நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஹரிஷ் கல்யாணின் "ஓ மணப்பெண்ணே".. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை : நடிகர் ஹரிஷ் கல்யாண் இப்பொழுது பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஓ மணப்பெண்ணே

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் மாபெரும் ஹிட்டடித்த பெல்லி சூபுளு தமிழில் ஓ மணப்பெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

திரையில் வெளியாகும் என காத்துக் கொண்டிருந்த சூழலில் இப்பொழுது இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

ஓ மணப்பெண்ணே

ஓ மணப்பெண்ணே

தொடர்ந்து காதல் திரைப்படங்களில் நடித்து பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் இப்பொழுது நடித்துள்ள திரைப்படம் ஓ மணப்பெண்ணே முதல் முறையாக பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது

பெல்லி சூபுளு

பெல்லி சூபுளு

முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கப்பட்ட இப்படம் பிரபல தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக் ஆகும். தென்னிந்தியாவின் ஐகானாக திகழ்ந்து வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான பெல்லி சூபுளு அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் ஓ மணப்பெண்ணே. இப்படத்தை தமிழில் கார்த்திக் சந்தர் இயக்கி உள்ளார்.

Recommended Video

OTT னா ஒட்டி ஒட்டி பாப்பாங்க நமக்கு தியேட்டர் தான் முக்கியம் | Hiphop Thamizha | Filmibeat Tamil
நேரடியாக ஓடிடியில்

நேரடியாக ஓடிடியில்

திகட்டாத காதல் திரைப்படமாக வெளியாகி உள்ள ஓ மணப்பெண்ணே திரையரங்குகளில் வெளியாகும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இப்படத்தை இயக்கி இருக்க விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிருபாகரன் படத்தொகுப்பு செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாரான இப்படம் கொரானா காரணமாக நீண்ட நாளாக வெளியீட்டிற்கு காத்திருந்தது . தற்போது நிலைமை சரியாகியுள்ளதால் இப்படம் திரையரங்கில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X