OTT Releases this week: ஓடிடி ரிலீஸ்... இந்த வார திரைப்படங்கள்!

சென்னை: ஓடிடி தளங்களின் வருகையினால் திரையரங்குகளில் வெளியாகும் சில படங்களும் கூட, உடனடியாக ஆன்லைன் தளங்களில் வெளியாகிவிடுகின்றன. படங்கள் மட்டுமில்லாமல் அத்துடன் சேர்த்து, பல இணையத் தொடர்களும் வெளியாகின்றன.

அந்த வகையில் தியேட்டரில் வெளியாகும் படங்களை வாரா வாரம் ஓடிடியில் ஏராளமான படங்கள் வெளியாக உள்ளன. இவற்றை இந்த செய்தியில் பார்க்கலாம்.

OTT OTT Release mirzapur

கருடன்: நகைச்சுவை நடிகரான சூரி நடிப்பில் வெளிவந்த கருடன் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளது. இந்த படம் மே 31ஆம் திரையரங்குகளில் வெளியான நிலையில், ஜூலை 3ந் தேதி Amazon prime வீடியோ OTT தளத்தில் வெளியாகி உள்ளது. திரையரங்கில் இந்த படத்தை தவறவிட்டவர்கள் ஓடிடியில் பார்க்கலாம்.

OTT OTT Release mirzapur

ஹரா: தாதா 87,பவுடர் படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள படம் ஹரா. இந்தப் படத்தின் மூலம் 14 வருடங்களுக்குப் பிறகு மோகன் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அனுமோல், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு லியாண்டர் லீ மார்டி இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஜூன் 7ந் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், இப்படம் ஜூலை 5ந் தேதி தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது.

OTT OTT Release mirzapur

ஹிட் லிஸ்ட்: கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் சரத்குமார், விஜய் கனிஷ்கா நடிப்பில் உருவான திரைப்படம் ஹிட் லிஸ்ட். சூர்யா கதிர், கே.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இப்படத்தில், விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த மாதம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் ஜூலை 9 முதல் ஆஹா தளத்தில் வெளியாக உள்ளது.

OTT OTT Release mirzapur

மார்கெட் மஹாலக்ஷ்மி(தெலுங்கு): குறைந்த பட்ஜெட்டில் தெலுங்கில் எடுக்கப்பட்ட திரைப்படம் மார்கெட் மஹாலக்ஷ்மி. ஏப்ரல் மாதம் தியேட்டரில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டது. இப்படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா ஓடிடி தளம் வாங்கி உள்ள நிலையில், இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இப்படத்தில், பிரபல நடிகரான பரவதீசம் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், இது அவரது மறுபிரவேசம் படம். இந்தப் படத்தில் பிரணிகா அன்விகா கதாநாயகியாகவும் நடித்திருந்தார். காய்கறி விற்பவரிடம் வீழ்ந்து பெற்றோருக்கு எதிராக நடக்கும் சாப்ட்வேர் இன்ஜினியரைப் பற்றிய படம்.

OTT OTT Release mirzapur

மிர்சாபூர்(வெப்தொடர்): மிர்சாபூர் இந்தி வெப் சீரிஸின் சீசன் 3, இந்த வாரம் அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.இந்தியில் இதுவரை இரண்டு சீசன்களாக வெளியான மிர்சாபூர் வெப் தொடருக்கு ஓடிடி ரசிகர்கள் ரசித்து பார்த்தனர். இதில், பங்கஜ் திரிபாதியின் நடிப்புக்காகவே இந்த சீரிஸை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்த்தனர். குர்மீத் சிங், ஆனந்த் ஐயர் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள மிர்சாபூர் சீசன் 3ல், பங்கஜ் திரிபாதியுடன் அலி ஃபசல், ஸ்வேதா த்ரிபாதி ஷர்மா, விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 2 சீசன்களை போல, மூன்றாவது சீசனும் ஆக்ஷன் ப்ளஸ் கேங்ஸ்டர் ஜானரில் மிரட்டியுள்ளதாக ஓடிடி ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

OTT OTT Release mirzapur

மலையாளி ஃப்ரம் இந்தியா: நிவின் பாலி, டிஜோ ஜோஸ் ஆண்டனி, அனஸ்வரா ராஜன் உள்ளிட்ட பலர் நடித்த மலையாளி ஃப்ரம் இந்தியா திரைப்படம் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. காமெடி ஜானரில் உருவான இப்படம் திரையரங்குகளில் சூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து இப்படம் இந்த வாரம் சோனி லிவ் தளத்தில் வெளியாகி உள்ளது.

OTT OTT Release mirzapur

காட்ஸில்லா அண்ட் காங்: கடந்த 2021ம் ஆண்டு காட்ஸில்லாவும் கிங்காங்கும் படம் வெளியான நிலையில், அதன் 2ம் பாகமாகவே 'காட்ஸில்லா அண்ட் காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம்' படம் மார்ச் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 1135 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்த காட்ஸில்லா அண்ட் காங் படம் வேறலெவல் ஆக்‌ஷன் ட்ரீட்டாக குழந்தைகள் கண்டு ரசித்தனர். இத்திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X