பேப்பர், பேனா இருக்குன்னு எதுவேணா எழுதுவீங்களா.. எக்ஸ் காதல்.. திருமண சர்ச்சை.. மனம் திறந்த ஹன்சிகா!

சென்னை: நடிகை ஹன்சிகா கடந்த டிசம்பர் 4ம் தேதி தொழிலதிபர் சோஹேல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், வரும் பிப்ரவரி 10ம் தேதி அவரது திருமண வீடியோ டாக்குமென்டரியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

ஹன்சிகா லவ் ஷாதி டிராமா எனும் பெயரில் உருவாகி உள்ள அந்த திருமண ஆவணப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.

அதில், தனது எக்ஸ் காதல் குறித்தும், திருமணத்தின் போது ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்தும் ஹன்சிகா மனம் திறந்து பேசி உள்ளார்.

ஹன்சிகா திருமணம்

ஹன்சிகா திருமணம்

நடிகை ஹன்சிகாவின் திருமணம் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா அரண்மனையில் தொழிலதிபரும் ஹன்சிகாவின் நெருங்கிய நண்பருமான சோஹேல் கத்தூரியாவுடன் நடைபெற்றது. திருமண வீடியோவை ஆவணப்படமாக எடுத்து பெரும் தொகைக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வியாபாரம் செய்துள்ளார் ஹன்சிகா.

பிப்ரவரி 10

பிப்ரவரி 10

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் பிப்ரவரி 10ம் தேதி ஹன்சிகாவின் திருமண ஆவணப்படம் வெளியாகிறது. அதுதொடர்பான ட்ரெய்லர் இன்று வெளியானது. அதில், கணவர் சோஹேல் கத்தூரியாவை திருமணம் செய்யும் அற்புத காட்சிகள் மற்றும் திருமணம் தொடர்பான சர்ச்சைகள், முன்னாள் காதல் பற்றிய ட்ரோல்கள் உள்ளிட்ட பலவற்றை வெளிப்படையாக பேசி உள்ளார் ஹன்சிகா.

சிம்புவுடன் காதல்

சிம்புவுடன் காதல்


நடிகை ஹன்சிகாவுக்கு நடிகர் சிம்புவுக்கும் வாலு படத்தில் நடிக்கும் போது காதல் ஏற்பட்டது. ஆனால், அந்த காதல் ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை. நடிகர் சிம்புவை பிரேக்கப் செய்து விட்டு சில ஆண்டுகள் சினிமாவில் நடிப்பதையே தவிர்த்தார் ஹன்சிகா. மேலும், தனது உடல் எடையையும் வொர்க்கவுட் செய்து கணிசமாக குறைத்தார்.

பேனாவும் பேப்பரும் இருக்குன்னு

பேனாவும் பேப்பரும் இருக்குன்னு

லவ் ஷாதி டிராமா என தனது திருமண ஆவணப்படத்திற்கு பெயர் வைத்த நிலையில், முன்னாள் காதல் குறித்தும், தனது கணவருக்கு நடந்த முதல் திருமணம் குறித்தும் மனம் திறந்து பேசிய ஹன்சிகா ஒரு கட்டத்தில் கண் கலங்கி பேப்பரும் பேனாவும் இருக்குன்னு கண்டபடி எழுதி என் வாழ்க்கையை காலி பண்ண சிலர் பார்க்குறாங்க என்கிற குற்றச்சாட்டையும் வைத்து டிராமா டைட்டிலுக்குத் தேவையான விஷயங்களையும் வைத்திருக்கிறார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே சூழ 400 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் ராஜா வீட்டு திருமணம் போல நடிகை ஹன்சிகா திருமணம் நடைபெற்ற நிலையில், மெஹந்தி, ஹல்தி, சங்கீத் மற்றும் திருமண வைபவம் உள்ளிட்ட விஷயங்கள் எப்படி நடந்துள்ளது என்பதை அறியவும் யாரெல்லாம் சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர் என்பதை காணவும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த வெப்சீரிஸை காண காத்திருக்கின்றனர். தமிழில் கடைசியாக ஹன்சிகா நடித்த மஹா திரைப்படத்தில் சிம்பு ஸ்பெஷல் கேமியோவாக நடித்திருந்தார். அடுத்ததாக ரவுடி பேபி படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X