பாராட்டைக் குவித்த மலையாளப் படம்! குருவாயூர் அம்பல நடையில் ஓடிடியில் ரிலீஸ்- முழுவிபரம் இதோ!
கொச்சின்: ஓ.டி.டி தளங்கள் வந்த பின்னர் சினிமா ரசிகர்களுக்கு பெரும் வசதியாக மாறிவிட்டது. தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க முடியாத சூழலில் உள்ள சினிமா ரசிகர்களுக்கான வரபிரசாதமாக பார்க்கப்படும் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்காக காத்திருக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பவர்களிடம் கேட்டால், ஓ.டி.டி தளங்களில் படம் பார்க்கும்போது திரையரங்கில் கிடைக்ககூடிய அனுபவம் கிடைப்பதில்லை. படத்தைப் பார்த்து விடுகின்றோம் என்றாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆகின்றது என்கின்றார்கள். அதேபோல் ஓடிடியில் படம் பார்க்க அடாப்ட் ஆகிக் கொண்டவர்களிடம் கேட்டால், ஓ.டி.டியில் படம் பார்க்கும்போது நேரம் மிச்சமாகின்றது. பணம் சேமிக்கப்படுகின்றது. மேலும் நாம் நினைக்கும் நேரத்தில் படத்தினைப் பார்க்க முடியும். ஆனால் தியேட்டரில் சென்று படம் பார்ப்பதென்றால் திரையரங்கில் ஒளிபரப்பப்படும் நேரத்திற்குச் சென்றுதான் படம் பார்க்க முடியும் எனக் கூறுகின்றனர்.

மேலும் ஓ.டி.டியில் உள்ளுர் சினிமாவில் இருந்து உலக சினிமா வரை அனைத்து விதமான படங்களையும் பார்க்க முடியும். ஆனால் திரையரங்கில் அப்படி கிடையாது எனவும் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் பரவலான சினிமா ரசனை கொண்ட ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். குறிப்பாக மலையாள சினிமாக்களுக்கு தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ், பிரம்மயுகம், பிரமலு உள்ளிட்ட படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
குருவாயூரில் அம்பலநடையில்: அதன் அடிப்படையில் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான குருவாயூரில் அம்பலநடையில் படத்தில் படம் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள இந்த படத்தில், ப்ரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பாசில் ஜோசப் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் கதை: குருவாயூரில் நடந்த திருமண விழாவின் போது, எதிர்பாராத சம்பவங்களால், தான் திருமணம் செய்யவேண்டிய பெண்ணுக்கு பதிலாக வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள வழிவகுக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தை மைய்யப்படுத்திய கதையைச் சுற்றி படம் கதையாக்கப்பட்டுள்ளது. குருவாயூர் அம்பலநடையில் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு குடும்ப-நகைச்சுவை படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் விபின் தாஸ். இவர் ஏற்கனவே தனது முந்தைய படைப்பான 'ஜெய ஜெய ஜெய ஹே' மூலம் புகழ்பெற்ற இயக்குநராக மலையாள சினிமாவில் பார்க்கப்படுகின்றார். ப்ரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பாசில் ஜோசப் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு தீபு பிரதீப் வசனம் எழுதியுள்ளார்.
யோகி பாபு: படத்தில் நிகிலா விமல் மற்றும் அனஸ்வர ராஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். யோகி பாபு காமெடிக்கு கேரண்டி கொடுத்துள்ளார் என்றே கூற வேண்டும். நீரஜ் ரேவி ஒளிப்பதிவு படம் ரிலீஸின்போதே பெரிதும் பாராட்டப்பட்டது. ஜான்குட்டியின் எடிட்டிங் நகைச்சுவையை சுவாரஸ்யமாக்கியுள்ளது. அங்கித் மேனனின் இசை வெகுவாக பாராட்டப் பட்டது. இப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் பிருத்விராஜின் பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் E4 என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படம் கடந்த மே 16ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில் படம் இன்று அதாவது ஜூன் 27ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











