ஓடிடியில் ரிலீஸாகும் ஜிவி பிரகாஷின் ஐங்கரன்.. வெளியானது ரிலீஸ் தேதி!

சென்னை : அசுரன், சூரரைப்போற்று என மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களுக்கு இசை அமைத்து தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.

இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவர் இப்பொழுது கைநிறைய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஈட்டி படத்தை அடுத்து இயக்குனர் ரவி அரசு இயக்கி உள்ள ஐங்கரன் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியது. இப்பொழுது இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகிறது.

பக்கபலமாக

பக்கபலமாக

தமிழ் சினிமாவில் தனித்துவமான இசை அமைப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷ் குமாரின் அசுரத்தனமான இசையில் சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று மற்றும் அசுரன் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பக்கபலமாகவும் அமைந்தது.

சூர்யாவின் வாடிவாசல்

சூர்யாவின் வாடிவாசல்

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ் கை நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் தனுஷின் மாறன் மற்றும் சூர்யாவின் வாடிவாசல் ஆகிய படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் ரவி அரசு

இயக்குனர் ரவி அரசு

ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் என வரிசையாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்க இதில் ஐங்கரன் இப்படத்தை ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இயக்கி உள்ளார். நடிகை மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.சென்ற ஆண்டே அனைத்து கட்டப் பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்தது. இருப்பினும் கொரோனா பரவியதால் ரிலீஸாகாமல் கிடப்பில் போடப்பட்டது.

சோனி லைவ் ஓடிடி தளத்தில்

சோனி லைவ் ஓடிடி தளத்தில்

இந்த நிலையில் ஐங்கரன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஐயங்கரன் திரைப்படம் ரிலீசாகிறது. இதுவரை பல காமெடி படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜிவி பிரகாஷுக்கு இந்தப்படம் ஆக்சன் ஹீரோ அவதாரத்தை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இப்படத்தை காமன்மேன் ப்ரசன்ஸ் பி.கணேஷ் தயாரித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X