ஓடிடி ரசிகர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்.. HBO உடன் கைகோர்த்த அமேசான் பிரைம்.. அதெல்லாம் வரப் போகுதாம்!

சென்னை: HBO Max உடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒப்பந்தம் போட்ட நிலையில் தான் அகில உலகையே திரும்பி பார்க்க வைத்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் டிஸ்னி ரசிகர்களின் பார்வைக்கு எந்தவொரு சென்சாரும் இன்றி கிடைத்தது.

இந்நிலையில், தற்போது அதே HBO Max உடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தில் அமேசான் பிரைம் நிறுவனம் தற்போது கையெழுத்திட்டு இருக்கிறது.

ஓடிடி ரசிகர்களை ஒட்டுமொத்தமாக தங்கள் பக்கம் ஈர்க்க அமேசான் பிரைம் நிறுவனம் தொடர்ந்து பல விஷயங்களை செய்து வரும் நிலையில், இந்த புதிய ஒப்பந்தம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

அசத்தும் அமேசான் ஓடிடி

அசத்தும் அமேசான் ஓடிடி

ஜெஃப் பெசாஸ் தலைமையில் ரன் ஆகி வரும் அமேசான் நிறுவனத்தின் ஓடிடி தளமான அமேசான் பிரைம் உலகளவில் நெட்பிளிக்ஸிற்கு அடுத்தபடியாக ரசிகர்களை கொண்டு கெத்துக் காட்டி வருகிறது. இந்தியாவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு அடுத்தபடியாக அதிக சந்தாதாரர்களை இந்த ஓடிடி நிறுவனம் கொண்டிருக்கிறது. பிராந்திய மொழிகளில் பல படங்களையும், தொடர்களையும் கொடுத்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. விலையும் குறைவு என்பதால் பலரும் இந்த ஓடிடியை சப்ஸ்கிரைப் செய்து வருகின்றனர்.

ஜேம்ஸ் பாண்ட் படங்கள்

ஜேம்ஸ் பாண்ட் படங்கள்

சமீபத்தில், அமேசான் நிறுவனர்ஜெஃப் பெசாஸ் எம்ஜிஎம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ஜேம்ஸ் பாண்டின் 25 படங்களையும் ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 9000 கோடிகள் செலவு செய்து வாங்கி தனது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார். உலகில் எந்த ரசிகர்கள் ஜேம்ஸ் பாண்ட் படங்களை பார்க்க வேண்டுமானாலும், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தை சப்ஸ்கிரைப் செய்தால் போதும் என்பதால், மிகப்பெரிய லாபத்தை அதன் மூலம் அடைந்து வருகிறது.

ஹெச்பிஓவுடன் ஒப்பந்தம்

ஹெச்பிஓவுடன் ஒப்பந்தம்

கேம் ஆஃப் த்ரோன்ஸ் உள்ளிட்ட உலகின் பிரம்மாண்ட தொடர்களை தயாரித்து வெளியிட்ட ஹெச்பிஓ மேக்ஸ் உடன் தற்போது அமேசான் பிரைம் மிகப்பெரிய ஒப்பந்தத்தை பல கோடிகளுக்கு செய்திருக்கிறது. கிட்டத்தட்ட11 வெப் தொடர்கள் மற்றும் 10 படங்கள் அப்படியே அமேசான் பிரைமில் வெளியாக போகிறதாம். எம்மி விருதுக்கு தேர்வான The Flight Attendant, டிசி சூப்பர் ஹீரோஸ் சீரிஸ் The Peacemaker உள்ளிட்ட பல பிரபல வெப்சீரிஸ்களும், படங்களும் அமேசான் ரசிகர்களின் பார்வைக்கு விரைவில் வரப் போகின்றன.

The Sex Lives of College Girls

The Sex Lives of College Girls

HBO Max படைப்புகள் என்றாலே ஓவர் ஆபாசக் காட்சிகள் கொண்டவையாகவே இருக்கும். நெட்பிளிக்ஸுக்கு போட்டிப் போடும் விதமாக The Sex Lives of College Girls, Sex and the City, Gossip Girls, Original Sin, ஜான் சினாவின் And Just like that உள்ளிட்ட தொடர்களும் அமேசான் ரசிகர்களை உற்சாகப்படுத்த விரைவில் வரப் போவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆக்வாமேன்:கிங் ஆஃப் அட்லாண்டிஸ் படமும் அமேசானில் வெளியாக காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X