ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விலை?.. அமேசான் பிரைம் ஓடிடியில் தமிழில் இப்படியொரு படமா?.. Girls to Buy!
சென்னை: மாடலிங் துறையில் ஈடுபடும் பெண்கள் எப்படி பிரைவேட் பார்ட்டி கேர்ள்ஸ் ஆக மாறுகின்றனர் என்பதையும் ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விலை கொடுத்தால் அவர்கள் தங்களை தர தயாராக இருக்கின்றனர் என்கிற கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் இந்த Girls to Buy.
படத்தின் தலைப்பே வில்லங்கமாக இருக்கேன்னு பார்த்தால், படமே ரொம்பவே வில்லங்கமான படம் தான். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கிலேயே இந்த அடல்ட் எரோடிக்கா படம் கிடைக்கிறது.

துபாயில் அப்படி இப்படி எல்லாம் நடந்தாலோ, போதைப் பொருள் பயன்படுத்தினாலோ அவ்வளவு தான் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டு வரும் நிலையில், துபாயில் மது, மாது, போதை எல்லாம் எப்படி கோடீஸ்வர அரபுகளுக்கு கிடைக்கிறது என்பது குறித்தும் சொகுசு கப்பல்களில் நடக்கும் கசமுசா பார்ட்டிகள் குறித்தும் அப்பட்டமான காட்சிகளுடன் பணத்துக்காக ஆசைப்பட்டு செல்லும் பெண்களுக்கு நேரும் கதியையும் எச்சரிக்கை தொனியுடன் சொல்லியிருக்கும் படம் தான் இது.
கேர்ள்ஸ் டு பை கதை: திரைக்கதை 1990களின் பாலியல் படங்களை நினைவூட்டுவதாக இருந்தாலும், 'கேர்ள்ஸ் டு பை' (விளையாட்டாக, 1999 இல் நடக்கிறது) .இது 2018 ஆம் ஆண்டு வெளியான 'கேர்ள்ஸ் ஃப்ரம் துபாய்' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது, இது கிழக்கு ஐரோப்பிய பாலியல் தொழிலாளர்களின் உண்மையான அனுபவங்களைப் பற்றிய எச்சரிக்கை கதை. பாலியல் தொழிலாளர்கள் மற்றும் ஆள் கடத்தல் பற்றிய சில மனதை கலக்கும் உண்மைகளுடன் படம் தொடங்குவதிலிருந்து இது தெளிவாகிறது.
மாடலிங் துறையில் சாதிக்க நினைக்கும் சாதாரண குடும்பத்துப் பெண்ணான எமிக்கு மாடலிங் துறையில் பெரிய ஸ்டாராக முடியவில்லை. மாடலிங் துறையில் ஸ்டாராக இருக்கும் ஒரு பெண் மற்றும் அவரது அம்மாவுடன் நட்பு ஏற்பட அவர்கள் சைடு பிசினஸாக பாலியல் தொழில் செய்வது தெரிய வருகிறது. எமியையும் அதற்குள் கொண்டு வருகின்றனர். சொகுசு கப்பலில் ஏகப்பட்ட இளம் பெண்களை பார்ட்டி கேர்ள்ஸாக அழைத்துச் செல்லும் நபரிடம் பார்ட்னராக சேர முயற்சிக்கிறாள். அதன் பின்னர், ஒரு சொகுசு கப்பல் பார்ட்டிக்கு 20 பெண்களை அழைத்துச் செல்கிறார். அப்படியே பெரிய பெரிய பார்ட்டிகள் கிடைக்க, அரபு ஷேக்குகள் நடத்தும் பார்ட்டிக்கு 50 பெண்களை அழைத்துச் செல்ல அந்த பெண்களுக்கு என்ன ஆகிறது என்பது தான் கதை.
படம் எப்படி இருக்கு?: இயக்குநர் மரியா சடோவ்ஸ்கா, செல்வமும் பாலியலும் எவ்வளவு கவர்ச்சியானவை என்பதையும், அதே அளவுக்கு அதில் உள்ள பெரிய ஆபத்துகளையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். எமி கதாபாத்திரத்தில் நடிகை பாலினா கலாஸ்கா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், பார்ட்டி கேர்ளாக நடித்த சில முக்கிய நடிகைகளின் நடிப்பும் ஹீரோயினுக்கு பார்ட்னராக வரும் க்யுலியோ பெருட்டியும் நடிப்பும் அட்டகாசம்.
'கேர்ள்ஸ் டூ பை' ஒரு முழுமையான எச்சரிக்கை கதையாகும். பெண்கள் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுவதை விட, அவர்கள் எதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே திரைப்படம் அதிகம் வலியுறுத்துகிறது. அனைத்து பகட்டுகளுக்கும் அப்பால், உள்ள கொடுமைகளை தோலுரித்துக்காட்டுகிறது. அரபு ஷேக்குகள் சொகுசு கப்பல் பார்ட்டியில் ஆடும் போது பெண்களின் உள்ளாடைகளை கழட்டச் சொல்வது, காசுக்காக அவர்கள் அதையும் செய்வது, அதில் பார்ட்டி பண்ண வந்த நடிகை ஒருவர் மறுக்க அங்கே நடக்கும் விஷயம் எல்லாம் திக் திக் மொமண்ட்டுகள் தான்.
பார்க்கலாமா? வேண்டாமா?: இது மோசமான படம் அல்ல. 'கேர்ள்ஸ் டு பை' ஒரு பெண் ஆடம்பரத்தால் எவ்வளவு விரைவாக குருடாகிவிட முடியும் என்பதை எடுத்துக் காட்டும் ஒரு பாடமாகவே உள்ளது. துபாய் ஷேக்குகள் சொகுசு கப்பல்களை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் சந்தோஷமாக இருக்க மற்ற நாட்டு பெண்களை போகப் பொருளாக பயன்படுத்துகின்றனர் என்பதையும் அவர்களை நடத்தும் விதத்தையும் பெரிய பட்ஜெட்டில் படமாக்கப்பட்டு இருப்பதால், தாராளமாக தனியாக ஒருமுறை பார்க்கலாம். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கில் உள்ள இந்த படத்தில் ஏகப்பட்ட ஆபாசக் காட்சிகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications











