விஜய் என்னை அப்படிதான் கூப்பிடுவாரு.. தனுஷுக்கு என்னிடம் பிடித்தது இதுதான்.. பிரியாமணி பளிச்!
சென்னை: நடிகை ரேவதி இயக்கத்தில் பிரியாமணி நடித்துள்ள 'குட் வைஃப்' வெப்சீரிஸ் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் குறித்தும் தனுஷ் குறித்தும் அவர் பேசியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மனோஜ் பாஜ்பாய் உடன் இணைந்து பிரியாமணி நடித்த தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் மிகப்பெரிய வெற்றியை உலகளவில் பெற்றது.
முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து 2வது சீசனில் சமந்தா நெகட்டிவ் ரோலில் நடித்து மிரட்டியிருந்தார். 2 சீசன்களிலும் மனோஜ் பாஜ்பாயின் மனைவியாக பிரியாமணி தனது நடிப்பில் மிரட்டியிருந்தார். 3வது சீசனும் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் பிரபலமான Good Wife வெப்சீரிஸை அதே பெயரில் தமிழில் ரேவதி ,மறு உருவாக்கம் செய்துள்ள நிலையில், பிரியாமணி லீடு ரோலில் நடித்திருப்பது ஓடிடி ரசிகர்களுக்கு மிகவும் கனெக்ட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓடிடி ராணியான பிரியாமணி: எவரே அட்டகாடு எனும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் பிரியாமணி. தமிழில் கண்களால் கைது செய் படத்தின் மூலம் 2004ம் ஆண்டு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். பருத்தி வீரன் படத்தில் எல்லாம் பவர்ஃபுல் ரோலில் நடித்த பிரியாமணி ஓடிடியிலும் தொடர்ந்து பவர்ஃபுல் கதாபாத்திரங்களில் நடித்து ஓடிடி ராணியாகவே திகழ்கிறார். தி ஃபேமிலி மேன், ஹிஸ் ஸ்டோரி, சர்வம் சக்தி மயம் உள்ளிட்ட வெப் தொடர்களை தொடர்ந்து தற்போது குட் வைஃப் வெப்சீரிஸ் மூலம் ஜீயோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரசிகர்களை கவர காத்திருக்கிறார். வரும் ஜூலை 4ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் அந்த வெப்சீரிஸ் ஒளிபரப்பாகிறது.
ஜனநாயகனில் விஜய்யுடன்: வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்த பிரியாமணி அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மோகன்லால் உடன் நேரு படத்தில் நடித்த இவர், ஆர்ட்டிக்கிள் 370, மைதான், ஆஃபிசர் ஆன் ட்யூட்டி என பல படங்களில் நடித்து மாஸ் காட்டி வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ஜன நாயகன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குட் வைஃப் வெப்சீரிஸுக்காக அவர் லிட்டில் டாக்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் விஜய் தன்னை எப்படி அழைப்பார் என பேசியிருக்கிறார்.
முத்தழகுன்னு கூப்பிடுவாரு: ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் பார்த்தவுடனே முத்தழகு என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார். சார், நீங்க வேறையா சார் என ஜாலியாக பேசியதும், முத்து என்றே கூப்பிட ஆரம்பித்தார். அதன் பின்னர், புலி மணி என்றும் தனது இன்ஸ்டா பெயரான பில்லுமணியை மாற்றி கூப்பிட்டு வருகிறார் என்றும் விஜய் குறித்து பேசியுள்ளார்.

தனுஷுக்கு பிடித்த விஷயம்: பாலுமகேந்திரா இயக்கத்தில் தனுஷ் உடன் இணைந்து அது ஒரு கனாக்காலம் படத்தில் ஜோடியாக பிரியாமணி நடித்துள்ளார். அந்த படத்தில் தான் வெற்றிமாறன் உதவியாளராக பணியாற்றினார். அப்போதே தனுஷ், உங்களுடைய கண்கள் ரொம்பவே நல்லா நடிக்குது என பாராட்டினார் என்றும் சமீபத்தில், அவரை சந்தித்த போது கூட அதை குறிப்பிட்டார் என்றும் கூறியுள்ளார். குட் வைஃப் வெப்சீரிஸ் நிச்சயம் இந்திய ஓடிடி ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











