Gehana Vasisth: அது போலி கல்யாணம்.. 2 வாரம் கழித்து அதிர வைத்த அடல்ட் பட நடிகை.. ஷாக்கான திரையுலகம்!
மும்பை: கண்டிபாத் வெப்சீரிஸ் மூலம் ரசிகர்களை கவர்ந்த அடல்ட் பட நடிகை கெஹனா வசிஸ்த் சமீபத்தில் மதம் மாறி இஸ்லாமியரை திருமணம் செய்துக் கொண்டதாக அவரே போட்டோக்களை போட்டு இருந்த நிலையில், பாலிவுட் முழுவதும் அந்த செய்தி தீயாக பரவியது.
இந்நிலையில், தான் திருமணமே செய்துக் கொள்ளவில்லை என்றும் அந்த நபர் தனக்கு யாருமே தெரியாது என அதிரடியாக அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார் கெஹனா வசிஸ்த்.
நடிகை கெஹனா வசிஸ்த் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்களும், அதன் பின்னர் இந்துக் கோயிலுக்கு சென்று வழிபட்ட போட்டோக்களையும் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமண புகைப்படங்கள்: நிர்வாணமாக வெப்சீரிஸ்களில் நடித்து வரும் எரோடிகா நடிகை கெஹனா வசிஸ்த் புகைப்படங்கள் சமீபத்தில் வலம் வந்தன. ஃபைசன் அன்சாரி என்கிற இஸ்லாமியரை கெஹனா வசிஸ்த் மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டதாக அவர் வெளியிட்ட புகைப்படங்களுடன் இந்தி மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டன.
நடிகை கெஹனா வசிஸ்த் தொடர்ந்து மேலும், சில போட்டோக்களையும் பதிவிட்டு இருந்தார். ஆனால், மீடியாவில் வெளியான எந்தவொரு செய்திக்கும் அவர் கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கும் மேல் எந்தவொரு மறுப்பையும் தெரிவிக்கவில்லை.
டாப்லெஸ் போட்டோ: திருமணம் ஆனதாக போட்டோக்கள் வெளியான கொஞ்ச நாட்களிலேயே மீண்டும் டாப்லெஸ் போட்டோவை நடிகை கெஹனா வசிஸ்த் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இஸ்லாமிய மதத்துக்கு மாறி திருமணம் செய்த நிலையிலும், இப்படி அரை நிர்வாணமாக போஸ் கொடுக்கிறீங்களே என ரசிகர்கள் விளாசி எடுத்தனர்.
ஆனால், அதற்கும் எந்தவொரு ரியாக்ஷனும் கெஹனா வசிஸ்த் தரப்பில் இருந்து சொல்லவில்லை. இந்நிலையில், தனக்கு திருமணமே ஆகவில்லை என தற்போது தடாலடியாக அறிவித்து இணையத்தை அதிர வைத்துள்ளார்.
கல்யாணமே ஆகல: தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென நடிகை கெஹனா வசிஸ்த் ரசிகர்கள் மற்றும் மீடியா நண்பர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை.
அதுவெறும் ஒரு வெப்சீரிஸ் ஷூட்டிங் மட்டும் தான் என போஸ்ட் போட்டு அதிர வைத்துள்ளார். மேலும், ஃபைசன் அன்சாரி தனக்கு யாருன்னே தெரியாது என்றும் அவ்வளவாக பழக்கமே இல்லாத நபர் என்றும் ஷூட்டிங்கில் மட்டும் தான் பார்த்தேன் என பதிவிட்டுள்ளார்.

திருமண போட்டோக்கள் நீக்கம்: மேலும், தனது சோஷியல் மீடியா பக்கத்தில் இருந்து ஃபைசன் அன்சாரியை திருமணம் செய்தது போல வெளியிட்ட போட்டோக்களையும் அதிரடியாக நீக்கி உள்ளார் கெஹனா வசிஸ்த்.
திருமணத்துக்கு பிறகு ஏதாவது பிரச்சனை வெடித்ததா? என ரசிகர்கள் கேள்விகளை கிளப்பி வருகின்றனர்.
என் காதலர் இவர் தான்: மேலும், தான் இஸ்லாமியராக மதம் மாறவில்லை என்றும் தான் நீண்ட நாட்களாக ராம் என்பவரைத் தான் காதலித்து வருகிறேன் என்றும் விரைவில் அவரைத் தான் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறேன் என்றும் கெஹனா பதிவிட்டுள்ளார்.
ஆனால், தனது காதலர் புகைப்படத்தை அவர் வெளியிடாமல் வெறும் பெயரை மட்டும் பதிவிட்டு இருப்பது மேலும், பல குழப்பங்களையும் கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.
அமலா பாலும் இப்படி: நடிகை அமலா பால் 2வது திருமணம் செய்துக் கொண்டதாக போட்டோக்கள் வெளியான நிலையில், அந்த போட்டோக்களை வெளியிட்ட பவ்நிந்தர் சிங்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த அமலா பால் தான் இரண்டாவதாக திருமணமே செய்துக் கொள்ளவில்லை என அதிரடியாக அறிவித்து இருந்தார்.
வெட்டிங் போட்டோஷூட் நடத்தும் போது கொஞ்சம் தெளிவா போஸ்ட் போடுங்க என நெட்டிசன்கள் கெஹனா வசிஸ்த்தை விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











