OTT: ரிலீஸாகி 2 வாரம் கூட ஆகல.. அதுக்குள்ள ஓடிடிக்கு ஓடிவந்த ஜி.வி. பிரகாஷ் படம்.. அப்புறம் எப்படி?

சென்னை: புதிய படங்கள் தென்னிந்தியாவில் வெளியாகி நான்கு வாரங்களில் ஓடிடியில் வெளியாவது சினிமாவுக்கு பிரச்சனை தான் என ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி வெளியான ரெபல் திரைப்படம் இரண்டு வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வார வாரம் ஜி.வி. பிரகாஷ் படங்கள் தியேட்டரில் வெளியாகி வரும் நிலையில் நேற்று நடைபெற்ற டியர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அதற்கான காரணத்தையும் ஜி.வி. பிரகாஷ் கூறியிருந்தார்.

GV Prakash and Mamitha Baiju s Rebel released on OTT within 2 weeks

இந்நிலையில் தற்போது, வாரம் வாரம் ஓடிடியிலும் ஜி.வி. பிரகாஷ் படம் வந்துவிடும் போல தெரிகிறது என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

பிரேமலுவை ஓவர் டேக் செய்த ரெபல்: மமிதா பைஜு நடிப்பில் மலையாளத்தில் வெளியான பிரேம் முதல் திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகி 100 கோடி வசூல் ஈட்டியது. அந்த படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதற்கு முன்னதாக மமிதா பைஜுவின் தரிசனத்தை இன்று ஓடிடியில் பார்த்து விடுங்கள் என ரெபல் படம் முந்திக் கொண்டது.

இரண்டு வாரங்களில் ஓடிடியில்: அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், மமிதா பைஜு நடிப்பில் வெளியான ரெபல் திரைப்படம் இரண்டு வாரங்களில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக புதிய படங்கள் வெளியானால் நான்கு வாரத்தில் தான் ஓடிடியில் வெளியாகும். ஆனால், ஜி.வி. பிரகாஷ் தியேட்டரில் சம்பாதிக்க முடியாது என தெரிந்து கொண்டு ஓடிடியில் 2 வாரங்களை படத்தை விற்று விட்டாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

தியேட்டரில் கள்வன்: இந்த வாரம் பி.வி. சங்கர் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா மற்றும் கேபிஒய் தீனா நடிப்பில் உருவான கள்வன் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வழக்கம்போல இந்த படத்துக்கும் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அடுத்த வாரம் டியர்: மேலும், ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள டியர் திரைப்படம் அடுத்த வாரம் ஏப்ரல் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. மணிகண்டன் நடித்து வெளியான குட் நைட் படத்தின் மையக்கருவான குறட்டை விடுவதே இந்தப் படத்தின் கதை. குட் நைட் படத்தில் ஹீரோ மணிகண்டன் குறட்டை விடுவார். இந்தப் படத்தில் ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை விடுகிறார்.

GV Prakash and Mamitha Baiju s Rebel released on OTT within 2 weeks

இப்படி வந்தால் எப்படி பாஸ்?: புதிய படங்கள் தியேட்டருக்கு நான்கு வாரங்களில் வந்துவிடுவதால் தான் யாருமே தியேட்டருக்கு செல்லாமல் ஓடிடிக்கு அந்த காசை வைத்து ஒரு வருஷத்துக்கு ரீசார்ஜ் செய்து குடும்பத்துடன் வீட்டிலேயே பார்த்து ரசித்து வருகின்றனர். ஒரு சிலர், நான்கு வாரங்கள் வெயிட் பண்ண முடியாது என படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்து வருகின்றனர். தற்போது இரண்டு வாரத்திலேயே படம் ஓடிடியில் வெளியானால் தியேட்டருக்கு ரசிகர்கள் செல்ல மாட்டார்கள் எனக் கூறுகின்றனர்.

எந்த ஓடிடியில்?: அந்த கதையெல்லாம் எதற்கு விடுங்க பாஸ் ரெபல் படத்தின் ஓடிடி ஃபிளாட்பார்ம் எது என சொல்லுங்க என ஆவலுடன் கேட்கும் ரசிகர்களுக்கு அமேசான் பிரைமில் ரெபல் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. ஜி.வி. பிரகாஷ் மற்றும் மமிதா பைஜுவின் ரொமான்ஸ் மற்றும் தமிழர்கள் மற்றும் மலையாளிகள் இடையே நடந்த உண்மையான சண்டை கதையை பார்க்க தயாராகுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X