OTT: அடுத்தடுத்து கொலை.. மர்மங்கள் நிறைந்த கிரைம் திரில்லர் படங்கள்.. ஓடிடியில் மிஸ் பண்ணாம பாருங்க!
சென்னை: முன்பெல்லாம் வெள்ளிகிழமை வந்துவிட்டாலே சினிமா பிரியர்கள் தியேட்டரில் முண்டி அடித்துக்கொண்டு நிற்பார்கள். இதுஇப்போது குறைந்த பெரிய நடிகர்களின் படத்தை பார்ப்பதற்கு மட்டுமே தியேட்டரில் கூட்டம் கூடுகிறது. ஒரு குடும்பத்தில் தியேட்டருக்கு சென்றால் டிக்கெட்,பார்க்கிங், தின்பண்டம் என ஆயிரத்தில் செலவு ஆவதால் சிலர் தியேட்டருக்கு வருவதையே குறைத்துக்கொண்டனர்.அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் ஓடிடித்தளங்கள்.
வீடுகளில் குடும்பத்துடன் பிடித்த படங்களை வீட்டில் இருந்தபடியே பார்த்து வருகின்றனர்.இதனால் ஓடிடி தளங்களும் பல படத்தை தங்களின் தளத்தில் குவித்து வருகிறது. இதில் படங்கள் குவிந்து கிடப்பதால், எந்த படத்தை பார்ப்பது என்ற குழப்பம் வருகிறது. அதை தெளிவுப்படுத்தத்தான் இந்த செய்தி, உங்களுக்கு கிரைம் திரில்லர் படங்கள் பிடிக்கும் என்றால் முதல் இந்த படங்களை பாருங்க.

Silenced: 2011ம் ஆண்டு வெளியான ஒரு கொரியத் திரைப்படம் தான் Silenced. காது கேளாதோர் பள்ளியில் உள்ள மாணவிகள் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப் படுகின்றனர். இந்த விஷயத்தை வெளியில் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக அந்த மாணவிகள் பல கொடூரமான துன்புறுத்தல்களை சந்திக்கிறார்கள். இந்த காது கேளாதோர் பள்ளியில் நடக்கும் கொடுமை குறித்து அந்த மாணவர்களை ஹீரோ காப்பாற்றுவதுதான் படத்தின். படு மோசனமான தாக்குதல் காட்சிகள் கொண்ட இத்திரைப்படம் அமேசான் பிரைமில் இருக்கிறது.
Gone Girl: 2014ம் ஆண்டு வெளியான ஆங்கில திரைப்படம் தான் Gone Girl இந்த படம் அந்த ஆண்டு அதிகமான வசூலை அள்ளியத் திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த படத்தில் அனைவரின் கண் படும் அளவிற்கு மகிழ்ச்சியாக ஃபிளின் மற்றும் டேவிட் என்ற தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர். திடீரென இவர்களின் திருமண நாளில் ஃபிளின் மர்மமான முறையில் காணாமல் போய்விடுகிறாள். வீட்டில் இருந்த மனைவி எப்படி காணாமல் போனார், அவருக்கு என்ன நடந்தது என அடுத்தடுத்து திருப்பங்களுடன் இந்த படம் இருக்கும், இந்த படத்தை அமேசான் ஓடிடியில் பார்க்கலாம்.
ஆர்டிகள் 15: ஆயுஷ்மான் குர்ரானா மற்றும் சயானி குப்தா நடித்த திரைப்படம் ஆர்டிகள் 15. அடுத்தடுத்த பல திருப்பங்களுடன் ஒரு சுவாரசியமானத் இந்தி திரைப்படமாகும். இந்த படத்தில் உத்தரபிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உடல் கண்டு எடுக்கப்படுகிறது. அந்த பெண்களை கொடூர கொடூரமாக கற்பழித்து கொலை செய்தது தெரிய வர இந்த கொலையில்தொடர்புடையவர்கள் யார் என்பதை நீண்ட நெடிய தேடுதலுக்கு தெரியவருகிறது. இந்த படத்தில் தமிழ் ரீமேக்காக நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் வெளியானது.


Click it and Unblock the Notifications











