நயன்தாரா திருமணம் போலவே..ஹன்சிகா திருமண ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்!
சென்னை : ஹன்சிகாவின் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எங்கேயும் எப்போதும் காதல் படத்தில் கொழுக்கு மொழுக்குனு இருந்த ஹன்சிகாவை பார்த்ததும் மொத்த தமிழ் ரசிகர்களும் அவுட்டாகிவிட்டனர்.
யாருடா இந்த பொண்ணு சும்மா கும்முனு இருங்காங்களே என்று சின்ன குஷ்பூ என பெயர் வைத்து அழகே...அழேகே அழகின் அழகே நீயடி என கவிதைபாட ஆரம்பித்துவிட்டனர்.

ஹன்சிகா
நம்ம ஊருக்கு வந்த சின்ன குஷ்பு என பெயர் எடுத்த ஹன்சிகா உதயநிதியுடன் ஒருகல் ஒருகண்ணாடி, தனுஷூடன் மாப்பிள்ளை, விஜய்யுடன் வேலாயுதம், சிம்புவுடன் வாலு உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். சிம்புவுடன் வாலு படத்தில் நடிக்கும் போது அவரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. வழக்கமாக சிம்பு யாருடன் இணைந்து நடித்தாலும் இதே கிசுகிசுத்தான் வரும் என்பதால் ரசிகர்கள் கண்டு கொள்ளவில்லை.

ஜெய்ப்பூர் கோட்டையில்
நடிகை ஹன்சிகா தனது நீண்ட நாள் நண்பரான சோஹைல் கதுரியா என்பவரை டிசம்பர் 4ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக புகழ்பெற்ற 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனை தயாராகி வருகிறது. திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக அதிக பொருட்செலவில் நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

ஈபிள் டவர் முன்பு
இருவரும் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலுள்ள ஈபிள் டவர் முன்பு, தங்களது காதலை உறுதி செய்துள்ளனர். 'மேரி மீ' என்ற கேப்ஷனுடன் ஆர்ட்டின் நடுவில் இருக்கும் ஹன்சிகா மற்றும் சோஹைல் கதூரியா க்யூட்டாக ரொமான்ஸ் செய்து, தங்கள் காதலை அனைவருக்கும் தெரியப்படுத்தி இருந்தனர்.

பிரபல ஓடிடி நிறுவனம்
இந்நிலையில், கோலாகலமாக நடக்கவிருக்கும் ஹன்சிகா மோத்வானியின் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளம் பெரும் தொகை கொடுத்து கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.


Click it and Unblock the Notifications











