண்ணாமூச்சி ஆடும் பிஜு மேனன், க்ளைமேக்ஸில் என்னவாக ஆனார் என்பதை த்ரில்லராக காட்டியுள்ளது கருடன்.

ஒரு சைக்கோ த்ரில்லர் ஜானர் படத்தை கோர்ட் டிராமா, ஆடுபுலி ஆட்டம் கொண்ட திரைக்கதை என செம்ம மாஸ்ஸாக சுவாரஸ்யப்படுத்தியுள்ளார் இயக்குநர் அருண் வர்மா. போலீஸ் ஆபிஸராக சுரேஷ் கோபியும், காலேஜ் புரொபசர், சிறை கைதி, வழக்கறிஞர் உட்பட இன்னொரு சர்ப்ரைஸ் கேரக்டரிலும் மிரட்டியுள்ளார் பிஜு மேனன். படம் தொடங்கியதும் த்ரில்லர் படத்துக்கான வேகம் இல்லை என்றாலும், பிஜு மேனன் ரிலீஸானதும் சூடு பிடிக்கிறது.

சுரேஷ் கோபியை ஜாமின் எடுக்க வரும் பிஜு மேனனுக்கு, போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அவர் கொடுக்கும் சர்ப்ரைஸ் டிவிஸ்ட் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் மொமண்ட். ஒரு சம்பவத்தின் மறு விசாரணை எவ்வளவு பெரிய சைக்கோவை கண்டுபிடிக்க வைக்கிறது என அட்டகாசமாக காட்சிப்படுத்திய இயக்குநர் அருண் வர்மா, க்ளைமேக்ஸிலும் செம்ம சூப்பர் டச் கொடுத்துள்ளார். அமேசான் ப்ரைம் ரசிகர்களுக்கு இந்த வாரம் தரமான ட்ரீட் இந்த கருடன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X