ஹீரோ அவதாரம் எடுத்த ஹரிஷ் உத்தமன்.. அஷ்வமித்ராவில் என்னம்மா நடிச்சிருக்காரு மனுஷன்!

சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் வில்லன் மற்றும் நெகட்டிவ் ரோல்களில் நடித்து வந்த நடிகர் ஹரிஷ் உத்தமன் அஷ்வமித்ரா எனும் சுதேசி படத்தில் ஹீரோவாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

2010ம் ஆண்டு 'தா' எனும் தமிழ் படத்தில் நாயகனாக அறிமுகமான ஹரிஷ் உத்தமன் அதன் பிறகு பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தார்.

Harish Uthaman’s Ashwamithra will heal your heart!

விஷாலின் பாண்டியநாடு, ஆர்யாவின் மீகாமன், பிசாசு, ஜெயம் ரவியின் தனி ஒருவன், தனுஷின் தொடரி, விஜய்யின் பைரவா மற்றும் விஜய்சேதுபதியின் றெக்க உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி உள்ளார்.

இந்நிலையில், பெண் இயக்குநர் எர்த்லிங் கவுசல்யா இயக்கத்தில் உருவான அஷ்வமித்ரா படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை அள்ளி உள்ளார்.

இந்த திரைப்படம் மாடத்தி உள்ளிட்ட படங்கள் வெளியான Nee Stream எனும் ஒடிடி தளத்தில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி வெளியானது.

Harish Uthaman’s Ashwamithra will heal your heart!

அப்பாவை இழந்த அதிர்ச்சியில் ஆறு வயது சிறுமி மித்ராவின் பேச்சு இழக்க நேரிட அவருக்கு பேச்சு பயிற்சி தந்து மீண்டும் பேச வைக்கும் அருண் என்கிற கதாபாத்திரத்தில் ஹரிஷ் உத்தமன் நடித்துள்ளார். மித்ரா கதாபாத்திரத்தில் தரீதா எனும் குழந்தை நட்சத்திரம் நடித்துள்ள இந்த படம் Independent Film ஆக வெளியாகி இருக்கிறது.

பெரிய நடிகர்களின் படங்களை ஒடிடி தளங்களில் கண்டு ரசிக்கும் ரசிகர்கள் இதுபோன்ற நல்ல சுதேசி படங்களையும் கண்டு ரசித்தால், மேலும், பல நல்ல படைப்புகள் தமிழ் சினிமாவில் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X